13 September 2015

கும்பகோணம் இராமசுவாமி கோயில்

கும்பகோணத்தில் இராமாயண சிற்பங்களைப் பார்க்கவேண்டுமா? குடந்தைக்கீழ்க்கோட்டம் என்றழைக்கப்படுகின்ற நாகேஸ்வரன் கோயிலுக்கு வாருங்கள். இராமாயண ஓவியங்களையும், சிற்பங்களையும் பார்க்க வேண்டுமா? இராமசுவாமி கோயிலுக்கு வாருங்கள். பள்ளி நாள்கள் தொடங்கி கும்பகோணத்தில் இக்கோயிலில் உள்ள ராமாயண ஓவியங்களைச் சுற்றிச் சுற்றி வந்து பல முறை தனியாகவும், நண்பர்களுடனும் பார்த்திருக்கின்றேன். 2016 மகாமகத்திற்காக திருக்குடமுழுக்கு நடைபெற்றபோது  இக்கோயிலுக்குச் சென்றுவந்தோம்.  


கும்பகோணத்திலுள்ள வைணவத் தலங்களில் முக்கியமான இடத்தைப் பெறுவது இராமசுவாமி கோயில். கி.பி.1600 முதல் கி.பி.1645 வரை தஞ்சாவூரை ஆட்சி செய்த ரகுநாத நாயக்க மன்னரால் இக்கோயில் கட்டப்பட்டது. ஸ்ரீராமன் என்னும் விஜயநகரப் பேரரசனுக்கு ரகுநாத நாயக்கர் கும்பகோணத்தில் பட்டாபிஷேகம் செய்துவைத்ததன் நினைவாகவே அவ்வரசர் இக்கோயிலைக் கட்டினார். 

வடக்கு நோக்கிய ஐந்து நிலை ராஜகோபுரத்துடன் கம்பீரமாக அமைந்துள்ள கோயில். இராஜகோபுரத்தை அடுத்து உள்ளே நாம் உள்ளே செல்லும்போது முதலில் தென்படுவது அலங்கார மண்டபம். அனைத்து தூண்களிலும் சிற்பங்கள். தாராசுரத்தில் ராஜகம்பீரன் மண்டபத்தை சற்றே நினைவுபடுத்துமளவு உள்ளது இக்கோயிலுள்ள மகாமண்டபத்தில் காணப்படுகின்ற சிற்பங்கள். தாராசுரத்தில் ஒவ்வொரு தூணிலும் மிகச்சிறிய அளவில் நுட்பமாக சிற்பங்கள் அமைந்துள்ளன. மாறாக இங்கோ ஆளுயர சிற்பங்கள் காணப்படுகின்றன. 62 தூண்களில் சிற்ப வேலைப்பாடுகள் மிகுந்து காணப்படுகின்றன.



மேற்கண்ட நான்கு சிற்பங்களும் ஒரே தூணில் நான்கு பக்கங்களிலும் செதுக்கப்பட்டுள்ளன. தூணின் ஒவ்வொரு பக்கத்திலும் இராமர், சீதை, லட்சுமணர், அனுமார் என்ற நிலையில் அமைத்துள்ளனர். இம்மண்டபத்திலுள்ள வேறு சில தூண்களைக் காண்போம்.   





கர்ப்பகிரகத்தைச் சுற்றிவருகின்ற திருச்சுற்றில் இராமாயண ஓவியங்கள் மூன்று வரிசையாக வரையப்பட்டுள்ளன. மூன்று சுற்று நாம் சுற்றி வந்தால் முழுமையாக இராமாயணத்தைப் படித்துவிடலாம். அந்த வகையில் ஓவியங்கள் எழுதப்பட்டுள்ளன. அண்மையில் நடைபெற்ற குடமுழுக்கின்போது ஓவியங்களும் புதுப்பிக்கப்பட்டுள்ளன.



