ஃபீடல் காஸ்ட்ரோவின் கட்டுரைகளைக்
கொண்ட Battle of Ideas: Reflections by Fidel Castro என்ற நூலை நான்கு மணி நேரத்தில்
படித்து முடித்தேன். 2009வாக்கில் முதன் முறையாகப் படித்தேன். அண்மையில் மறுபடியும் படித்தேன். இந்த மூன்று மாத காலத் தொகுப்புக் கட்டுரைகளில்
(28.3.2007 முதல் 30.6.2007 வரை) அவர், உலக நடப்பின் பொது நிலையை மிக சிறப்பாக முன்வைக்கிறார்.
காந்தியின் சத்தியசோதனை, நேருவின் உலக வரலாறு, அப்துல் கலாமின் அக்னிச்சிறகுகள் போன்ற
நூல்களில் காணப்படுகின்ற, வாசகரை உடன் அழைத்துச் செல்லும் நடையினை இந்நூலில் காணமுடிகிறது.
அவருடைய எழுத்து இளைஞர்களை ஊக்குவிக்கும் விவேகானந்தரின் எழுத்தினைப் போல உள்ளது. தன்
நாட்டுப் பல்துறை முன்னேற்றம், ஆதிக்க சக்தி எதிர்ப்பு உள்ளிட்ட பல நிகழ்வுகளை நம்
ஒவ்வொருவரின் வீட்டுப் பிரச்னைகளைப் போலத் துல்லியமாக அலசுகிறார். படிப்பவர் மனதில்
ஒரு எழுச்சியினை இவ்வெழுத்துக்கள் உண்டாக்குகின்றன. கட்டுரைகளைப் படிக்கும்போது சில
இடங்களிலும், இறுதிப்பகுதியிலும் நம்முடன் அவர் நேரிடையாக உரையாடுவதைப் போலுள்ளது.
வரலாற்று நாயகன், வரலாற்றின் மகன் என்று புகழப்படுகின்ற இவருக்கு இணை இவரே. அவருக்கு
மார்த்தியும், சேகுவாராவும் கிடைத்தது அவர் வரலாறு படைக்க உதவியாக இருந்தது என்பதில்
ஐயமில்லை. அவரது எழுத்துக்களில் சிலவற்றைக் காண்போம். அவருடைய கட்டுரைகளைப் படிப்போம்.
"நம் தோழர்களின் மனதினை நல்ல எண்ணங்களால் நிரப்பும் முயற்சியை மேற்கொள்ளவேண்டும். அப்போதுதான் அவர்கள் அவற்றை இளைஞர்களிடமும் பிறரிடமும் கொண்டுசேர்ப்பர்." (பக்கம் 21)
"உலகிலுள்ள பணக்கார மற்றும் ஏழை நாடுகள் அனைத்தும் இன்கேன்டசன்ட் பல்புகளுக்குப் பதிலாக ஃப்ளோரசன்ட் பல்புகளைப் பயன்படுத்தினால் அதிக எரிபொருளை மிச்சப்படுத்தமுடியும். க்யூபாவில் அனைத்து வீடுகளிலும் இவ்வாறான முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது." (ப.54)
"பள்ளியில் நாம் கற்றுக்கொள்ளும் சாதாரண கணக்கை நடைமுறை வாழ்வில் பயன்படுத்த கற்றுக்கொள்ளவேண்டும்." (ப.62)
"கணினித்துறையிலோ தகவல் தொழில்நுட்பத்திலோ அதிகம் முன்னேறாத காலகட்டத்தில் நிராயுதபாணியாக இருந்த மக்களின் மீது இரு அணுகுண்டுகள் வீசப்பட்டன. அரசியல் காரணங்களுக்காகவே இச்செயல் மேற்கொள்ளப்பட்டது." (ப.67)
