அண்மையில் விக்கிபீடியாவில் ஆசிய மாதம், வேங்கைத்திட்டம், பெண்கள் நலன் என்ற வகையில் மூன்று போட்டிகள் அறிவிக்கப்பட்டிருந்தன. அவற்றில் இரு போட்டிகளில் கலந்துகொண்டு எழுத ஆரம்பித்த நிலையில் பல வித்தியாசமான அனுபவங்களைக் காணமுடிந்தது. நண்பர்களையும் விக்கிபீடியாவில் நடைபெறுகின்ற இப்போட்டிகளில் கலந்துகொள்ள அழைக்கிறேன்.
பொதுவான விதிகளாக கொடுக்கப்பட்டுள்ள தலைப்புகளில் இருந்து புதிய கட்டுரைகள் உருவாக்கப்படவேண்டும் அல்லது
ஏற்கனவே உள்ள கட்டுரைகள் விரிவாக்கப்படவேண்டும், ஒவ்வொரு போட்டிக்கட்டுரையும் குறைந்தது
300 சொற்களையும், 6000 பைட்டுகளையும் கொண்டிருக்கவேண்டும் என்பவை இருந்தன.
ஆசிய மாத கட்டுரைப்போட்டி
: 1 நவம்பர் 2019 - 7 டிசம்பர் 2019
வேங்கைத்திட்டம்
2.0 : 10 அக்டோபர் 2019 -10 ஜனவரி 2020
பெண்கள் நலனுக்கான
விக்கி மகளிர் : 1 நவம்பர் 2019 -10 ஜனவரி 2020
புதிய கட்டுரைகளை எழுதுதல், பழைய கட்டுரைகளை மேம்படுத்துதல், தமிழ் விக்கிபீடியாவில் இடம் பெறாதவற்றை, ஆங்கில விக்கிபீடியாவில் இருந்து மொழிபெயர்த்து எழுதுதல் என்ற வகையில் பதிவுகள் பதியப்பட்டு வருகின்றன. போட்டி தொடர்பான விவரத்தை கீழே உள்ள அந்தந்த தலைப்பினைச் சொடுக்கி அறிந்துகொள்ளலாம்.
வேங்கைத்திட்டம்
உலகளாவிய தலைப்புகள், இந்தியத் தலைப்புகள், தமிழ்ச்சமூகம் பரிந்துரைத்தவை, கூகுள் பரிந்துரைத்த கட்டுரைகள் என்ற வகையில் பல கட்டுரைகள் எழுத வாய்ப்புகள் உள்ளன. முதலில் வேங்கைத்திட்டத்தில் கலந்துகொண்டு எழுத ஆரம்பித்தேன். தொடர்ந்து ஆசிய மாத கட்டுரைப்போட்டிக்கான அறிவிப்பு வெளியானது. ஆசிய மாத கட்டுரைப் போட்டிக்கான கட்டுரைகளை வேங்கைத்திட்டத்தில் சேர்த்துக்கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டது. அதன் காரணமாக ஒரே நேரத்தில் இரு போட்டிகளில் கலந்துகொண்டு எழுதும் சூழல் எழுந்தது.
வேங்கைத்திட்டம் போட்டிக்காக நெல்லூர் சோழர்கள், மைசூர் வெற்றிலை, தொண்டைமான் வம்சம், பண்டைய தமிழகத்தில் பெயர் சூட்டும் மரபுகள், பெங்களூர் பழைய மடிவாலா சோமேஸ்வரர்கோயில், டோம்லூர் சொக்கநாதசுவாமி கோயில், சுவாதி பிரமல், லீனா நாயர் உள்ளிட்ட தலைப்புகளில் பதிவுகள் ஆரம்பிக்கப்பட்டன. அடுத்து தமிழ் விக்கிபீடியாவில் இல்லாத, தென் இந்திய மாநிலங்களில் உள்ள அருங்காட்சியகம் தொடங்கி, அதனைத் தொடர்ந்து பிற அருங்காட்சியகங்களைப் பற்றிய பதிவுகள் ஆரம்பிக்கப்பட்டன. தற்போது வேங்கைத்திட்டத்தில் எழுதும் பணி தொடர்கிறது.

