விக்கிபீடியாவில் சூன் 2014இல் கோயில்களைப் பற்றி எழுத ஆரம்பித்தபோது முதலில் கும்பகோணத்திலுள்ள கோயில்களைப் பற்றி எழுத ஆரம்பித்தேன். அவ்வகையில் 6.9.2015 அன்று கும்பகோணத்திலுள்ள சில கோயில்களுக்குச் சென்றதை இப்பதிவில் பகிர்கிறேன். 20.6.2014இல் மேற்கொண்டு ஒரு ஆண்டு நிறைவடைவதை நினைவுகூறும்வகையில் பகிரப்படுகிறது.
தமிழ் விக்கிபீடியாவில் கும்பகோணம் கோயில்கள் வார்ப்புரு |
விக்கிபீடியாவில் கும்பகோணம் கோயில்கள்
இவ்வாறான பயணங்கள் முன்னரே உள்ள கோயில்களைப் பற்றிய கட்டுரைகளை மேம்படுத்தவும், இல்லாத கோயில்களைப் பற்றி புதிதாகக் கட்டுரைகள் எழுதவும், புகைப்படங்களைச் சேர்க்கவும் உதவுகின்றன. 2016 மகாமகத்திற்காக பல கோயில்களில் கும்பாபிஷேகம் ஆகும் நிலையில் அவற்றையும் முடிந்தவரை இணைக்க முயற்சிக்கிறேன். இவ்வாறான முயற்சியின்போது விக்கிபீடியர் ஒருவர் கும்பகோணம் கோயில்கள் என்றொரு வார்ப்பு உருவாக்கலாம் என்று கருத்து தெரிவித்தார். அவர் கூறிய மாதிரியை வைத்துக் கொண்டு உருவாக்கி, அனைத்துக் கோயில்களையும் அதில் ஒருங்கிணைக்க ஆரம்பித்தேன்.
கோயில்களுக்கான ஆதாரங்கள்
கோயில்களுக்கான விவரத்தை அறிய கும்பேசுவரர் திருக்கோயிலும் மகாமகத் திருவிழாவும் (கோ.மு.முத்துசாமிபிள்ளை, தமிழ்ப்பல்கலைக்கழகம், தஞ்சாவூர், முதற்பதிப்பு 1992) என்ற நூலை அடிப்படையாகக் கொண்டேன். நூலாசிரியர் பெருமுயற்சி எடுத்து அந்நூலில் 59 கோயில்களைப் பற்றிக் குறிப்பிட்டுள்ளார். சிலவற்றில் ஒரே இடத்தில் இரு கோயில்களின் பெயர்கள் உள்ளன. சிலவற்றில் தெருவின் பெயரோ, இறைவனின் பெயரோ தெளிவின்றி உள்ளது. முடிந்தவரை தெளிவுபடுத்திக் கொண்டு பயணத்தை மேற்கொண்டு வருகிறேன். அவ்வகையில் நூலாசிரியர் கூறியுள்ளனவற்றில் 50 விழுக்காட்டிற்கும் மேலுள்ள கோயில்களுக்கு இதுவரை சென்றுள்ளேன். இப்பயணத்தின்போது கீழ்க்கண்ட கோயில்களுக்கு சென்றேன்.
கோயில்களுக்கான ஆதாரங்கள்
கோயில்களுக்கான விவரத்தை அறிய கும்பேசுவரர் திருக்கோயிலும் மகாமகத் திருவிழாவும் (கோ.மு.முத்துசாமிபிள்ளை, தமிழ்ப்பல்கலைக்கழகம், தஞ்சாவூர், முதற்பதிப்பு 1992) என்ற நூலை அடிப்படையாகக் கொண்டேன். நூலாசிரியர் பெருமுயற்சி எடுத்து அந்நூலில் 59 கோயில்களைப் பற்றிக் குறிப்பிட்டுள்ளார். சிலவற்றில் ஒரே இடத்தில் இரு கோயில்களின் பெயர்கள் உள்ளன. சிலவற்றில் தெருவின் பெயரோ, இறைவனின் பெயரோ தெளிவின்றி உள்ளது. முடிந்தவரை தெளிவுபடுத்திக் கொண்டு பயணத்தை மேற்கொண்டு வருகிறேன். அவ்வகையில் நூலாசிரியர் கூறியுள்ளனவற்றில் 50 விழுக்காட்டிற்கும் மேலுள்ள கோயில்களுக்கு இதுவரை சென்றுள்ளேன். இப்பயணத்தின்போது கீழ்க்கண்ட கோயில்களுக்கு சென்றேன்.