"...உடல் நலனில் கவனம் வைக்காவிட்டால் சிக்கலே. பல்வேறு காலகட்டங்களில் உடல்நலனுக்கு நான் முக்கியத்துவம் கொடுக்கவில்லையோ என நினைக்கிறேன். இப்போதெல்லாம் எதைச் செய்யவேண்டுமோ அதை மட்டுமே செய்கிறேன். குறிப்பாக முக்கியமான பிரச்சினைகள் குறித்து எழுத ஆரம்பித்துள்ளேன். நான் செய்ய வேண்டியது நிறைய இருக்கிறது. புகைப்படங்களுக்காக என் முடியையும், தாடியையும் மீசையையும் சரி செய்வதற்கோ, தினமும் ஆடைக்கு முக்கியத்துவம் தருவதற்கோ எனக்கு நேரமில்லை. அவ்வாறு செய்ய ஆரம்பிக்கும்போது பேட்டிகள் கேட்டு அதிகமான வேண்டுகோள் எனக்கு வர ஆரம்பிக்கும். இப்போது என் உடல் நலன் தேறிவிட்டது....ஊடகங்களுடனும், தொலைக்காட்சி நிறுவனங்களுடனும் என் எண்ணப் பிரதிபலிப்புகளை மிகவும் சுருக்கமாக பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். மற்ற நேரத்தில் படிக்கிறேன், தகவல்களைப் பெறுகிறேன், தோழர்களுடன் பேசுகின்றேன், என் உடல் நலனுக்கு முக்கியத்துவம் தருகிறேன். எனக்குத் தெரிந்த அனைத்தையும் பேசவோ, குறை சொல்லவோ நான் விரும்பவில்லை. அவ்வாறு நான் செய்ய ஆரம்பித்தால் மனித உறவுகளும், உலகளாவிய உறவுகளும் பாதிக்கப்படும். அவர்கள் இல்லாமல் நாம் எதுவும் செய்துவிட முடியாது. எக்காலகட்டத்திலும் பொய்யை எழுதக்கூடாது என்பதில் மிகவும் உறுதியாக உள்ளேன்." (ப.98)
"க்யூபா ஆயிரக்கணக்கான இளைஞர்களுக்கு தற்போது மருத்துவர் பயிற்சியை அளித்து வருகிறது. ஆப்பிரிக்காவிலுள்ள ஒரு கிராமத்திலும்கூட ஒரு கியூப மருத்துவர் அந்த கிராமத்தையோ அருகிலுள்ள நகராட்சியையோ சேர்ந்த இளைஞர்களுக்கு சூரிய சக்தியின் உதவியுடன் செயல்படும் உபகரணங்களைக் கொண்டு கணினியின் துணையுடன் மருத்துவப் பயிற்சி அளித்துவருகிறார். அவ்விளைஞன் தன் ஊரைவிட்டு வெளியே செல்லவேண்டிய அவசியமில்லை. அவ்வாறே பெரிய நகரங்களுக்கு வந்து நகர வாழ்க்கையால் பாதிக்கப்படவேண்டிய அவசியமுமில்லை." (ப.126)
"ஷேக்ஸ்பியரின் நாடகமொன்றில் வாழ்வதா, சாவதா என்ற வசனம் வரும். இந்த மாதிரியான எண்ணம்தான் இப்போதைய இளைஞர்களிடம் காணப்படுகிறது. அவ்வெண்ணத்தை ஒதுக்கிவிட வேண்டும்....இளைஞர்கள் தோற்றுவிட்டால் அனைத்துமே தோற்றுவிடும் என்பதை மனதில் கொள்ளவேண்டும். க்யூப இளைஞர்கள் சூழலை நன்கு எதிர்கொள்வார்கள் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு. நான் அவர்கள் மீது நம்பிக்கை வைத்துள்ளேன்." (ப.140)
Cuba Newsஇன் முதன்மை ஆசிரியரான வால்ட்டர் லிப்மேன், காஸ்ட்ரோவைப் பற்றிக் கூறுகிறார். "காஸ்ட்ரோ மணிக்கணக்கில் பேசிகொண்டேயிருப்பார். இப்போது சில பத்திகள் எழுத ஆரம்பித்துள்ளார். அவருடைய ஒவ்வொரு வார்த்தையையும் நாங்கள் கவனமாகப் படிப்போம். உலகில் வேறு எந்தவொரு தலைவரும் ஃபீடல் காஸ்ட்ரோவைப் போல ஈர்க்கவில்லை. ஒரு பெரிய புரட்சிக்கு வித்திட்ட வகையில் அவர் அனைவருடைய கவனத்தையும், மரியாதையையும் பெற்றார். இப்போது அவர் க்யூ மட்டுமன்றி உலகிலுள்ள அனைத்து மக்களுக்கும் தன் எளிய, நேரிடையான, அருமையான சிந்தனைகள் மூலமாக பயிற்றுவிக்க ஆரம்பித்துள்ளார்."
