தொடர்ந்து சில ஆண்டுகளாக ஒவ்வோர் ஆண்டின் முதல்
நாளன்று மந்த்ராலயத்திற்குக் குடும்பத்துடன் சென்று வரும் என் அத்தை பேரன்
இந்த ஆண்டு பயணத்தின்போது உடன் சிலரை அழைத்துச் செல்லும் எண்ணத்தோடு
எங்களைக் கேட்டபோது மந்த்ராலயம் செல்வதற்கான விருப்பத்தினைத் தெரிவித்தோம்.
எங்களது குழுவில் 25 பேர் குடும்ப உறுப்பினர்கள் சென்றோம்.
தஞ்சாவூரிலிருந்து சென்னை சென்று அங்கிருந்து மும்பை மெயிலில் மந்த்ராயலம்
ரயில்வே ஸ்டேஷனை அடைந்தோம். அங்கிருந்து மூன்று வேன்கள் மூலம் மந்த்ராலயம்
சென்று சேர்ந்தோம்.
முதல்நாள்-மந்த்ராலயம்:
ராகவேந்திரர் சமாதியைத் சுற்றி வந்து வழிபட்டோம். வெளியில் வந்து சிறிது நேரம் அங்கு அமர்ந்திருந்தோம். பக்தர்கள் அதிக எண்ணிக்கையில் வந்து கொண்டும், போய்க் கொண்டும் இருந்தனர். எங்களுக்குத் திரும்ப மனம் வரவில்லை. இரவு அங்கு நடந்த அன்னதானத்தில் பங்குகொண்டு உணவு அருந்தினோம். தொடர்ந்து ஆயிரக்கணக்கில் வந்துகொண்டிருக்கும் பக்தர்களுக்கு அவர்கள் அன்னம் பாலிக்கும் விதம் மனதைத் தொட்டது. சுறுசுறுப்பாகப் பணியாற்றும் மந்திராலயப் பணியாளர்கள், நேர்த்தியாக அன்னமிடப்படும் முறை, வரிசையாக பக்தர்கள் அமைதி காத்து அன்னத்தைப் பெற்று ஓரிடத்தில் அமர்ந்து உணவு உண்ணல், அருமையான பராமரிப்பு என்று ஒவ்வொன்றையும் பாராட்டிக் கொண்டே இருக்கலாம்.
இரண்டாம் நாள்-மந்த்ராலயத்திற்கு அருகேயுள்ள இடங்கள்:
முதல்நாள்-மந்த்ராலயம்:
ராகவேந்திரர் சமாதியைத் சுற்றி வந்து வழிபட்டோம். வெளியில் வந்து சிறிது நேரம் அங்கு அமர்ந்திருந்தோம். பக்தர்கள் அதிக எண்ணிக்கையில் வந்து கொண்டும், போய்க் கொண்டும் இருந்தனர். எங்களுக்குத் திரும்ப மனம் வரவில்லை. இரவு அங்கு நடந்த அன்னதானத்தில் பங்குகொண்டு உணவு அருந்தினோம். தொடர்ந்து ஆயிரக்கணக்கில் வந்துகொண்டிருக்கும் பக்தர்களுக்கு அவர்கள் அன்னம் பாலிக்கும் விதம் மனதைத் தொட்டது. சுறுசுறுப்பாகப் பணியாற்றும் மந்திராலயப் பணியாளர்கள், நேர்த்தியாக அன்னமிடப்படும் முறை, வரிசையாக பக்தர்கள் அமைதி காத்து அன்னத்தைப் பெற்று ஓரிடத்தில் அமர்ந்து உணவு உண்ணல், அருமையான பராமரிப்பு என்று ஒவ்வொன்றையும் பாராட்டிக் கொண்டே இருக்கலாம்.
