17 February 2016

மகாமகம் 1992 : மகாமகம் மலர் 1992

2016 மகாமகம் மலரையும், 2004 மகாமகம் மலரையும் பார்த்த நாம் 1992 மகாமகம் மலரைப் பார்ப்போம். 1992 மகாமகத்தின்போது அரசு வெளியிட்ட மகாமகம் சிறப்பு மலர், அருளாளர்களின் ஆசி, தமிழக ஆளுநர், தமிழக முதலமைச்சர் மற்றும் அமைச்சர்களின் வாழ்த்துச்செய்திகளுடன் 40க்கும் மேற்பட்ட கட்டுரைகளைக் கொண்டுள்ளது. 276 பக்கங்களைக் கொண்ட இந்நூலில் விளம்பரங்களும் காணப்படுகின்றன.

மலரின் முன் அட்டை

  • மஹாமகம்
  • குடமூக்கில் மகாமகம்
  • மாமகப்பெருவிழா
  • நவகன்னியரும் மகாமகமும்
  • குடமூக்கு ஒரு நோக்கு
  • 11 ஆண்டுகளில் மகாமகம்
  • குடந்தைக் கீழ்க்கோட்டம்
  • இரகுநாதன் எடுத்த இராமன் கோயில்
  • சார்ங்கபாணி திருக்கோயில்
  • மகாமகமா? வாருங்கள், வாருங்கள்
  • மன்னர் குல மணிவிளக்கு
  • மாசி மகம்-சில வானியல் சிந்தனைகள்
  • பழையாறைத் திருக்கோயில்கள்
  • அறவழி காட்டும் திருமடங்கள்
  • கோவிந்த தீட்சிதர்
  • தஞ்சையில் ஸ்ரீசமர்த்த ராமதாஸர்
  • பொன்னிக்கரையில் பொங்கிய கங்கை
  • ஸ்ரீசேதுபாவா ஸ்வாமிகள்
  • பாஸ்கர ராயர்
  • தமிழகத்தில் கோயில் அமைப்பு
  • சோழமாதேவி கயிலாயமுடையார் கோயில்
  • மறைந்துபோன வணிக நகரம் மதுராந்தகபுரம்
  • குடந்தைக் கீழ்க்கோட்டக் கல்வெட்டுகள்
  • ஒருமைப்பாடு செழிக்கும் தஞ்சைத்தரணி
  • தஞ்சை மாவட்டத்தில் தொல்லியல் ஆய்வு
  • கலைகளின் தாயகம் தஞ்சை
  • தஞ்சை கலைக்கூடம்
  • நடந்தாய் வாழி காவேரி
  • செப்புத்திருமேனி
  • தஞ்சை டபீர் பண்டிதர்
  • இந்தியாவின் முதல் நடமாடும் நூலகம்
  • தஞ்சைக்குப் பெருமை சேர்க்கும் சரசுவதி மகால் நூலகம்
  • புதிய பார்வையில் சார்ங்கபாணி கோயிற்கரணங்கள்
  • தண்குமரியும் தஞ்சைச்சோழரும்
  • சக்கரசாமந்தம் கல்வெட்டு
  • நீராட்டப்பெருவிழா
  • பஞ்சமுக வாத்தியமும் எழுவகை ஆடலும்
  • மகாமகத் தீர்த்தங்கள் அளிக்கும் பலன்கள் 
மலரின் பின் அட்டை

மலரின் முதல் பக்கம்
மேற்கண்ட தலைப்புகளுடன் உள்ள கட்டுரைகளும், கும்பகோணத்திலுள்ள சைவ மற்றும் வைணவக்கோயில்களைப் பற்றிய கட்டுரைகளும், புகைப்படங்களும் இம்மலரில் காணப்படுகின்றன. கோயில்களைப் பற்றிய அரிய செய்திகள் உரிய புகைப்படங்களுடன் பகிர்ந்துள்ள விதம் அருமையாக உள்ளது. ஒரு கட்டுரையில் கும்பகோணத்திலுள்ள கோயில்களின் பட்டியல் தரப்பட்டுள்ளது. துணுக்குகளாகத் தரப்பட்டுள்ள பெட்டிச் செய்திகள் நாம் அறிந்திராத நுட்பமான செய்திகளைத் தருகின்றன.

பிற மகாமக மலர்கள் : 
2016 மகாமகம் மலர் : சரசுவதி மகால் நூலகம்
2004 மகாமகம் சிறப்பு மலர்
1980 மகாமகம் மலர்

7 comments:

  1. வணக்கம்
    ஐயா
    புத்தகம் பற்றியும் அதன் உள்ளடக்கம் பற்றி சொல்லிவிட்டீர்கள் படிக்க வேண்டும் என்ற ஆசைதான்.. தொகுத்து வழங்கியமைக்கு நன்றி ஐயா த.ம 1

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  2. அருமையான பொத்தகம்
    சிறந்த அறிமுகம்
    தங்கள் பணி தொடர
    வாழ்த்துகள்!

    ReplyDelete
  3. விரிவான விளக்கம் தந்த முனைவருக்கு நன்றி
    தமிழ் மணம் 3

    ReplyDelete
  4. அருமையான தகவல்.... ஒவ்வொரு புத்தகத்திலும் இருக்கும் கட்டுரைகள் படிக்க ஆவல்..

    ReplyDelete
  5. I HAVE CONTRIBUTED ARTICLES "INDIAS FIRST MOBILE LIBRARY"
    IF ANYBODY IS INTERESTED TO VIEW THIS AND OTHER RARE BOOKS U R INVITED TO TAMIL RESEARCH CENTER 55 EAST ROAD ARULANANDANAGAR THANJAVUR WITH PRIOR INTIMATION. 944361758

    ReplyDelete
  6. அருமையான விரிவான தகவல்கள் ஐயா பகிர்வுக்கு மிக்க நன்றி

    ReplyDelete