Granmaவில் அவர் அண்மையில் எழுதிய கட்டுரை செப்டம்பர் 2014இல் வெளிவந்துள்ளது. கட்டுரையின் ஆரம்பமும், இறுதியில் அவரது கையொப்பமும் இதோ.
Battle of Ideas : Reflections by Fidel Castro, Part I (29 March to 30 June 2007), New Century Book House, 41B, Sidco Industrial Estate, Ambattur, Chennai 600 098, Phones: 26359906, 26251968, 2007, Rs.100
தமிழ் இந்து நாளிழின் ஆண்டுவிழாவினையொட்டி அவ்விதழைப் பற்றி நான் எழுதிய கடிதம் 27.9.2015இல் வெளியாகியுள்ளது. அதைப் பகிர்வதில் மகிழ்கிறேன்.
பதிவு, 29.9.2015இல் மேம்படுத்தப்பட்டது.

நூலை ஆழமாக உள்வாங்கி படித்து அதன் சிறப்பை அழகாக தொகுத்த விதம் அருமை சிறந்த விமர்சனம்
ReplyDeleteமுதல் வருகைக்கு நன்றி.
Deleteவணக்கம்
ReplyDeleteஐயா
நூலைப்பற்றி சொல்லிய போது எங்களையும் படிக்க சொல்லுகிறது தங்களின் பார்வையில் அற்புதமாக எடுத்துரைத்துள்ளீர்கள் வாழ்த்துக்கள் ஐயா.த.ம3
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
தங்களது நூல் வெளியீட்டு விழா பணிகளுக்கிடையே வந்து கருத்திட்டமைக்கு நன்றி.
Deleteமிக மிக அருமையான பதிவு!
ReplyDeleteநூல் விமர்சனம் வெகு அருமை அய்யா! உலகின் சர்க்கரைக் கிண்ணம் கியூபாபவைப் போல் தங்களது பதிவும் படிக்க படிக்க இனித்தது.
உலக வரைபடத்தில் தென் அமெரிக்க கண்டத்திற்கும், வட அமெரிக்க கண்டத்திற்கும் இடையில் கடலில் அமைந்துள்ள தீவு கியூபா. இது உலகின் 7ஆவது பெரிய தீவு ஆகும்.
குடல் நோய் பாதிப்பால் துன்பப்பட்டு வந்த காஸ்ட்ரோ, அதற்கு சிகிச்சை எடுக்கவேண்டி அரசியல் பணிகளில் இருந்து ஓய்வு பெற்று தொடர்ந்து 47 ஆண்டுகள் கியூபாவின் பிரதமராகவும், பின்னர் அதிபராகவும் விளங்கிய பிடல் காஸ்ட்ரோ, தனது 80 ஆவது வயதில் பொறுப்புகளை தனது தம்பி ராவுல் காஸ்ட்ரோவிடம் ஒப்படைத்தார். இதனால்தானோ மருத்துவர்கள் நிறைந்த நாடாக கியூபா மாறி விட்டது. நிச்சயம் இந்த நூலை படிக்க வேண்டும்! படிப்பேன்! நன்றி அய்யா!
த ம +
நட்புடன்,
புதுவை வேலு
வருகைக்கும், கருத்துரைக்கும் நன்றி.
Deleteஐயா..!
ReplyDeleteஎன்னவெனச் சொல்வது!.. தங்களின் சேவை மனப்பான்மையை!..
இப்படியாயினும் இவற்றை அறிந்து கொள்ளுங்கள் என்று
ஆழ்ந்து படித்து அறிந்தவற்றை இங்கு எமக்கும் அறியத்தந்தீர்கள்! அருமை!