விக்கிப்பீடியா : வேங்கைத்திட்டம் 2.0 |
நவம்பர் இறுதி என்று முன்பு அறிவிக்கப்பட்டிருந்த ஆசிய மாத கட்டுரைப்போட்டி ஒரு வாரம் நீட்டிக்கப்பட்டு 7 டிசம்பர் 2019 அன்று நிறைவு பெற்றது. மற்ற இரு போட்டிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
ஆசிய மாதம் தொடர்பாக ஒரு நாட்டினைத் தெரிவு செய்து அங்குள்ள பண்பாடு, கலை, சமயம் என்ற நிலையிலான பதிவுகள் ஆரம்பிக்க முடிவெடுத்து, இந்தோனேசியாவில் உள்ள அருங்காட்சியகங்கள், கலைக்கூடங்கள், அரண்மனைகள், இந்து பௌத்தக் கோயில்கள் என்ற தலைப்புகளில் பதிவுகள் எழுதப்பட்டன.
விக்கிப்பீடியா : ஆசிய மாதம் |
பெண்கள் நலனுக்கான விக்கி மகளிர் 2019
இப்போட்டி 10 ஜனவரி 2020 வரை நடைபெறுகிறது. வாய்ப்பிருப்பின் இதில் கலந்துகொண்டு சில கட்டுரைகள் எழுத உத்தேசித்துள்ளேன்.
விக்கிப்பீடியா : பெண்கள் நலனுக்கான விக்கி மகளிர் 2019 |
6 ஜுலை 2014இல் தமிழ் விக்கிபீடியாவில் எழுதத் தொடங்கி, ஜனவரி 2019இல் 700 பதிவுகளை எழுதி தற்போது 900 பதிவுகளை நிறைவு செய்துள்ளேன்.
விழாக்கள்
தமிழகத்தில் கொண்டாடப்படுகின்ற பல விழாக்களைப் பற்றிய பதிவுகள் விக்கிபீடியாவில் இடம்பெற வேண்டும் என்ற நன்னோக்கில் அவ்வாறான விழாக்களைப் பற்றிய பதிவுகளைப் பதிய ஆரம்பித்தேன். அந்த வகையில் இக்காலகட்டத்தில் வாழைப்பழம் சூறைவிடும் விழா, ஆற்றுத்திருவிழா, மீன்பிடித் திருவிழா உள்ளிட்ட பல விழாக்களைப் பற்றிய செய்திகளைத் திரட்டி, உரிய மேற்கோள்களுடன் பதிந்தேன்.

களப்பணி
அரியலூர் மற்றும் பெரம்பலூர் மாவட்டங்களில் களப்பணியாக புத்தர் சிலைகளைத் தேடிச் சென்றபோது அரியலூர் மாவட்டத்தில் கங்கைகொண்ட சோழபுரத்திற்கு அருகேயுள்ள கலிங்கமேடு என்னுமிடத்தில் உள்ள சிற்பங்களைக் காணும் வாய்ப்பினைப் பெற்றேன். அங்குள்ள சிற்பங்கள் முதலாம் ராஜராஜ சோழன் மகனான இராஜேந்திர சோழனின் வெற்றியின் அடையாளமாக கலிங்க நாட்டிலிருந்து (தற்போதைய ஒடிசா மாநிலத்தின் வட பகுதி) கொண்டுவரப்பட்டவையாகும்.

அவற்றை புகைப்படம் எடுத்து, உரிய மேற்கோள்களுடன் கலிங்கச் சிற்பங்கள், செங்கமேடு என்ற தலைப்பில் ஒரு கட்டுரை ஆரம்பிக்கப்பட்டது.
