மகாமகத்தின்போது காவிரியாற்றில் தீர்த்தவாரி காணும் சார்ங்கபாணி கோயில், ராமசுவாமி கோயில், ராஜகோபால சுவாமி கோயில், சக்கரபாணி கோயில், வராகப்பெருமாள் கோயில் ஆகிய ஐந்து வைணவக்கோயில்களில் நிறைவாக சக்கரபாணி கோயில் செல்வோம், வாருங்கள்.
தீர்த்தவாரி காணும் 12 சைவக்கோயில்களுக்கும், ஐந்து வைணவக் கோயில்களுக்கும் கட்டுரை வழியாக என்னுடன் பயணித்த நண்பர்கள் அனைவருக்கும் நன்றி.
கும்பகோணத்தில் காவிரியாற்றுக்குச் சற்றுத் தெற்கே உள்ள இக் கோயில் திருமழிசையாழ்வாரால் பாடப்பெற்றது.சக்கரராஜனுக்கு என்று அமைந்துள்ள ஒரே கோயில் என்னும் பெருமையுடையது இக்கோயில். சக்கரத்தினைக் கையில் கொண்டிருப்பதால் சக்கரபாணி என்று அழைக்கப்படுகிறார். தாயார் விஜயவல்லித்தாயார். மூலவருக்கு எதிரே கருடாழ்வார் உள்ளார்.
|
சக்கரபாணி கோயில் தாயார் சன்னதி |
சக்கரபாணி கோயில் மற்றொரு வாயில் |
-----------------------------------------------------------------------------------------------------
காவிரி ஆற்றில் தீர்த்தவாரி கொடுக்கும் வைணவக்கோயில்கள்
- சார்ங்கபாணி கோயில்
- ராமசாமி கோயில்
- ராஜகோபாலசுவாமி கோயில்
- சக்கரபாணி கோயில் (இப்பதிவில் நாம் பார்க்கும் கோயில்)
- வராகப்பெருமாள் கோயில்
-----------------------------------------------------------------------------------------------------
2016 மகாமக மலர் வெளியீடு
சரஸ்வதி மகால் நூலகம் சார்பில் நேற்று (10.2.2016) மகாமகம் சிறப்பு மலர் வெளியிடப்பட்டுள்ளது. 260 பக்கங்கள் கொண்ட இம்மலரில் மகாமகம் குறித்த அடிப்படைத் தகவல்கள், திருத்தலங்கள் குறித்த 50 கட்டுரைகள் இடம் பெற்றுள்ளன. இம்மலரைப் பற்றி மற்றொரு பதிவில் பார்ப்போம்.
12.2.2016 அன்று மேம்படுத்தப்பட்டது.
- காசி விஸ்வநாதர் கோயில் (நவ கன்னியர் அருள் பாலிக்கும் இடம்)
- கும்பேஸ்வரர் கோயில் (அமிர்தகலசத்திலிருந்து குடமூக்கு தங்கிய இடம்)
- நாகேஸ்வரர் கோயில் (வில்வம் விழுந்த இடம்)
- சோமேஸ்வரர் கோயில் (உறி விழுந்த இடம்)
- கோடீஸ்வரர் கோயில், கொட்டையூர் (அமிர்தத் துளிகள் விழுந்த இடம்)
- காளஹஸ்தீஸ்வரர் கோயில் (சந்தனம் விழுந்த இடம்)
- கௌதமேஸ்வரர் கோயில் (பூணூல் விழுந்த இடம்)
- அமிர்தகலசநாதர் கோயில், சாக்கோட்டை (கலச நடுப்பாகம் விழுந்த இடம்)
- பாணபுரீஸ்வரர் கோயில் (வேடுவ உருவில் சிவன், பாணம் எய்த இடம்)
- அபிமுகேஸ்வரர் கோயில் (தேங்காய் விழுந்த இடம்)
- கம்பட்ட விஸ்வநாதர் கோயில் (புஷ்பங்கள் விழுந்த இடம்)
- ஏகாம்பரேஸ்வரர் கோயில் (மற்ற உதிரி பாகங்கள் விழுந்த இடம்)
தயாரான நிலையில் மகாமகக்குளம், புகைப்படம் : ஜ.பாரத் |
சரஸ்வதி மகால் நூலகம் சார்பில் நேற்று (10.2.2016) மகாமகம் சிறப்பு மலர் வெளியிடப்பட்டுள்ளது. 260 பக்கங்கள் கொண்ட இம்மலரில் மகாமகம் குறித்த அடிப்படைத் தகவல்கள், திருத்தலங்கள் குறித்த 50 கட்டுரைகள் இடம் பெற்றுள்ளன. இம்மலரைப் பற்றி மற்றொரு பதிவில் பார்ப்போம்.