1) விசுவநாத சுவாமி கோயில் (மேட்டுத்தெரு)
இக்கோயிலின் மூலவர் லிங்கத்திருமேனியாக உள்ளார். அவர் விசுவநாதசுவாமி என்றழைக்கப்படுகிறார். மூலவர் சன்னதியின் வடப்புறம் விசாலாட்சி அம்மன் சன்னதி உள்ளது- மூலவருக்கு முன்பாக உள்ள முன் மண்டபத்தில் வலது புறம் விநாயகர் உள்ளார். இடது புறம் சுப்பிரமணியர் உள்ளார். இங்குள்ள இவ்விநாயகர் செங்கழுநீர் விநாயகர் என அழைக்கப்படுகிறார். விசுவநாதசுவாமி என்பதைவிட செங்கழூநீர் விநாயகர் கோயில் என்றே உள்ளூரில் இக்கோயிலை அழைக்கின்றனர். இக்கோயிலில் நவக்கிரக சன்னதியும், ஆஞ்சநேயர் சன்னதியும் உள்ளன. கருவறை கோஷ்டத்தில் தட்சிணாமூர்த்தி, அடிமுடி காணா அண்ணல், துர்க்கை ஆகியோர் உள்ளனர்.
2) விசுவநாதசுவாமி கோயில் (பேட்டை வினைதீர்த்தத் தெரு)
இத்தெரு தற்போது பேட்டை வினைதீர்த்தத் தெரு என்றழைக்கப்படுகிறது. முதன்மையான கோயிலாக விசுவநாதசுவாமி கோயில் உள்ளது. கருவறையில் லிங்கத்திருமேனியாக மூலவர் உள்ளார். இடது புறம் விசாலாட்சியம்மன் சன்னதி உள்ளது. இருவர் சன்னதிகளுக்கும் முன்பாக நந்தியும், பலிபீடமும் உள்ளன.
தற்போது இக்கோயிலில் குடமுழுக்கிற்கான ஆயத்தப்பணிகள் நடைபெற்றுவருகின்றன. பழைய செங்கல் கட்டுமானம் பார்ப்பதற்கு கண்ணைக் கவரும் வகையில் உள்ளது. இக்கட்டுமானத்தைப் பார்த்தபோது கும்பகோணம் வீரசைவ மடத்தின் அருகேயுள்ள வீரபத்திரர் கோயிலை நினைவூட்டியது.
இக்கோயிலுக்கு எதிரே ஒரு விநாயகர் தனியாக உள்ளார். (வினைதீர்த்த செட்டி அக்கிரகாரம் விசுவநாதசுவாமி மற்றும் ராஜேந்திரபிள்ளையார் கோயில் என நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது, வ.எண்.42, பக்கம்.62).
3)பொய்யாத விநாயகர் கோயில் (நெல்லுக்கடைத்தெரு)
மூலவராக விநாயகர் உள்ளார். அவர் பொய்யாத விநாயகர் எனப்படுகிறார். முன் மண்டபம், கருவறை, திருச்சுற்றுடன் உள்ள கோயில். சற்றே உயர்ந்த தளத்தில் உள்ளது. (காவேரிக் கரைத்தெரு என நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது, வ.எண்.52, பக்கம்.63. காவேரிக்கரைத்தெரு அங்கிருந்து அருகில் உள்ளது. காவேரிக்கரைத் தெருவில் அவ்வாறான பெயரில் கோயில் இல்லை).
4) சஞ்சீவராயசுவாமி கோயில் (மோதிலால் தெரு)
இக்கோயிலின் மூலவராக ஆஞ்சநேயர் உள்ளார். இவர் முன்னர் சஞ்சீவராயசுவாமி என்று அழைக்கப்பட்டிருக்கலாம் என்று கோயிலில் கூறினர். கோயில் சற்று உயர்ந்த தளத்தில் உள்ளது. (சஞ்சீவிராயசுவாமி கோயில் என நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது, வ.எண்.26, பக்கம்.60, மோதிலால் தெருவில் அவ்வாறான பெயரில் கோயில் இல்லை).