முக்கிய நபர்கள்
புதுக்கோட்டையில் கணினித் தமிழ்ச்சங்கம் அக்டோபர் 2019இல் நடத்திய இணையத்தமிழ்ப் பயிற்சி முகாமில் கலந்துகொண்டபோது விக்கிபீடியா தொடர்பாக வகுப்பு எடுக்கப்பட்டது. அப்போது திரு என்னாரெஸ் பெரியார், திரு நீச்சல்காரன் ஆகியோரைக் கண்டேன். தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறையில் இணை இயக்குநராகப் பணியாற்றி வருகின்ற, வரலாற்று ஆர்வலர், தொல்லியல் ஆர்வலர், கவிஞர், சிறந்த நிர்வாகி என பன்முகங்களைக் கொண்ட திரு நா.அருள்முருகன் அவர்களைப் பற்றி நேரடியாக ஒரு பதிவினை ஆரம்பித்தேன். விக்கிபீடியாவில் ஒரு புதிய பதிவினை ஆரம்பிக்கும் முறையை முடிந்தவரை அனைவரும் புரிந்துகொள்ளும் வகையில் பகிர்ந்துகொண்டேன். பின்னர் தொடர்ந்து அவரைப் பற்றிய பதிவினை மேம்படுத்தினேன்.
அக்கட்டுரை விக்கிபீடியாவின் கொள்கைகளுக்கோ கலைக்களஞ்சியக் கொள்கைகளுக்கோ ஒவ்வாததாக இருக்கலாம் என்ற குறிப்போடு அதனை நீக்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. அப்பதிவினை மேம்படுத்தி வருகிறேன். ஆரம்பிக்கப்படுகின்ற கட்டுரைகள் நீக்கப்படாமலிருக்க முயற்சி மேற்கொள்கிறேன். இவ்வாறான முயற்சிகளுக்கு சக விக்கிபீடியர்கள் பெரிதும் துணை நிற்பதோடு, தம் கருத்துகளையும் பகிர்ந்து வருகின்றார்கள்.
புதுக்கோட்டையில் கணினித் தமிழ்ச்சங்கம் அக்டோபர் 2019இல் நடத்திய இணையத்தமிழ்ப் பயிற்சி முகாமில் கலந்துகொண்டபோது விக்கிபீடியா தொடர்பாக வகுப்பு எடுக்கப்பட்டது. அப்போது திரு என்னாரெஸ் பெரியார், திரு நீச்சல்காரன் ஆகியோரைக் கண்டேன். தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறையில் இணை இயக்குநராகப் பணியாற்றி வருகின்ற, வரலாற்று ஆர்வலர், தொல்லியல் ஆர்வலர், கவிஞர், சிறந்த நிர்வாகி என பன்முகங்களைக் கொண்ட திரு நா.அருள்முருகன் அவர்களைப் பற்றி நேரடியாக ஒரு பதிவினை ஆரம்பித்தேன். விக்கிபீடியாவில் ஒரு புதிய பதிவினை ஆரம்பிக்கும் முறையை முடிந்தவரை அனைவரும் புரிந்துகொள்ளும் வகையில் பகிர்ந்துகொண்டேன். பின்னர் தொடர்ந்து அவரைப் பற்றிய பதிவினை மேம்படுத்தினேன்.
சுற்றுலா
தஞ்சாவூரிலுள்ள ஏடகம் அமைப்பின் சார்பாக, அதன் நிறுவனர் முனைவர் மணி.மாறன் தலைமையில், சிவகங்கை மாவட்டத்திலுள்ள கானாடுகாத்தான் அரண்மனை, ஆத்தங்குடி அரண்மனை, அரண்மனை சிறுவயலில் உள்ள மருதுபாண்டியர் கோட்டை, மருதுபாண்டியர் நினைவாலயம், காளையார்கோயில், திருக்கோஷ்டியூர் உள்ளிட்ட பல இடங்களுக்குச் சென்றோம். அப்பயணம் விக்கிபீடியாவில் இரு புதிய பதிவுகளைத் தொடங்க உதவியது.

விக்கிபீடியாவில் ஆத்தங்குடி தரைக்கற்கள், கானாடுகாத்தான், கானாடுகாத்தான் கரைமேல் அய்யனார் கோயில், கானாடுகாத்தான் அழகிய நாச்சியம்மன் கோயில், கானாடுகாத்தான் வரதராஜப்பெருமாள் கோயில் ஆகியவை பற்றி பதிவுகள் இருந்தன. இந்த இரு அரண்மனைகளைப் பற்றிய பதிவு இல்லை என்பதை அறிந்ததும், அவற்றைப் பற்றி புதிய பதிவுகளைத் தொடங்கினேன். அரண்மனையில் உள்ளே புகைப்படங்கள் எடுக்க அனுமதி இல்லாத நிலையில் அரண்மனையின் முகப்பினை மட்டுமே புகைப்படம் எடுக்க முடிந்தது. அதனை எடுத்து விக்கிபீடியா கட்டுரையில் இணைத்தேன்.
