6.7.2014 அன்று விக்கிபீடியாவில் எழுதத்தொடங்கி இன்று 100ஆவது பதிவு நிறைவு. அதனைப் பகிர்ந்துகொள்ளவே இப்பதிவு. இப்பணியில் துணைநிற்கும் அனைவருக்கும் நன்றி.
பிறந்த மண்ணான கும்பகோணம், வளர்ந்து பார்த்த இடங்களான கோயில்கள், படித்த இலக்கியங்கள், நமது கலை, பண்பாடு போன்றவை தொடர்பாக அவ்வப்போது மனதில் படுவனவற்றை எழுதவேண்டும் என்பதே எனது ஆரம்ப எண்ணமாக இருந்தது. அந்த அடிப்படையில் எழுத ஆரம்பித்து 100 நாள்களுக்குள் 100 பதிவுகளைப் பதியசெய்ததை நினைக்கும்போது வியப்பாக உள்ளது.
ஆரம்பத்தில் பதிவுகளைப் பதிய ஆரம்பிக்கும்போது நடைமுறைகளைத் தெரிந்துகொள்ளாமல் பல தவறுகளையும், மாற்றங்களையும் செய்யும் நிலை எனக்கு ஏற்பட்டது. விக்கியுள்ள நண்பர்கள் என்னை நெறிப்படுத்தி செல்லும் நிலையில் ஓரளவு பக்குவம் ஏற்பட்டுள்ளதை என்னால் உணர முடிகிறது.
திரு முத்துநிலவன் அவர்கள் புதுக்கோட்டையில் ஏற்பாடு செய்த ஒரு பயிற்சிப்பட்டறை விக்கியில் நான் எழுத ஆரம்பிக்கக் காரணமாக இருந்தது. இதில் கலந்துகொள்ள தஞ்சாவூரிலிருந்து நானும் திரு கரந்தை ஜெயக்குமார் அவர்களும் சென்றிருந்தோம். பிரின்சுஎன்ஆர்சர்மா விக்கிபீடியாவைப் பற்றி தந்த அறிமுகம் என்னுள் ஒரு ஆர்வத்தை உண்டாக்கியது. திரு முரளீதரன் மற்றும் திரு திண்டுக்கல் தனபாலன் வலைப்பூக்களைப் பற்றி அருமையான விளக்கவுரை தந்தனர்.
அவரது அந்தப் பேச்சு என் விக்கிபீடியாவின் மீதான என் ஈர்ப்பை அதிகப்படுத்தியது. பௌத்தம் தொடர்பாக ஒரு வலைப்பூவிலும், பிற பொருண்மைகள் தொடர்பாக இவ்வலைபூவிலும் எழுதிவரும் நிலையில் விக்கிபீடியாவில் எழுத ஆரம்பிப்பது, தொடர்வது சாத்தியமாகுமா என்ற ஒரு குழப்பம் மனதில் இருந்தது. நாம் அறிந்தவற்றைப் பகிர்ந்துகொள்ளவும், பதியவும் விக்கிபீடியா உதவுகிறது என்ற நிலையில் தொடர்ந்து எழுதுவது சாத்தியமாயிற்று. தொடர்ந்து நான் எழுதும்போது எனது எழுத்துக்களை நெறிப்படுத்தி, அவ்வப்போது உரிய கருத்துக்களைக் கூறி தெளிவுபடுத்தி வரும் விக்கிபீடியா நண்பர்களுக்கு என் நன்றி.
விக்கிபீடியாவிற்கு வலைப்பூ மூலமாகவே அறிமுகமான நிலையில் என் அனைத்து வலைப்பூ நண்பர்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றி.
அனைத்திற்கும் மேலாக நான் பணியாற்றும் தமிழ்ப்பல்கலைக்கழக நண்பர்கள், அறிஞர்கள், ஆய்வாளர்கள், பிற நண்பர்கள், உறவினர்கள் அனைவருக்கும் என் நன்றி.
என் பணிக்குத் துணையாக இருக்கும் என் மனைவி திருமதி பாக்கியவதிக்கு என் நன்றி.
http://tools.wmflabs.org/ xtools/pages/?user=%E0%AE%AA% E0%AE%BE.%E0%AE%9C%E0%AE%AE% E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0% AE%B2%E0%AE%BF%E0%AE%99%E0%AF% 8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D& lang=ta&wiki=wikipedia& namespace=0&redirects= noredirects
பயனர்:
https://ta.wikipedia.org/wiki/ %E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A9% E0%AE%B0%E0%AF%8D:%E0%AE%AA% E0%AE%BE.%E0%AE%9C%E0%AE%AE% E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0% AE%B2%E0%AE%BF%E0%AE%99%E0%AF% 8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D
பௌத்த ஆய்வாளர் :
https://ta.wikipedia.org/wiki/ %E0%AE%AA%E0%AE%BE._%E0%AE%9C% E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0% AF%81%E0%AE%B2%E0%AE%BF%E0%AE% 99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE% E0%AF%8D
என் பணிக்குத் துணையாக இருக்கும் என் மனைவி திருமதி பாக்கியவதிக்கு என் நன்றி.
----------------------------------------------------------------------------------------------------
விக்கிபீடியாவில் பதிவு
ஆரம்பிக்கப்பட்டவை : http://tools.wmflabs.org/
பயனர்:
https://ta.wikipedia.org/wiki/
பௌத்த ஆய்வாளர் :
https://ta.wikipedia.org/wiki/