கருவறையில் பட்டாபிஷேகக் கோலத்தில் ராமர், சீதை, லட்சுமணன், சத்ருகனன், அனுமார் இருக்கும் காட்சி நம்மை மெய்சிலிர்க்க வைக்கும்.  வடக்கு நோக்கிய கருவறையில் மூலவர் இராமரும் சீதைப்பிராட்டியும் பீடத்தில் அமர்ந்திருக்க, பரதன் குடை விரிக்க, இலக்குவன் அஞ்சலி பந்தத்துடன் நிற்க, சத்துருக்கனன் வெண்சாமரம் வீச, அனுமன் கையில் வீணையையும், சுவடியையும் ஏந்தியிருக்க அனைவரும் எழுந்தருளியுள்ளனர். இராம பிரான் இடது காலை மடக்கி வலது காலை பூமியில் தொங்கவிட்டு அமர்ந்துள்ள கோலம் மிக அருமை. எல்லா மூர்த்திகளும் பட்டாபிஷேக நிலையில் காட்சி தருவது கண்கொள்ளாக் காட்சியாகும்.

தமிழகத்தில் வேறெங்கும் இல்லாத அளவிற்கு சிறப்பாக அமைந்துள்ள இராமபிரானின் பட்டாபிஷேகக் கோலத்தினை இராமசுவாமி கோயில் வருக. 
(கோயில் திறந்திருக்கும் நேரம் : காலை 6.00-12.30 மணி மாலை 4.00-இரவு 8.30)

திருக்கோயில்கள் வழிகாட்டி, தஞ்சாவூர் மாவட்டம், தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலையத்துறை, 2014
முனைவர் த.சந்திரகுமார், கும்பகோணம் இராமசுவாமி கோயில் ஒரு சிற்பக் கலைக்கூடம், மகாமகம் சிறப்பு மலர் 2004
மகாமகப்பெருவிழா 2014, இந்து சமய அறநிலைய ஆட்சித்துறை, தமிழ்நாடு அரசு, 2004

47 comments:

  1. வணக்கம் முனைவரே நாகேஸ்வரன் கோயிலைப்பற்றிய தகவல்கள் சிறப்பு புகைப்படங்கள் அழகு

    ReplyDelete
    Replies
    1. இது இராமசுவாமி கோயில். நாகேஸ்வரன் கோயிலிலும் ராமாயண சிற்பங்கள் (சிறிதாக) உள்ளன. வருகைக்கு நன்றி.

      Delete
  2. அன்புடையீர்..

    சென்ற ஆண்டு இதே திருக்கோயிலுக்குச் சென்றிருந்த போது - தாங்கள் குறித்திருக்கும் சிற்பங்களை படம் எடுக்க முயன்றேன்..

    அலுவலகத்தின் உள்ளேயிருந்து அலறிக் கொண்டு வந்து என்னைத் தடுத்து மிரட்டினார் - ஊழியர் ஒருவர்..

    இப்போது அங்கே - அனுமதி வழங்குகின்றார்களா?...

    அழகிய படங்களுடன் இனிய பதிவு!..

    ReplyDelete
    Replies
    1. கும்பாபிஷேகத்திற்கு வந்த பலர் புகைப்படமெடுத்தனர். நானும் எடுத்தேன். மறுப்பு தெரிவிக்கப்படவில்லை. வருகைக்கு நன்றி.

      Delete
  3. அருமை அழகு பெருமை வாய்ந்த அருட் சிற்பங்களாக ஸ்ரீராமன் ,அவன் பரிவாரம் அமர்ந்து
    ஆட்சி செய்யும் கோவில். எத்தனையோ மணித்துளிகள் அங்கே உட்கார்ந்திருக்கிறேன்.
    அவன் கருணை என்னைச் சூந்திருக்கிறது. இப்போது மீண்டும் கேட்கக் கொடுத்த முனைவருக்கு மிக நன்றி.

    ReplyDelete
    Replies
    1. சிற்பத்தூண்கள் நிறைந்துள்ள மண்டபத்தில் எவ்வளவு நேரம் அமர்ந்திருந்தாலும் நேரம் போவதே தெரியாது. அவ்வளவு அருமை. வருகைக்கு நன்றி.

      Delete
  4. நாகேஸ்வரன் வரன் கோவில் பற்றிய பதிவு அருமை..

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கு வாழ்த்துக்கும் நன்றி.

      Delete
  5. படங்கள் அருமை.ராமசாமி கோவில்தானே!

    ReplyDelete
    Replies
    1. ராமசாமி கோயில்தான். தங்களின் வருகைக்கு நன்றி.

      Delete
  6. அருமையான பதிவும் அத்துடன் தெளிவான படங்களும் ஐயா!

