தஞ்சை அருள்நெறித் திருக்கூட்டத்தினர் தஞ்சைப்பெரிய கோயில் அம்பலவாணர் சன்னதியில் தஞ்சாவூர் நகரச் சைவ சமயப் பேரமைப்புகளை ஒருங்கிணைத்து திருமுறைச் சான்றோர் வாழ்வும் வாக்கும் என்னும் தொடர் சொற்பொழிவினை அறிஞர் பலரைக் கொண்டு 16.6.1997 முதல் 13.7.1997 வரை 28 நாட்கள் நடத்தினர். அவ்வுரைகள் தேவாரமணி சிவ.திருச்சிற்றம்பலம் அவர்களால் தொகுக்கப்பெற்று பன்னிரு திருமுறைச் சான்றோர் வாழ்வியல் (தஞ்சை அருள்நெறித் திருக்கூட்டம், சிவகமலாம்பிகை இல்லம், 435, முல்லை, புதிய வீட்டு வசதிப்பிரிவு, தஞ்சாவூர் 613 005, 1997) என்னும் தலைப்பில் நூல் வடிவம் பெற்றது.
அந்நூலின் வெளியீட்டுக்குழுவில் உறுப்பினராகச் செயல்படும் நல்வாய்ப்பினையும், அதில் பெண்ணாடம் திரு அ.வடிவேலனார் அவர்களின் பொழிவினைத் தொகுக்கும் வாய்ப்பினையும் பெற்றது என் நினைவில் நிற்கும் அனுபவங்களில் ஒன்று.
-------------------------------------------------------------------------------------------
நன்றி: பன்னிரு திருமுறைச் சான்றோர் வாழ்வியல்
தொகுப்பாசிரியர்: தேவாரமணி சிவ.திருச்சிற்றம்பலம்
-------------------------------------------------------------------------------------------







No comments:
Post a Comment