பகிர்வினுக்கு மிக்க நன்றியுடன் வாழ்த்துக்கள் ஐயா!
த ம+1
அன்பான கருத்திற்கு நன்றி.
Deleteதாங்கள் படித்ததை பகிர்ந்த விதம் அருமை ஐயா!
ReplyDeleteவருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி.
Delete
ReplyDelete"நம் தோழர்களின் மனதினை நல்ல எண்ணங்களால் நிரப்பும் முயற்சியை மேற்கொள்ளவேண்டும். அப்போதுதான் அவர்கள் அவற்றை இளைஞர்களிடமும் பிறரிடமும் கொண்டுசேர்ப்பர்." (பக்கம் 21) என்ற வழிகாட்டல் நன்று.
சிறந்த திறனாய்வுப் பார்வை
தொடருங்கள்
அவரது எழுத்துக்கள் படிக்கப் படிக்க ஆவலைத் தூண்டும். நன்றி.
Deleteபுத்தக அறிமுகத்திற்கு நன்றி ஐயா.
ReplyDeleteவருகைக்கு நன்றி.
Deleteஆழ்ந்த வாசிப்பு.
ReplyDeleteதெளிந்த ஞானமும்
தீர்க்க சிந்தனையும் உடைய
பிடல் அவர்களின் எழுத்துக்களை அறிமுகம்
செய்தமைக்கு நன்றி ஐயா
அவசியம் வாங்கிப் படிக்கின்றேன்
அவரது எழுத்தினைப் படிக்கும்போது நாம் வேற்றுலகில் இருப்பதுபோலத் தோன்றும். நன்றி.
Deleteபொய்யை எழுதக்கூடாது என்னும் ஒரு நல்ல எழுத்தாளரை எங்களுக்கு அறிமுகம் செய்து வைத்திருக்கிறீர்கள் ஐயா. ஒவ்வொரு வாசிப்பு அனுபவத்தையம் ஆர்வமுடன் பகிர்ந்திருக்கிங்க. பக்-98.ல் சொல்லியிருக்கும் தகவல்கள் வெகுசிறப்பு.
ReplyDeleteஅவரைப் பற்றிய மற்றொரு பதிவினை மொழிபெயர்த்துக் கொண்டிருக்கிறேன். விரைவில் பகிர்வேன். நன்றி.
Deleteஃபீடல் காஸ்ட்ரோவின் எண்ணப்பிரதிபலிப்புகளை பகிர்ந்தமைக்கு நன்றி! அய்யா........
ReplyDeleteஅன்பான வருகைக்கு நன்றி.
Deleteஅய்யா வணக்கம்,
ReplyDeleteஎத்துனை அருமையாக சொல்லியுள்ளீர். தாங்கள் அறிமுகம் செய்தவர் நான் மிகவும் மதிப்பவர்களில் ஒருவர், வேறு ஒருவர் மொழிபெயர்ப்பிலோ, கட்டுரையிலோ படித்தாக நினைவு.
இப்போ அவசியம் படிக்கனும் அய்யா
பகிர்வுக்கு நன்றிகள்.
அவசியம் படிக்கவேண்டியவை அவருடைய எழுத்துக்கள். நன்றி.
Deleteஒரே மூச்சில் படித்து முடிப்பது என்பது இதுதான்!
ReplyDeleteஅருமையான பகிர்வு!
அவ்வாறான ஓர் ஓட்டம் அவரது எழுத்து நடையில் உள்ளது. நன்றி.
Deleteஒரு நல்ல மனிதரின் நல் எண்ணங்களைக் கொண்ட புத்தகத்தை அறிமுகப்படுத்தியதற்கு நன்றி அய்யா!
ReplyDeleteத ம 12
அவரைப் பற்றி எழுதவேண்டும் என்ற நெடுநாளைய ஆவல் இப்பதிவு மூலம் எனக்கு பூர்த்தியானது. நன்றி.
Deleteஅன்புடையீர்..