தொடர்ந்து இரவு
மந்த்ராலயத்தில் தங்கத் தேர், வெள்ளித் தேர் மற்றும் மரத்தேர் என மூன்று
தேர்களில் ராகவேந்திரரின் திருவுருவம் வைக்கப்பட்டு வந்த அருமையான
காட்சியைக் கண்குளிரக் கண்டோம்.டிசம்பர் 31-ம் தேதி இரவு 12 மணி. மந்த்ராலயத்தைச்
சுற்றி எங்கு பார்த்தாலும் வாண வேடிக்கை. மந்த்ராலய வளாகத்தில் புத்தாண்டு
இனிமையாக உதயமானது. மறுநாள் அருகேயுள்ள கோயில்களைப் பார்ப்பது என
முடிவெடுத்தோம்.
இரண்டாம் நாள்-மந்த்ராலயத்திற்கு அருகேயுள்ள இடங்கள்:
புத்தாண்டின் முதல் நாளன்று மந்த்ராலயத்தில் அருகில் உள்ள இடங்களுக்குச்
சென்றோம். அதற்காக ஒரு வேனை ஏற்பாடு செய்து கொண்டு ராகவேந்திரர் 13
ஆண்டுகள் தவம் செய்ததாகக் கூறப்படும் இடத்திற்குச் சென்றோம். அமைதியான
சூழல்; அருகே துங்கபத்திரை நதி, அந்த நீரின் சலசலப்பும், காற்றும் மிகவும்
மனதுக்கு மகிழ்ச்சியைத் தந்தது. பின்னர் பிச்சாளி கோயில் சென்றோம்.
தமிழ்நாட்டில்
நாமக்கல் மற்றும் சுசீந்திரம் போன்ற இடங்களில் உள்ளதைப் போல பெரிய
ஆஞ்சநேயராக இருக்கும் என நினைத்துக் கொண்டு சென்றோம். மலை மீது அவ்வாறான
அமைப்பு இருப்பதாகக் கூறினர். தனியாக ஆஞ்சநேயர் பெரிய சிலையாகக்
காணப்படவில்லை. பின்னர் உருகுந்தா நரசிம்மர், முதுகுலதொட்டி ஆஞ்சநேயர்
கோயில்களுக்குச் சென்றோம்.அடுத்து ஆடோனியில் உள்ள கோயிலுக்குச்
சென்றோம். கோயில் மலைமீது இருந்தது. மலைமீது ஏற சிரமமாக இருந்தது. சிலர்
மட்டும் மலைமீது ஏறினர். எங்களில் சிலருக்குப் போக ஆசை இருந்தபோதும், மலை
மீது ஏற முடியவில்லை. பின்னர் சலவைக்கல்லால் ஆன மிகமிக அழகான பார்சுவநாதர்
எனப்படும் சமணர் கோயில் சென்றோம். பின்னர் பசவத்தொட்டி ஆஞ்சநேயர் கோயிலுக்குச் சென்றோம். இப்பகுதியில் அதிகமான எண்ணிக்கையில் ஆஞ்சநேயர் கோயில்களைக் காண முடிந்தது.
மூன்றாம் நாள்- ஹம்பி:
உலகின் மிகப்பெரிய திறந்தவெளி அருங்காட்சியகம் என்ற வார்த்தைகளுடன் ஹம்பி பற்றிய விளம்பரத்தை நான் பத்திரிகைகளில் பார்த்ததுண்டு. ஆனால் அந்த ஊருக்கு இப்போது நேரில் போகப்போகிறோம் என எண்ணியபோது மனம் அடைந்த மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை.