5) மன்னார்சாமி கோயில் (பெசன்ட் ரோடு)
பெசன்ட் ரோட்டிலோ அருகிலுள்ள தெருக்களிலோ இவ்வாறான பெயரில் கோயில் இல்லை.
6) ஏகயோகீந்திர சுவாமிகள் கோயில் (சாரங்கபாணி கோயில் மேல சன்னதி)
சாரங்கபாணி கோயிலின் மேல சன்னதி, கீழ சன்னதி உள்ளிட்ட அனைத்து சன்னதிகளிலும் தேடப்பட்டது. அவ்வாறான பெயரில் எவ்வித கோயிலும் இல்லை.
இவ்வாறாகச் சென்றபோது கும்பகோணத்தில் அண்மையில் குடமுழுக்கு நடைபெற்ற கோயில்களுக்குச் செல்லும் வாய்ப்பு கிடைத்தது.
1) விநாயகர் கோயில் (பேட்டை பஞ்சுக்காரத்தெரு)
மூலவராக விநாயகர் உள்ளார். முன் மண்டபம், கருவறை, திருச்சுற்றுடன் உள்ள கோயில். திருச்சுற்றில் துர்க்கையம்மன் சன்னதி உள்ளது. முன் மண்டபத்தில் இடப்புறம் லிங்கத்திருமேனி உள்ளது. அதற்கு முன்பாக நந்தியும் பலிபீடமும் உள்ளன. இக்கோயிலின் குடமுழுக்கு அண்மையில் நடைபெற்றது.
2) விநாயகர் கோயில் (கும்பகோணம் ரயிலடி அருகே)
மூலவராக கற்பக விநாயகர் உள்ளார். இக்கோயிலின் குடமுழுக்கு 21.8.2015 அன்று நடைபெற்றது.
3) அரியலூர் மாரியம்மன் கோயில் (உப்புக்காரத்தெரு)
இக்கோயிலின் மூலவராக அரியலூர் மாரியம்மன் உள்ளார். பச்சைக்காளி, பவளக்காளி, மதுரை வீரன் ஆகியோர் இக்கோயில் வளாகத்தில் உள்ளனர். அண்மையில் இக்கோயிலின் குடமுழுக்கு நடைபெற்றது.
முன்னர் சென்றவை
இவ்வாறான பதிவுகளுக்காக இதற்கு முன்னர் 20.9.2014 (25+) 28.2.2015 (30+) 2.6.2015 (14) ஆகிய நாள்களில் கும்பகோணம் சென்றேன். இவை மூலமாக கும்பகோணம் கும்பேஸ்வரர் கோயிலில் சட்டநாதருக்கு ஒரு சன்னதி, பல இடங்களில் திரௌபதி அம்மன் கோயில்கள், மேட்டுத்தெருவில் உள்ள கோயில் செங்கழுநீர் விநாயகர் கோயில் என அழைக்கப்பட்டாலும் அது ஒரு சிவன் கோயில் என்பன போன்ற பல புதியனவற்றை அறியமுடிந்தது. தொடர்ந்து பயணிப்பேன், எழுதுவேன்.
முன்னர் சென்றவை
இவ்வாறான பதிவுகளுக்காக இதற்கு முன்னர் 20.9.2014 (25+) 28.2.2015 (30+) 2.6.2015 (14) ஆகிய நாள்களில் கும்பகோணம் சென்றேன். இவை மூலமாக கும்பகோணம் கும்பேஸ்வரர் கோயிலில் சட்டநாதருக்கு ஒரு சன்னதி, பல இடங்களில் திரௌபதி அம்மன் கோயில்கள், மேட்டுத்தெருவில் உள்ள கோயில் செங்கழுநீர் விநாயகர் கோயில் என அழைக்கப்பட்டாலும் அது ஒரு சிவன் கோயில் என்பன போன்ற பல புதியனவற்றை அறியமுடிந்தது. தொடர்ந்து பயணிப்பேன், எழுதுவேன்.