ReplyDeleteகாஸ்ட்ரோ அவர்களின் கட்டுரைகளை -
நாங்களும் அறியத் தந்தமைக்கு நன்றி..
தங்களின் அன்பான வருகைக்கு நன்றி.
Deleteஅன்புள்ள அய்யா,
ReplyDeleteஃபீடல் காஸ்ட்ரோவின் கட்டுரைகளைப் படித்து அவர் சொன்ன அரிய கருத்துகளை மேற்கோள் காட்டிச் சொன்னது கண்டு வியந்தோம்.
த.ம. 13.
மொழிபெயர்க்கும்போது சில இடங்களில் சிரமப்பட்டேன். இருந்தாலும் எழுதவேண்டும் என்ற ஆவலே இப்பதிவு. நன்றி.
Deleteஅமெரிக்காவின் CIA க்கே சிம்ம சொப்பனமாய் வாழ்ந்து காட்டிய மக்கள தலைவன் பிடல் காஸ்டிரோ அல்லவா,உண்மையில் புரட்சித் தலைவன் !
ReplyDeleteஉண்மையான முன்னுதாரணத் தலைவர். வருகைக்கு நன்றி.
Deleteஅருமையான பதிவு
ReplyDeleteவருகைக்கு நன்றி.
Deleteபிடல் காஸ்ட்ரோவைப் பற்றி நான் அதிகம் அறிந்திருக்க வாய்ப்புகள் இல்லாமல் போய் விட்டது. அவருடைய நூலிலிருந்து நீங்கள் காட்டிய மேற்கோள்கள் ( உங்களுடைய தமிழாக்கம்) மனதைத் தொட்டன. குறிப்பாக உடல்நலனைப் பற்றிய அவரது கருத்துரையை அனைவரும் எண்ணிப் பார்க்க வேண்டும்.
ReplyDeleteஅதிகம் ரசித்து மொழிபெயர்த்தேன். தங்களின் வாழ்த்துக்கு நன்றி.
Deleteநல்லதொரு நூலை அழகாக அறிமுகம் செய்துள்ளீர்கள்! நன்றி!
ReplyDeleteஅன்பான கருத்துக்கு நன்றி.
Deleteதங்கள் வாசித்தல் ஆர்வம் வியக்க வைக்கிறது.ஆழப் படித்து அதன் சாரத்தை அழகான தமிழில் தந்திருகிறீர்கள் அறிந்து கொள்ல வேண்டிய தகவல்களும் எழுச்சி ஊட்டும் வார்த்தைகளும் கொண்ட இந்த நூலை படிக்க ஆர்வம் ஏற்பட்டுவிட்டது நன்றி ஐயா
ReplyDeleteஇவ்வாறான சில நூல்களே என் மொழிபெயர்ப்பு ஆர்வத்தைத் தூண்டக் காரணம். வாழ்த்துக்கு நன்றி.
Deleteஅருமையான தகவல்களை வாசிக்கத் தந்தீர். . சில இடங்களில் விக்கிப் பீடியாவின் தாக்கம் தெரிகிறது. வாழ்த்துகள்.
ReplyDeleteசரியாகக் கண்டுபிடித்துவிட்டீர்கள். முடிந்தவரை பிறருக்கு உதவவேண்டும் என்ற நன்னோக்கில் பக்க எண்களைத் தருகிறேன். நன்றி.
DeleteThanks for introducing the wonderful book.
ReplyDeleteபதிவினைப் படித்து கருத்திட்ட தங்களுக்கு மனமார்ந்த நன்றி.
Deleteஅன்பின் முனைவர் ஜம்புலிங்கம் அவர்களுக்கு
ReplyDeleteஆஹா...உலகின் தவப் புதல்வர்களுள் ஒருவரான ஃபிடல் காஸ்ட்ரோ அவர்களைப் பற்றிய வித்தியாசமான அறிமுகத்தைச் செய்கிறது உங்களது இந்தப் பதிவு...ஒரு நூலை வாசிக்கத் தூண்டுவது மட்டுமல்ல, நூலுக்குப் பின்னுள்ள மாமனிதர் ஒருவரைத் தேடிக் கண்டறியவும் தூண்டுகிறது.