12.2.2016 அன்று மேம்படுத்தப்பட்டது.
காலையில் இனிய தரிசனம்..
ReplyDeleteவாழ்க நலம்..
அழகிய படங்களுடன் தகவல் தந்தமைக்கு நன்றி. எத்தனையோ முறை கும்பகோணம் சென்று இருந்தும், அங்குள்ள கோயில்களுக்கு சென்றது கிடையாது. மகாமகத்திற்குப் பிறகு செல்லலாம் என்று இருக்கிறேன். ஒரு சின்ன சந்தேகம். சக்ரபாணி, சாரங்கபாணி இரண்டும் ஒன்றா? அல்லது வெவ்வேறு கோயில்களா?
ReplyDeleteசக்கரபாணி, சார்ங்கபாணி வெவ்வேறு கோயில்கள். சாரங்கபாணி அல்ல, சார்ங்கபாணியே சரி.
Deleteவிளக்கமும் அழகிய புகைப்படங்களும் அழகு பதிவு தந்த முனைவருக்கு நன்றி
ReplyDeleteதமிழ் மணம் 2
நல்ல விளக்கம் ஐயா,, ஆம் நான் கூட நினைத்தேன் மலர் வெளியீடு பற்றி பதிவு உண்டா என்று,, அதில் தங்கள் கட்டுரை????
ReplyDeleteகிட்டத்தட்ட மூன்று மகாமகங்களுககு மேலாக, எனது பள்ளிக்காலம் முதல் என் படிப்பார்வத்தை மேம்படுத்திய நூலகமான கும்பகோணம் சிவகுருநாதன் செந்தமிழ் நூல் நிலையம் பற்றிய எனது கட்டுரை வெளியாகியுள்ளது. விரைவில் அது பற்றிய பதிவு தனியாக. ஆர்வத்திற்கு நன்றி.
ReplyDeleteஅருமையான விளக்கம் ஐயா.
ReplyDeleteதீர்த்தவாரி என்றாலேயே இப்போது நினைவுக்கு வருவது அண்மையில் திருவண்ணாமலையில் நடை பெற்ற அசம்பாவிதம் தான் . எந்தவித அசம்பாவிதமும் இல்லாமல் மகா மகம் இனிதே நிறைவு பெற வேண்டும்
ReplyDeleteபுகைப்படங்களை ரசித்தேன்.
ReplyDeleteதம +1
J.Bharath (thro email: bharathfm@gmail.com)
ReplyDeleteTank is ready. Thanks & Regards.
முனைவர் இரா.முரளீதரன் (மின்னஞ்சல் மூலமாக tumurali@gmail.com)
ReplyDeleteபாராட்டுக்கள். நல்ல பயனுள்ள பதிவு.
மகாமகத்தின் பெருமையையும் தொடர்புடைய கோவில்களையும் தங்கள் மூலம் கண்டறிந்தேன். பகிர்ந்ததற்கு நன்றி!
ReplyDeleteத ம 4
அழகான படங்களுடன் மகாமகம் குறித்த விவரங்களையும் தொடர்புடைய கோவில்களையும் உங்கள் பதிவின் மூலமாக அறிந்தேன் ஐயா... ரொம்ப நன்றி.
ReplyDelete