------------------------------------------------------------------------
இவ்வுலாவின்போது கும்பகோணம் சிவகுருநாதன் செந்தமிழ் நூல் நிலையம் செல்லும் சென்றேன். அதனைப் பற்றி தனியாக ஒரு பதிவோடு சந்திப்போம்.
------------------------------------------------------------------------
அருமை
ReplyDeleteவருகைக்கு நன்றி.
Deleteஅருமையான தொகுப்பு. தகவல்களுக்கு நன்றி.
ReplyDeleteகும்பகோணம் கோயில்களைப் பற்றி முடிந்தவரை எழுத உத்தேசித்துள்ளேன். நன்றி.
Deleteநல்ல விவரங்கள்.. பலருக்கும் பயனாகும்..
ReplyDeleteநல்வாழ்த்துகள்..
வாய்ப்பிருக்கும்போது சென்று பார்ப்பதற்காக இவ்வாறான பதிவுகள். வருகைக்கு நன்றி.
Deleteஆகா
ReplyDeleteநன்றி ஐயா
வாய்ப்பு கிடைக்கும் பொழுது அவசியம் செல்வேன்
தம +1
ஆர்வத்திற்கு மகிழ்ச்சி. வருகைக்கு நன்றி.
Deleteமிகப் அருமையான தொகுப்பு நன்றிகள், ஐயா
ReplyDeleteமுடிந்தவரை விடுபாடு இருக்கக்கூடாது என எண்ணி முயற்சியில் இறங்கியுள்ளேன். நன்றி.
Deleteஐயா தங்கள் பணி போற்றுதலுக்கு உரியது ..
ReplyDeleteவாழ்த்துகள்
தம +
ஒரே இடத்தில் தகவல்கள் இருக்கவேண்டும் என்ற அடிப்படையிலேயே இவ்வாறான பதிவு செய்ய ஆரம்பித்தேன். நன்றி.
Deleteசிறப்பான கோயில்களை தேடி பகிர்ந்தமைக்கு நன்றி!
ReplyDeleteவருகை புரிந்தமைக்கு நன்றி.
Deleteஅழகான தொகுப்பு படங்களும் அழகு விடயங்களும் அருமை தங்களின் பணி தொடர வாழ்த்துகள்
ReplyDeleteசிறு முயற்சியில் இறங்கியுள்ளேன். தங்களைப் போன்றோரின் வாழ்த்துக்களுடன் நிறைவேற்றுவேன்.
Deleteஅழகான அருமையான தொகுப்பு.
ReplyDeleteவருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
Deleteதங்கள் பதிவுகளாகத் தமிழ், தமிழ் வரலாற்றுச் சான்றுகள் (எ.கா. கோயில்கள்) என எல்லாம் விக்கிபீடியாவில் தொடர்ந்து வரவேண்டும்.
ReplyDeleteசிறந்த பகிர்வு
தொடருங்கள்
தங்களின் விருப்பமே என் விருப்பமும், நோக்கமும். முடிந்தவரை பதிய முயற்சிப்பேன். வாழ்த்துக்கு நன்றி.
ReplyDeleteகோவில் சுற்றுலா அருமை!தெய்வீகமான பகிர்வு
ReplyDeleteதங்களின் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி.
Deleteகும்பகோணத்தில் இருப்பவர்களுக்கே தெரியாத பல தளங்களை அதனதன் சிறப்புகளுடன் பகிர்ந்திருக்கிங்க தொடருங்கள்.
ReplyDeleteநான் பிறந்த மண் கும்பகோணம். இருந்தாலும் பல முக்கியமான கோயில்களைத் தற்போதுதான் பார்க்கும் வாய்ப்பினைப் பெற்றேன். வருகைக்கு நன்றி.
Deleteதங்களின் இந்த ஆன்மீக தொடர் கட்டுரை அனைவருக்கும் பயன்படும் ஒன்று தொடருங்கள் வாழ்த்துக்கள்
ReplyDeleteஇதுவரை 50க்கும் மேற்பட்ட கோயில்கள் சென்றுள்ளேன். முடிந்தவரை அனைத்தையும் பார்க்க முயற்சிக்கிறேன். நன்றி.
