ஆங்கில அகராதிகள் ஒவ்வோராண்டும் சிறந்த ஆங்கிலச் சொல்லாக ஒரு சொல்லை, அதன் பயன்பாட்டு அடிப்படையில் தெரிவு செய்கின்றன. 2017இன் சிறந்த ஆங்கிலச் சொற்களாக ‘யூத்க்வேக்’ (ஆக்ஸ்போர்டு அகராதி), ‘ஃபேக் நியூஸ்’ (காலின்ஸ் அகராதி), ‘ஃபெமினிசம்’ (மெரியம் வெப்ஸ்டர் அகராதி) ஆகிய சொற்கள் தேர்வு செய்யப்பட்டிருந்தன. 2018க்கான சிறந்த ஆங்கிலச்சொல்லை இவ்வகராதிகள் தற்போது தேர்ந்தெடுத்துக் கொண்டிருக்கின்றன.
ஆங்கிலத்திற்கு அடுத்தபடியாக, ஆண்டின் சிறந்த இந்தி சொல்லை 2017 முதல் தெரிவு செய்ய ஆக்ஸ்போர்டு அகராதி ஆரம்பித்தது. அவ்வகையில் 2017இன் சிறந்த இந்தி சொல்லாக ஆதார் என்ற சொல் ஆக்ஸ்போர்டு அகராதியால் தேர்ந்தெடுக்கப்பட்டு, ஜனவரி 2018இல் ஜெய்ப்பூரில் நடைபெற்ற விழாவின்போது அறிவிக்கப்பட்டது.
இறுதிச்சுற்றில் வந்த பிற இந்தி சொற்கள் நோட்பந்தி, பாகுபலி, விகாஸ், ஸ்வட்ச் மற்றும் யோகா என்பனவாகும்.
கடந்த ஆண்டு தேர்ந்தெடுத்ததன் அடிப்படையில் 2018க்கான சிறந்த இந்திச் சொல்லைத் தேர்வு செய்ய ஆக்ஸ்போர்டு அகராதி களத்தில் இறங்கியுள்ளது. நாடு முழுவதும் இந்தி பேசுவோரிடம் கடந்த 12 மாதங்களில் அதிகமான ஆர்வத்தையும், தாக்கத்தை உண்டாக்கிய சிறந்த இந்தி சொல்லைத் தேர்வு செய்ய அவ்வகராதி வேண்டுகோள் வைத்துள்ளது. அது ஒரு புதிய சொல்லாக இருக்கவேண்டிய அவசியம் இல்லை என்றும் ஏதாவது ஒரு வகையில் 2018ஆம் ஆண்டுடன் தொடர்புகொண்டிருக்கவேண்டும், உரிய சொற்களை 27 நவம்பர் 2018 முதல் 9 டிசம்பர் 2018 வரை இந்தி லிவிங் டிஸ்னரிஸ் தளத்திலோ, இந்தி டிஸ்னரி ஃபேஸ்புக் வழியாகவோ தெரிவிக்கலாம் என்றும் அவ்வகராதி கூறியுள்ளது. பெறப்படுகின்ற சொற்கள் 12 பேர் அடங்கிய குழுவால் பரிசீலிக்கப்பட்டு, ஜனவரி 2018இல் ஜெய்ப்பூரில் நடைபெறவுள்ள இலக்கியத்திருவிழாவின்போது அறிவிக்கப்படவுள்ளது.
295 மில்லியன் மக்கள் இந்தி பேசுவதாகவும், உலகில் அதிகமாகப் பேசப்படுகின்ற நான்காவது மொழி இந்தி என்றும், அதிகம் பேசப்படுகின்ற 50 மொழிகளில் இந்தியாவில் பேசப்படுகின்ற மொழிகளாக பெங்காளி (7ஆவது இடம்), பஞ்சாபி (10ஆவது இடம்), தெலுங்கு (15ஆவது இடம்), மராத்தி (19ஆவது இடம்), தமிழ் (20ஆவது இடம்), உருது (21ஆவது இடம்), குஜராத்தி (26ஆவது இடம்), கன்னடம் (32ஆவது இடம்), மலையாளம் (34ஆவது இடம்), ஒடியா (37ஆவது இடம்), போஜ்பூரி (41ஆவது இடம்), மைதிலி (44வது இடம்), சிந்தி (46ஆவது இடம்) ஆகியவை அமைவதாகவும் ஆக்ஸ்போர்டு அகராதி கூறுகிறது.