    மிக்க நன்றியும் வாழ்த்துக்களும்!

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி.

      Delete
  7. அற்புதமான படங்களுடன் கூடிய அழகிய பதிவு ஐயா
    இதே போன்று, துறையூர் அருகேயுள்ள,பெருமாள் மலையில்
    தசாவதார மண்டபம் உள்ளது ஐயா
    பார்த்திரருப்பீர்கள் என எண்ணுகின்றேன்
    ஒவ்வொரு தூணிலும் ஒரு அவதாரச் சிற்பம்
    நரசிம்ம அவதாரத்தில், உருவிய குடல் கூடத் தெளிவாய்தெரியும்
    நன்றி ஐயா
    தம +1

    ReplyDelete
    Replies
    1. துறையூர் பெருமாள் மலை சென்றதில்லை. கோயில் உலாவின்போது செல்ல முயற்சிப்பேன். வருகைக்கும், தகவலுக்கும் நன்றி.

      Delete
  8. அழகாக உள்ளது அய்யா...

    உங்களுடன் ஒரு நாள் சென்று வர வேண்டும் எனும் ஆவல் உள்ளது...

    ReplyDelete
    Replies
    1. நீங்கள் எப்போது வந்தாலும் அழைத்துச செல்ல தயாராக இருக்கிறேன். நன்றி.

      Delete
  9. nice photographs and details. mikka nandri

    ReplyDelete
    Replies
    1. உங்களைப் போன்ற பேரறிஞர்களின் வாழ்த்துக்களே இவை போன்ற என்னுடைய பதிவுகளுக்குக் காரணம். நன்றி.

      Delete
  10. கலைநயம் மிக்க கட்டுரை........... நன்றி

    ReplyDelete
    Replies
    1. தங்களின் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி.

      Delete
  11. சிறப்பான தகவல்கள்..... பகிர்ந்து கொண்டதற்கு நன்றி ஐயா. கும்பகோணம் வரும் ஆசை வந்துவிட்டது...... அடுத்த பயணத்திலாவது அங்கே செல்ல வேண்டும்.

    ReplyDelete
    Replies
    1. வாருங்கள். இக்கோயில் மட்டுமல்ல, பல கோயில்களில் இவ்வாறான கலையழகினையும், இறையுணர்வினையும் காணமுடியும். நன்றி.

      Delete
  12. அழகான படங்களுடன் அருமையாக விளக்கிச்சென்ற விதம் சிறப்புங்க ஐயா.

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி.

      Delete
  13. அழகான படங்களுடன் அருமையாக சொல்லியுள்ளீர்கள்,
    நன்றிங்க ஐயா

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி.

      Delete
  14. நான் ராமசாமிக் கோவிலுக்குச் சென்றிருந்தபோதுபடம் எடுக்க அனுமதிக்கப் படவில்லை. படமெடுத்தால் உம்மாச்சி கோவிச்சுக்கும் போல என்றிருந்து விட்டேன் பகிர்வுக்கு நன்றி.

    ReplyDelete
    Replies
    1. கும்பாபிஷேக நாளன்று பலர் புகைப்படமெடுத்தனர். நானும் எடுத்தேன். நண்பர்கள் பார்க்க வேண்டுமென்பதற்காகப் பதிந்தேன். வருகைக்கு நன்றி.

      Delete
  15. நான் இதுவரை அறிந்திராத ஒரு கோயில் பற்றி அறிந்துகொண்டேன். படங்களும் தகவல்களும் நேரில் பார்த்த அனுபவம் தந்தன. நன்றி ஐயா.

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

      Delete
  16. வணக்கம் முனைவர் ஐயா !

    நாங்க எல்லாம் சென்று பார்க்காத இடம் அருமையான படங்களுடன் தெரியப்படுத்தி இருக்கீங்க சென்று பாரத்தது போல் ஒரு உணர்வு !

    பகிர்வுக்கு நன்றி ஐயா தொடரட்டும் பணிகள் வாழ்க வளமுடன் !
    தம +1

    ReplyDelete
    Replies
    1. தங்களுக்கு அவ்வுணர்வு கிடைத்தமையறிந்து மகிழ்ச்சி. நன்றி.