Deleteமிக அருமையான தொகுப்பு! இனிய பாராட்டுக்கள்!!
ReplyDeleteவருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி.
Deleteநல்ல ‘விக்கி’ சேவை. வளர்க
ReplyDeleteவருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி.
ReplyDeleteஅருமையான தொகுப்புடன் அழகிய படங்களும் கண்டு
ReplyDeleteமனம் மகிழ்கின்றேன் ஐயா!
பகிர்விற்கு நன்றியுடன் வாழ்த்துக்கள்!
த ம +1
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
DeleteThe Puranam inaugurated in Kumbakonam is Kudanthai Puranam. There is Ottakkoththar library in Vira saiva mutt..Kumbakonam college produced lot of scholars worldwide-famous and called the Cambridge of India. please try to add these also. prof.Dr.T.Padmanaban 22 sep 15
ReplyDeleteகும்பகோணம் தொடர்பாக பிறவற்றைத் தொகுத்துவருகிறேன். தாங்கள் கூறியதன் அடிப்படையில் எழுதுவேன். நன்றி.
Deleteஅருமையான தொகுப்பு !பட்டியலில் 4வது கோவிலும் .தரிசித்தவன், 6 வது சாரங்கபாணி கோவில் பக்கம் ஒரு பெருமாள் ஆலயம் இருக்கு அதையும் தரிசித்தேன் ஐயா ஆனால் அப்போதே அங்கு போக ஆயிரம் கேள்விகள்§ அதுக்கு என்னாச்சு என்று நான் இப்போது அறியேன் அடியேன் அங்கே போனது 2009 விரைவில் அது பற்றிய விபரம் அறிய என் முன்னால் வழிகாட்டியின் கைபேசி இலக்த்தை விரைவில் தொடர்பு கொண்டு அனுப்பி வைக்கின்றேன் அது உங்களின் பணிக்கு உதவியாக இருக்கும்! இலக்கத்தை தனி மெயிலில் அனுப்பி வைக்கின்றேன்.
ReplyDeleteதங்களின் ஈடுபாடு எனது பௌத்த ஆய்வையும், களப்பணியையும் நினைவுபடுத்தியது. தங்களிடமிருந்து விவரம் கிடைத்தபின் மேற்கொண்டு விவரங்களைச் சேகரிப்பேன். நன்றி.
Deleteகும்ப கோணம் கோவில்கள் என்றால் கும்பகோணம் சுற்றியுள்ள கோவில்களும் அடங்குமா.
ReplyDeleteகும்பகோணம் கோயில்கள் என்பன எனது பதிவைப் பொறுத்தவரை கும்பகோணம் நகரிலுள்ள கோயில்களாகும். ஆங்கில விக்கிபீடியாவில் கும்பகோணம் கோயில்கள் என்ற நிலையில் நகரிலுள்ளவை, அண்மையிலுள்ளவை எனத் தலைப்பினை ஒருங்கிணைத்துள்ளேன். தமிழ் விக்கிபீடியாவிலும் இவ்வாறான ஒரு முயற்சியை மேற்கொண்டுள்ளேன். நன்றி.
Deleteதகவல்களுக்கு நன்றி! அய்யா....
ReplyDeleteவருகைக்கு நன்றி.
Deleteவணக்கம்
ReplyDeleteஐயா
அறியாத தகவல்கள் எல்லாவற்றையும் சிறப்பாக தொகுத்து வழங்கியமைக்கு நன்றி ஐயா
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
வருகைக்கும், கருத்துரைக்கும் நன்றி.
ReplyDeleteஅழகான தொகுப்பு படங்களும் அழகு விடயங்களும் அருமை பணி தொடர வாழ்த்துகள்
ReplyDeleteநல்லதொரு தொகுப்பு ஐயா...தகவல்களுக்கு மிக்க நன்றி ஐயா! சீரிய பணி! தொடருங்கள் ஐயா...
ReplyDeleteதொடர்ந்து கோயில் உலா செல்கிறோம். அவ்வப்போது பதிகின்றேன். தங்களது வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி.
Delete