கடந்த ஆண்டு, ஆண்டிற்கான ஆக்ஸ்போர்டு இந்தி சிறந்த சொல் அறிவிக்கப்பட்டபோது நல்ல வரவேற்பு இருந்ததாகவும், எண்ணிக்கை அடிப்படையிலும் வகையின் அடிப்படையிலும் அதிகமான சொற்கள் பெறப்பட்டதாகவும், இந்தி பேசுவோரிடேயே 2018இல் அதிகமாக பயன்படுத்தப்பட்ட ஓர் இந்தி சொல்லை எதிர்பார்ப்பதாகவும் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக அச்சக நிர்வாக இயக்குநர் கூறியுள்ளார்.
ஆண்டிற்கான சிறந்த தமிழ்ச் சொல்லைத் தேர்ந்தெடுக்க ஆக்ஸ்போர்டு ஆங்கில அகராதி களத்தில் இறங்கும் நாளை எதிர்பார்க்கிறோம்.
துணை நின்றவை :
2017ஆம் ஆண்டின் சிறந்த இந்தி சொல் 'ஆதார்' - ஆக்ஸ்போர்டு ஆங்கில அகராதி அறிவிப்பு, டெய்லி ஹன்ட், 28 ஜனவரி 2018
‘Aadhaar’is Oxford’s first Hindi word of the year, The Times of India, 28 January2018
What Will Be Hindi Word OfThe Year 2018? Help Oxford Dictionaries Choose, NDTV, 30.11.2018
‘Aadhaar’is Oxford’s first Hindi word of the year, The Times of India, 28 January2018
What Will Be Hindi Word OfThe Year 2018? Help Oxford Dictionaries Choose, NDTV, 30.11.2018
https://blog.oxforddictionaries.com/2018/01/27/hindi-word-of-the-year-aadhaar/
-------------------------------------------
சோழ நாட்டில் பௌத்தம் வலைப்பூவில் இம்மாதப் பதிவு :
உரையினை யுடியூபில் கேட்க :
-------------------------------------------
10 டிசம்பர் 2018இல் மேம்படுத்தப்பட்டது.
அறியாத செய்திகள் ஐயா
ReplyDeleteஇதோ காணொலியினைக் காணச் செல்கிறேன்
நன்றி ஐயா
தமிழ் சொல்லை அறிய ஆவலுடன் உள்ளேன் ஐயா...
ReplyDeleteஅரிய விடயங்களை தருகின்றீர்கள்.
ReplyDeleteயூட்டியூப் இணைப்புக்கு சென்றேன்.
பிறகு முழுவதும் கேட்பேன்.
சிறந்த தமிழ்ச் சொல்லும் இடம் பெற்றிருக்கும் என்று எதிர் பார்த்தேன். சிறந்த ஹிந்தி வார்த்தை ஆதார் என்பது ஆச்சர்யமாக இருக்கிறது.
ReplyDeleteநிறையப் பொது அறிவுகள் திரட்டிக் கொண்டேன்.. அருமை.
ReplyDeleteஇப்படி ஒரு தேர்வு இருப்பதே உங்கள் மூலம் அறிந்தேன். நன்றி.
ReplyDeleteஇப்படி ஒன்று இருக்கிறதா?
ReplyDeleteஅருமை ஐயா
ReplyDeleteஇருபதிவுகளும் அருமை. நன்றிகன் பல
ReplyDeleteஅருமை ஐயா
ReplyDeleteஅதிகமாக உபயோகிக்கப்பட்ட சொல் எனலாம் எல்லாப் புகழும் மோடிக்கே அவரே இவற்றை அதிகம் பேசியிருப்ப்பார் அவரை எதிர்க்கும் அரசியல் வாதிகளும் எதிர்க்க வேண்டியே பேசிய சொற்களாகவுமிருக்கலாம்
ReplyDeleteநீங்க சொல்வது ரொம்பச் சரி. இந்தியாவின் மற்றப் பிரதமர்கள் அனைவரும் தமிழும், ஆங்கிலமும் மட்டும் பேசிக் கொண்டிருக்க மோதி மட்டும் ஹிந்தி பேசியதோடு அதைப் பிரபலமும் பண்ணி விட்டார். ஹிந்தியே அவரால் தானே நாட்டில் அறிமுகம் ஆகி இருக்கிறது! :)))))))
Delete