ஆந்திரத்திலிருந்து கர்நாடகாவிற்குள் நாம் நுழைவதாக செல்போனில் செய்தி வந்தது. மிகக் குறுகிய நேரத்திற்குள் ஒரு மாநிலத்திலிருந்து அடுத்த மாநிலத்திற்குள் வந்துவிட்டோமே என்று ஆச்சரியமாக இருந்தது. பெயர்பலகைகள் கன்னடம், தெலுங்கு, ஆங்கிலம் என மாறி மாறி கண்களில் தென்பட்டுக்கொண்டே இருந்தன. வேன் டிரைவர் உதவும் மனப்பான்மையுடையவராகவும், கேட்கும் விவரங்களைக் கூறுபவராகவும் இருந்தார். ஐந்தாறு மொழிகளைத் தெரிந்து வைத்திருந்த அவர் தமிழில் நன்றாகப் பேசினார். துங்கபத்திரா நதியைத் தாண்டினால் ஹம்பி என்றும், அந்த எல்லை வரை கொண்டு வந்துவிட்டு, பின்னர் அங்கு காத்திருப்பதாகவும் கூறினார். செல்லும் வழியில் கருங்கற்களை அஸ்திவாரமாகக் கொண்டு கட்டப்பட்ட வீடுகளைக் கண்டோம். செங்கற்களைக் காண்பது அரிதாக இருந்தது. செல்லும் வழியில் எங்கு பார்த்தாலும் இடிந்த கட்டடங்கள். ஆங்காங்கே பெரிய பெரிய கூழாங்கற்களைக் தெளித்துச் சிதறிவிட்டது போல மலைகள்.
சிறிதும் பெரிதுமான மலைகள். ஹம்பி செல்வதற்கு படகில் ஏறி துங்கபத்திரா நதியைக் கடக்க வேண்டியிருந்தது. படகில் செல்லும்போதே விருப்பாட்ஷா சிவன் கோயில் எங்களுக்குத் தெரிந்தது. படகைவிட்டு இறங்கி முதலில் விருப்பாட்ஷா கோயில் சென்றோம்.
தமிழகக் கோயில்களிலிருந்து சற்று மாறுபட்டு இருந்தாலும், துங்கபத்திரா நதிக்கரையோரம் உள்ள விருப்பாட்ஷா கோயில் மிகவும் அழகாக இருந்தது. 1000 ஆண்டுகளுக்கும் மேலான வரலாற்று சிறப்புமிக்க கோயிலில் உள்ளே நுழைந்ததும் வலப்புறம் கூட்டம் கூட்டமாக மக்கள் ஆர்வமாக எதையோ பார்த்துக் கொண்டிருந்தனர். எங்களுக்கும் ஆர்வம் வரவே, சென்று போய்ப் பார்த்தோம். எங்களால் நம்ப முடியாத ஒன்றை அங்கு கண்டோம். அக்கோயிலின் ராஜகோபுரத்தின் நிழல் தலைகீழாக அங்கே தெரிந்தது.
இடப்புறம் பெரிய கல் தொட்டி, பார்ப்பதற்கு அழகாக இருந்தது. கோயில் தரிசனம் முடித்து வெளியே வந்தோம். கடல் கல் கணேஷ் என அழைக்கப்படும் ஒரே கல்லில் ஆன பெரிய பிள்ளையார், கடுகு கல் கணேஷ், கிருஷ்ணர் கோயில், தரையின் கீழ் தளத்தில் இருந்த பாதாளலிங்கம் எனப்படும் சிவன் கோயில் (லிங்கம், நந்தி அனைத்தும் தண்ணீரில் மூழ்கிய நிலையில்) ஒரே கல்லால் ஆன அற்புதமான நரசிம்மர் சிலை, நாணயம் அச்சடிக்கப்பட்டதாகக் கூறப்படும் இடம், ராணி குளியல் அறை (ஏறக்குறைய சிறிய குளம் போல உள்ளே அமைப்பு, ஆங்காங்கே சிறிய மண்டபங்களுடன், மேல் தளம் எதுவு மின்றி), யானை கட்டும் இடம், வாசற்புறம் மொட்டையாக இருந்த சமணர் கோயில், அவ்வாறே ஒரு ராமர் கோயில், நாற்சதுர வடிவிலான மிக சிறப்பாக படிக்கட்டுகள் அமைந்த குளம் ஆகியவற்றைப் பார்த்தோம்.
பிறகு கல் தேர் பார்த்தோம். இந்த கல் தேரை விளம்பரங்களிலும் திரைப்படக் காட்சிகளிலும் பார்த்த நினைவு எனக்கு வந்தது. அந்த கல் தேர் ஏழு பாகங்களைக் கொண்டதாகக் கூறினர். படிக்கட்டுகள் சிறப்பாக அமைந்த குளமும், கல் தேரும் எங்கள் மனதில் மிக ஆழமாகப் பதிந்துவிட்டன.