முந்தைய போட்டி
இதற்கு முன்னர் 2017இல் நடைபெற்ற விக்கிக்கோப்பைப் போட்டியில் கலந்துகொண்டு ஜனவரி 2017இல் ஒரு மாதத்தில் 253 பதிவுகளை எழுதி, மூன்றாம் இடத்தினைப் பெற்று விக்கிக்கோப்பை வெற்றியாளர் பதக்கத்தைப் பெற்றேன். ஆசிய மாதம் போட்டி தொடர்பான முடிவுகள் அறிவிக்கப்பட்டதும், அது தொடர்பாக பகிர்ந்துகொள்ளப்படும்.

விக்கிபீடியா தொடர்பான பிற பதிவுகள்:
செப்டம்பர் 2014 : விக்கிபீடியாவில் 100ஆவது பதிவு
சூன் 2015 : விக்கிபீடியா 200ஆவது பதிவு, 5000ஆவது தொகுப்பு
ஆகஸ்டு 2015 : விக்கிபீடியாவில் பயனராவோம்
ஆகஸ்டு 2015 : விக்கிபீடியாவில் கட்டுரை எழுதுவோம்
அக்டோபர் 2015 : ஆங்கில விக்கிபீடியாவில் 100, தமிழில் 250 கட்டுரைகள் நிறைவு
அக்டோபர் 2015 : முன்னோடி விக்கிபீடியா எழுத்தாளர் விருது
நவம்பர் 2015 : விக்கிபீடியாவில் முதற்பக்கம் பங்களிப்பாளர் அறிமுகம்
மார்ச் 2017 : விக்கிபீடியா போட்டியில் மூன்றாமிடம் பிடித்த தமிழ்ப் பல்கலைக் கழக கண்காணிப்பாளர் : தினமணி
டிசம்பர் 2017 : விக்கிபீடியாவில் 600ஆவது பதிவு
ஜனவரி 2019 : விக்கிபீடியாவில் 700ஆவது பதிவு
டிசம்பர் 2017 : விக்கிபீடியாவில் 600ஆவது பதிவு
ஜனவரி 2019 : விக்கிபீடியாவில் 700ஆவது பதிவு
உங்களின் இடைவிடா முயற்சிக்கு பாராட்டுகளும் வாழ்த்துகளும்
ReplyDeleteவாழ்த்துகள் ஸார். விக்கிபீடியா சிறப்பாக அமைவதில் உங்கள் பங்கும் இருக்கிறது என்பது சிறப்பு. உங்கள் பணிதொடரட்டும், சிறக்கட்டும்.
ReplyDeleteவணக்கம் சகோதரரே
ReplyDeleteதங்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள். உங்களுடைய முயற்சிகளும் சாதனைகளும் பிரமிக்க வைக்கின்றன. குறுகிய காலத்தில் இருநூறு பதிவுகளை சேர்த்து 900 பதிவுகள் எழுதியது பெரிய சாதனை. தங்களது திறமைக்கும், அயராத முயற்சிக்கும் இது ஒரு சான்று. உங்களது இத்திறமைகளும், உத்வேகங்களும் மென்மேலும் பிரகாசித்து நீங்கள் இன்னமும் பல விருதுகளை பெற ஆண்டவனை பிரார்த்தித்துக் கொள்கிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
பிரமிப்பான தகவல்கள்...
ReplyDeleteமுனைவர் அவர்களின் இடைவிடாத முயற்சி வெற்றிகளை தரட்டும்.
வாழ்த்துகள்
உங்களின் ஆர்வம் எப்போதும் என்னை வியக்க வைக்கும்... விரைவில் ஆயிரத்திற்கு மேலும் தொட்டு விடுவீர்கள்... வாழ்த்துகள்...