      Delete
  17. அன்புள்ள அய்யா,

    கும்பகோணம் இராமசுவாமி கோயிலின் சிற்பங்கள் படங்களுடன் நன்றாக விளக்கிச் சொல்லி இருந்தீர்கள். பாராட்டுகள்.

    த.ம. 10.

    ReplyDelete
    Replies
    1. தங்களின் வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி.

      Delete
  18. நன்றி ஐயா. பழைய நினைவுகள் மலர்ந்தன மனதில்

    ReplyDelete
    Replies
    1. அன்பான வாழ்த்து கண்டு மகிழ்ச்சியடைந்தேன். நேரம் கிடைக்கும்போது கருத்து கூற அழைக்கிறேன். தொடர்ந்து கும்பகோணம் கோயில்களைப் பற்றி எழுதவுள்ளேன். நன்றி.

      Delete
  19. பிரமிப்பாக இருக்கிறது எவ்வளவு அழகிய சித்திரங்கள் சிற்பங்கள் நமக்கு இன்னும் பார்க்க கிடைக்கவில்லையே. ம்..ம் இருந்தாலும் தங்கள் பதிவு அக்குறையை தீர்த்துவிட்டது சகோ நன்றி வாழ்த்துக்கள் ...!

    ReplyDelete
    Replies
    1. நாங்கள் கண்ட கலையின் அழகை நண்பர்களும் காணவேண்டும் என்ற நன்னோக்கில் பகிர்ந்தேன். வாழ்த்துக்கு நன்றி.

      Delete
  20. வணக்கம் சகோதரரே.

    கும்பகோணம் ராமசாமி கோவில் சிறப்பை அறிந்தேன். அங்குள்ள சிற்பங்களை கண்ணெதிரே கொண்டு நிறுத்தியது தங்களின் புகைப்படங்கள். அனைத்தும் அருமையாக இருந்தது. ராமாயண ஓவியங்களும் மிகவும் அழகாக தெளிவாகத் தெரிந்தன. மூன்று சுற்றில் இராமாயணத்தை முழுதாக படித்து மன மகிழ்வு அடைவதென்பது எவ்வளவு நல்ல விஷயம்.. தங்களால் ராமரின் கோவில் பற்றிய விபரங்கள் அறிந்து கொண்டமைக்கு மிகவும் நன்றி. உங்களோடு புண்ணியம் தேடி நாங்களும் பயணிப்பது மன நிறைவைத் தருகிறது.

    நன்றியுடன்,
    கமலா ஹரிஹரன்.

    ReplyDelete
  21. மூலவர் சன்னதியில் ராமபிரானை பட்டாபிஷேகக் கோலத்தில் காணக் கண்கோடி வேண்டும். தங்களின் வாழ்த்துக்கு நன்றி.

    ReplyDelete
  22. வணக்கம்
    ஐயா
    தங்களின் பதிவில் இட்டுள்ள படங்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு கருத்தை விளக்கிறது.சிறப்பாக விளக்கம் கொடுத்தமைக்கு நன்றிகள் பல... ஐயா

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும், வாழ்த்துக்கும் நன்றி.

      Delete
  23. அட! கோயிலும் அழகாக இருக்கின்றது அதைச் சொல்லும் உங்கள் படங்களும் அழகு!!!! தகவல்களுக்கு மிக்க நன்றி ஐயா...

    பல கோயில்களில் புகைப்படம் எடுக்க அனுமதி இல்லை ஐயா...துளசி கோபால் அவர்களும், நீங்களும் நிறைய படங்கள் தந்து அழகுறச் செய்கின்றீர்கள் ஐயா...

    ReplyDelete
    Replies
    1. கோயில்களுக்கு வந்த பலர் புகைப்படமெடுத்தனர். நிர்வாகத்தினர் மறுப்பேதும் கூறவில்லை. தங்களது வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி.

      Delete
  24. இப்போது கோவிலில் படம் எடுக்க ஒரு கெமெரா டிக்கெட் வாங்கிக்கலாம். வழக்கம்போல் மூலவரைத் தவிர மற்ற இடங்களில் அனுமதி உண்டு. ரெண்டொருநாளில் ஆல்பம் ஒன்னு ஃபேஸ்புக்கில் போடணும்.

    ReplyDelete