நாங்கள் ஆட்டோவில் போகும்போது எங்கு பார்த்தாலும் கற்கள் அடுக்கி வைக்கப்பட்ட நிலையில் அமைப்புகள், அழிந்து போன மண்டபங்கள், சிதைந்த சிலைகள் என்ற நிலையில் பலவற்றைக் கண்டோம். ஆட்டோ கிளம்பிய இடமான விருப்பாட்ஷா கோயிலுக்கு வந்து சேர்ந்தோம். பின்னர் படகில் மறுபடியும் திரும்பி துங்கபத்திரை நதியைக் கடந்தோம்.
நன்றி : தினமணி, 28.4.2013
புகைப்படங்கள் : திருமதி கண்மணி இராமமூர்த்தி
அழகான படங்கள் - திருத்தலங்களின் திவ்ய தரிசனம்.
ReplyDeleteஉங்களுடன் நானும் பயணம் செய்ததைப் போல் இருக்கின்றது..
திருத்தலங்களுக்கு எங்களை அழைத்துச் செல்வதில் தங்களுக்கு நிகர் தாங்களே. தங்களின் வருகை மகிழ்வைத் தருகிறது. நன்றி.
Deleteநான் மே மாதம் செல்ல இருக்கிறேன்.பயனுள்ள பதிவுக்கு நன்றி
ReplyDeleteதங்க வாய்ப்பிருப்பின் ஹம்பியில் தங்கி இரு நாள்கள் வரை சுற்றிப் பார்க்கலாம். பயணம் சிறப்புற அமைய வாழ்த்துக்கள். நன்றி.
Deleteநாங்களும் சென்று பார்க்க வேண்டும் என்ற ஆர்வத்தைத் தூண்டிய கட்டுரை. பாராட்டுகள்.
ReplyDeleteசுமார் 25 ஆண்டுகளுக்கு முன்னர் The Hindu நாளிதழில் ஹம்பியைப் பற்றிய கட்டுரையைப் படித்தபோது திட்டமிட்டேன். இப்போதுதான் அது சாத்தியமானது. நன்றி.
DeleteExcellent write up and beautiful photographs.I was lucky to have seen Humpi in1958.Thunga splits into two and joins a little down stream making a natural beauty Island in which Nava Brindhavan is located.It is divine news that the siting of the 9 great saints are such that the greatest amongst them is placed centrally and each other according to their period of incarnation.Good news Dr.Jambulingam sir.
ReplyDeleteதாங்கள் சொல்வதுபோல துங்கபத்திரை ஆறு பிரியும் இடம் மிகவும் அருமை. படகுப்பயணம் மறக்கமுடியாதது. தங்களின் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி.
Deleteதங்களுடன் இணைந்து பயணம் செய்த ஓர் உணர்வு
ReplyDeleteபடங்கள் அனைத்தும் அழகு ஐயா
நன்றி
திட்டமிடம் சரியாக அமையும்போது நேரத்தை வீணாக்காமல் பல இடங்களைப் பார்க்கமுடியும் என்பதை உணர்த்தியது எங்களின் இப்பயணம். தங்களின் வாழ்த்திற்கு நன்றி.
Deletei saw humpy through your eyes
ReplyDeleteஎங்களது பயணத்தில் உடன் பயணிக்கும் தங்களின் பெருமனது போற்றத்தக்கது. நன்றி,
Deleteகாணாதன கண்டேன் அய்யா.
ReplyDeleteஅழைத்துச் சென்றமைக்கு நன்றி.
பேலூர் ஹலேபேட் ஆகிய இடங்களில் உள்ள சிற்பங்களின் அழகும் கட்டட அமைப்பும் ஹம்பியிலிருந்து மாறுபட்டதாகும். தங்களின் வருகைக்கு நன்றி.
Deleteஅழகான படங்கள்...