சுரண்டல் அற்ற ஒரு சமூகம். தன்னலம் தொலைத்துக் கட்டிவிட்ட ஓருலகம். எல்லாம் யாவருக்கும் என்பதான மானுட உச்சம். இதுவே பொதுவுடைமை தத்துவம். அமெரிக்காவுக்கு மிக அருகே பூவுலகில் சொர்க்கம் படைத்த எளிய மனிதர்கள் கியூப மக்கள். அவர்களது ஈடு இணையற்ற தலைவர் காஸ்ட்ரோ. காஸ்ட்ரோ அவர்களால் ஈர்க்கப்பட்ட ஹியூகோ சாவேஸ், புற்றுநோயால் மரிக்குமுன், வெனிசுவேலா மண்ணில் மகத்தான மாற்றங்களை ஏற்படுத்தினார். இன்று பொலிவியாவில் இளைஞர் இவா மொரேலஸ் அற்புதங்கள் நிகழ்த்திக் கொண்டிருக்கிறார். இலத்தீன் அமெரிக்க நாடுகள் பலவும் பொருளாதாரச் சுரண்டலின் அடிப்படையான ஏகாதிபத்திய நிதி மூலதன அமைப்புகளான உலக வங்கி, ஐ எம் எஃப் இவற்றைப் புறந்தள்ளி தங்களுக்கான பொது நிதி உதவி ஏற்பாட்டைச் செய்து போராடிக் கொண்டிருக்கின்றன.
உங்கள் பதிவு ஒரு மாற்று சமூக, அரசியல், பொருளாதார, பண்பாட்டு வெளியை உருவாக்கிய - மிக சாதாரண மக்களுக்காக உழைத்த - சி ஐ ஏ அயோக்கிய அமைப்பினால் 600 முறைகளுக்கு மேல் கொல்ல சதி திட்டம் தீட்டப்பட்டும் தமது இலட்சிய உறுதியிலிருந்து பிறழாது அர்ப்பணிப்போடு இயங்கிய அருமையான தலைவரை அறிமுகப் படுத்தியமைக்கு நன்றி...நன்றி...
எஸ் வி வேணுகோபாலன்
சென்னை 24
உங்களுடைய எழுத்துக்கு முன்பாக எனது பதிவு சிறியதே. எனது பதிவினைக் கண்டு நன்கு அலசி தாங்கள் எழுதிய விதம் நெகிழவைத்தது. காஸ்ட்ரோ தொடர்பாக மற்றொரு பதிவை எழுதுகிறேன். விரைவில் பதிவேன். நன்றி.
Deleteஅருமையான தகவல்கள் .
ReplyDeleteமிக்க நன்றி அன்புறவே
தங்களின் கவிதைப் பதிவுகளுக்கிடையே எனது பதிவினைக் கண்டு கருத்திட்டமைக்கு நன்றி.
Deleteதகவல்கள் புதியது. மிக்க நன்றி ஐயா.
ReplyDeleteவருகைக்கு நன்றி. தாங்களும் இதுபோன்ற பதிவுகளை எழுதவேண்டும் என்பதே என் ஆவல்.
Deleteஃபிடல் காஸ்ட்ரே பற்றி ஓரளவிற்குத் தெரியும் என்றாலும் தாங்கள் தந்துள்ள தகவல்கள் இன்னும் அறிய வைத்ததது என்றால் மிகையல்ல ஐயா! நல்லதொரு நூல் அறிமுகம்....மிக்க நன்றி ஐயா...
ReplyDeleteமொழிபெயர்ப்பில் அவரது எழுத்தை வெளிக்கொணர வேண்டும என்ற ஆவலே இப்பதிவுக்குக் காரணம். தங்களின் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி.
Deleteஇளைஞர்கள் கண்டிப்பாக இவருடைய வரலாற்றை அறிந்து கொள்ளவேண்டும் என்பதை தங்கள் விமர்சனம் புலப்படுத்துகிறது.
ReplyDeleteஇளைஞர்கள் அறியவேண்டும் என்பதே என்னுடைய ஆவலும். வருகைக்கு நன்றி.
Delete