ReplyDeleteவாழ்த்துக்கள்! வாழ்க வளமுடன்
ReplyDeleteபதிவைப் படித்து வியந்து நிற்கிறேன். ஆண்டுக் கணக்கில் உழைத்ததன் பயனாக இன்று இமயமென உயர்ந்து நிற்கிறீர்கள். வாழ்த்துகள்.
ReplyDeleteதங்களின் அயரா உழைப்பு பாராட்டுதலுக்கு உரியது
ReplyDeleteவாழ்த்துகள் ஐயா
மொத்த தமிழ் விக்கிபிடியா கட்டுரைகளில் கிட்டத்தட்ட 1% உங்களுடையதாக இருக்கிறது.அரிய பணி வாழ்த்துகள் ஐயா!
ReplyDeleteவாழ்த்துகள். நேரில் சந்திக்கும் போது இது குறித்த பேச நிறைய விசயங்கள் உள்ளது. என்னிடம் அதிக கேள்விகள் உள்ளது. இந்த சமயத்தில் விக்கிபீடியாவில் ஞானாலயா கிருஷ்ணமூர்த்தி அய்யா அவர்களைப் பற்றி கட்டுரை வடிவில் வரும்படி செய்யவும்.
ReplyDeleteஞானாலயா கிருஷ்ணமூர்த்தி அவர்கள், அவருடைய துணைவியார் டோரதி அவர்களைப் பற்றிய கட்டுரைகள் துவக்கம், ஞானாலயா நூலகம் கட்டுரை மேம்பாடு ஆகியவை தமிழ் விக்கிபீடியாவிலும், Gnanalaya என்ற தலைப்பில் ஆங்கில விக்கிபீடியாவிலும் பதிவினை எழுதியுள்ளேன். இவற்றில் உள்ள புகைப்படங்கள் என்னால் எடுக்கப்பட்டு விக்கிபொதுவகத்தில் சேர்க்கப்பட்டு, உரிய பதிவுகளில் இணைக்கப்பட்டுள்ளது.
ReplyDeleteஇணைப்பு தரவும்
Deleteவணக்கம். தாங்கள் கேட்டுள்ள இணைப்புகளை அடைப்புக்குறிக்குள் தந்துள்ளேன். ஞானாலயா கிருஷ்ணமூர்த்தி (https://ta.wikipedia.org/s/4jty), டோரதி (https://ta.wikipedia.org/s/4r3d), ஞானாலயா ஆய்வு நூலகம் (https://ta.wikipedia.org/s/2q2y)
DeleteGnanalaya (https://en.wikipedia.org/wiki/Gnanalaya). நன்றி.
வியக்க வைக்கும் தங்கள் சாதனை முயற்சி தொடர வாழ்த்துக்கள்.கின்னஸ் புத்தகத்தில் தங்கள் பெயர் இடம் பெறும் நாளை எதிர்பார்க்கிறேன் - தஞ்சை அப்பா ண்டை ராஜ்
ReplyDeleteதிரு சமஸ் (writersamas@gmail.com மின்னஞ்சல் வழியாக) அன்புக்கும் மரியாதைக்குமுரிய ஜம்புலிங்கம் சார், வணக்கம். தன்னலம் கருதாத உங்களைப் போன்றோரின் உழைப்புதான் தமிழ் விக்கிபீடியா வளர்ச்சிக்குப் பெரும் துணையாக இருக்கிறது. ஆயிரம் தொட்டு, பல்லாயிரம் கடக்க மனமார்ந்த வாழ்த்துகளும் வணக்கங்களும்.
ReplyDeleteஅன்புடன்,
சமஸ்
வியப்பூட்டும் மாபெரும் சாதனை.
ReplyDeleteமனம் நிறைந்த நல்வாழ்த்துகள்.
தங்களின் இந்தப்பணி மேலும் தொடர்ந்து வெகு விரைவில் ஆயிரமாவது பதிவும் வெளியாகட்டும்.
பெரிய சாதனை. உங்கள் நேரத்தை எம்மைப் போன்ற வாசகர்களுக்கு அர்ப்பணிக்கின்றீர்கள். மிக்க நன்றி. தொடரும் உங்கள் சேவைக்கு வாழ்துக்கள்
ReplyDelete