ReplyDeleteவாழ்த்துக்கள்... நன்றி ஐயா...
சளைக்காமல் உடன் பயணிக்கும் தங்களின் அன்புக்கு மனமார்ந்த நன்றி.
Deleteமந்திராலயமும் ஹம்பியும் இரு வேறு பயணங்களில் பார்த்திருக்கிறோம் உங்கள் பதிvu brings in nostalgic memories. எப்பொழுதும் ஒரு முறைபார்த்தால் போதாத இடம் ஹம்பி
ReplyDeleteஉண்மைதான். எத்தனை நாள்கள் தங்கினாலும் பார்த்துக்கொண்டே இருக்கலாம். பல இடங்கள் நம் செஞ்சியை நினைவுபடுத்துகின்றன. நன்றி.
Deleteஅழகான படங்கள் - திருத்தலங்களின் பார்க்க வேண்டும் என்ற ஆர்வத்தைத் தூண்டிய கட்டுரை
ReplyDeleteநன்றி ஐயா
பார்ப்பதைவிட அது பற்றி எழுதுவது மிகவும் முக்கியமானது என்பதை இக்கட்டுரை உணர்த்தியதை தங்களைப்போன்றோரின் எழுத்தின்மூலமாக அறிந்தோம். நன்றி.
DeleteA good travel articles. The photos are inducing to see the place.
ReplyDeleteS.Sudalaimuthu
Bangalore
வருகைக்கும், வாழ்த்துக்கும் நன்றி.
Deleteமந்த்ராலயமும் ஹம்பியும் : பாக்கியவதி ஜம்புலிங்கம்* = Dr B Jambulingam அவர்களின் அருமையான சுற்றுலாப்பதிவு. எனது பக்கத்தில் பகிர்கிறேன். நன்றி & வாழ்த்துகள் Dr B Jambulingam
ReplyDeleteஎங்களது பதிவைப் பகிர்ந்துகொள்ளும் தங்களின் பெருமனதிற்கு நன்றி.
Deleteவணக்கம்
ReplyDeleteஐயா.
நான் பதிவை பார்த்தபோது பிரமித்து விட்டேன்.. நன்றாக எழுதியுள்ளீர்கள் படங்களும் அழகு வாழ்த்துக்கள் ஐயா.
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
எங்களது பயணத்தின் தாக்கம் என் மனைவியால் இவ்வாறாக ஒரு கட்டுரை உருவாகக் காரணமானது. இவ்வாறாகப் பார்க்கவேண்டியவற்றில் மற்றொரு இடம் பட்டடக்கல். அவ்விடத்தைக் காணவும், பதியவும் ஆவலோடு காத்திருக்கிறோம். தங்களின் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி.
ReplyDeleteபுகைப்படங்களும் அருமை... எழுத்தும் எளிமை...
ReplyDeleteதங்களின் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி.
ReplyDeleteநீங்கள் குறிப்பிட்ட திருத்தலங்களெல்லாம் நம்மண்ணின் வரலாற்று அடையாளங்களும் கூட ! இவை முறையாய் பராமரிக்கபட்டு, பாதுகாக்கப்பட வேண்டும்.
ReplyDeleteநன்றி
சாமானியன்
saamaaniyan.blogspot.fr
வருங்கால தலைமுறையினருக்கு நாம் செய்யவேண்டிய கடமையும் அதுவே. தங்களது உணர்வுகளுக்கு நன்றி.
ReplyDeleteதங்களுடன் இணைந்து பயணம் செய்த ஓர் உணர்வு அழகான படங்கள் நான் பதிவை பார்த்தபோது பிரமித்து விட்டேன்.. நன்றாக எழுதியுள்ளீர்கள் வாழ்த்துக்கள்
ReplyDeleteஆர்வமுடன் பதிவைக் கண்டு பிரமித்தமையறிந்து மகிழ்ச்சி. கட்டுரை எழுதிய என் மனைவியிடம் தங்களது வாழ்த்தினைத் தெரிவித்துவிட்டேன். நன்றி.
ReplyDelete