வாழும்போதே வரலாறு படைப்பவர்கள், நம் மனதில் நினைப்பவர்கள் சிலரே. அவ்வாறானோரில் ஒருவரே பிடல் காஸ்ட்ரோ. அவரது கொள்கை, மன உறுதி, பிற நாடுகளுடன் நட்புறவு, தன் நாட்டை அனைத்து நிலைகளிலும் உயர்த்துதல் என்ற நிலைகளில் அவருடைய தனித்துவம் அனைவரையும் கவர்ந்ததாகும். எங்களை ஈர்த்த வெளிநாட்டுத்தலைவர்களில் முக்கியமான இடத்தைப் பெற்றவர்களில் ஒருவர் காஸ்ட்ரோ. மற்றவர்கள் யாசர் அராபத் மற்றும் நெல்சன் மண்டேலா. எங்களது வாசிப்பில் அவரைப் பற்றிய செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து வாசிப்போம்.
1983, புதுதில்லி வருகை
1983இல் புதுதில்லியில் கூட்டுசேரா நாடுகளின் உச்சி மாநாடு நடைபெற்றபோது முதன்முதலாக பிடல் காஸ்ட்ரோ அறிமுகம். அந்த மாநாட்டு ஏற்பாடு தொடங்கி நடைபெற்றது வரை The Hindu நாளிதழில் செய்திகளை முழுமையாக வாசித்தபோதுதான் இவ்வாறாக ஒரு தலைவர் இருக்கிறார் என்பதை அறிந்தேன். கியூப புரட்சிக்குப் பின் 1959இல் காஸ்ட்ரோ தலைமையிலான கியூப சோசலிச அரசு அமைந்த போது அதற்கு ஆதரவுக்கு கொடுத்த முதன்மையான நாடுகள் என்ற நிலையில் இந்தியா முக்கியத்துவம் பெற்றிருந்ததுபற்றி பேசப்பட்ட நிலையில் அவரைப் பற்றித் தெரிந்துகொள்ள ஆரம்பித்தேன். அக்காலகட்டத்தில் தொடர்ந்து சேகுவாராவின் புதுதில்லி வருகை, காஸ்ட்ரோவை நேரு நியூயார்க்கில் கூட்டுசேரா உச்சிமாநாட்டில் சந்தித்தது (1960) என்ற நிலைகளில் அறிந்தேன்.
காஸ்ட்ரோவின் இந்தியாவுடனான வரலாற்று சிறப்புமிக்க உறவானது கூட்டுசேரா இயக்கத்தை வலுவடைய வைத்தது. அதற்கான வித்திட்டவர் அப்போதைய பிரதமர் ஜவஹர்லால் நேரு. ஊடகத்திற்கு அளித்த பேட்டியில் அப்போது காஸ்ட்ரோ, “என்னை முதலில் காணவந்தவர் நேரு. அவருடைய அக்குணத்தை நான் என்றும் மறக்கமாட்டேன். அப்போது எனக்கு வயது 34. என்னைப் பற்றி யாரும் அதிகமாக அறிந்திருக்கவில்லை. மிகவும் இறுக்கத்தோடு இருந்தேன். நேரு என் மனதிற்குத் தெம்பினைத் தந்தார். என்னுடைய இறுக்கம் தளர்ந்தது".
இந்திரா காந்தி பிரதமாக இருந்த காலகட்டத்தில், 1983இல் காஸ்ட்ரோ இந்தியாவிற்கு வந்தபோது அவர் 1970களில் இந்தியாவிற்கு வந்ததைப் பற்றி படித்த நினைவு. 1985இல் ராஜீவ் காந்தி, 2006இல் மன் மோகன் சிங்கும் காஸ்ட்ரோவைச் சந்தித்தது இன்னும் எனக்கு நினைவில் உள்ளது. புதுதில்லியில் நடைபெற்ற கூட்டுசேரா உச்சி மாநாட்டில் அந்த அமைப்பின் தலைமைப்பொறுப்பை திருமதி இந்திரா காந்தியிடம் ஒப்படைத்தார். அந்நிகழ்வு மறக்கமுடியாத ஒன்றாகும்.
2008 காஸ்ட்ரோ ஓய்வு
2008 காஸ்ட்ரோ ஓய்வு
2008இல் பிடஸ் காஸ்ட்ரோ ஓய்வு பெற்றபோது The Hindu நாளிதழில் தொடர்ந்து நான்கு நாட்கள் செய்திகள் வந்தன.பிடலைக் குறித்து தொடர்ந்து செய்திகள் வெளியானதைப் பாராட்டி The Hindu நாளிதழுக்கு கடிதம் எழுதினேன். அக்கடிதம் அவ்விதழில் வெளியாகியிருந்தது.
20.2.2008 : Photograph of Fidel with caption "End of an era" (p.1), Cartoonscape on Castro (p.10). Life and times of Fidel Castro (p.16), Fidel Castro steps down" (p.16) and "Will not accept position: Castro" (p.16)
21.2.2008 : Cuba's future depends on next US President/Ignacio Ramonet (p.11)
22.2.2008 : The one and only Fidel/K/Natwar Singh (p.11)
23.2.2008 : A Hero of our times, Editorial (p.10)
1970களின் இடையில் தொடங்கி The Hindu நாளிதழை நான் படித்து வந்த வகையில் இவ்வாறாக ஒருவரைப் பற்றி தொடர்ந்து நான்கு நாள்கள் செய்திகளோ கட்டுரைகளோ வந்ததாகப் படித்த நினைவு எனக்கு இல்லை.
இவ்வாறாக செய்திகள் வந்த நிலையில் நான் தொடர்ந்து வரவுள்ள Frontline இதழிலும் இவ்வாறாக அதிகமான கட்டுரைகளும் புகைப்படங்களும் வரும் என்று கூறியிருந்தேன். என் குடும்பத்தாரும் நானும் எதிர்பார்த்தவாறே அவ்விதழ் A soldier in the battle of ideas என்ற தலைப்பில் காஸ்ட்ரோவைப் பற்றிய சிறப்பிதழாக The practical moralist (pp.4-15), The interview of Herbert Matthews with Fidel (pp.14-24). Intrviewe of Saeed Naqvi (pp.25-27) என்ற தலைப்பில் கட்டுரைகளையும் பேட்டிகளையும் கொண்டு வெளியானது.
அவ்விதழையும் காஸ்ட்ரோவைப் பற்றியும் நான் எழுதிய கடிதம் அவ்விதழில் வெளியானது. என் கடிதம் வெளியானதைவிட கூடுதலாக மற்றொரு சிறப்பாக Frontline ஆசிரியர் திரு என்.ராம் திருச்சி The Hindu அலுவலகத்திலிருந்து ஒருவரை (Mr S.Narayanan, Sales Executive, The Hindu, Trichy) இதற்காகவே என் இல்லத்திற்கு 10.3.2008 அன்று அனுப்பி என் கடிதத்திற்காக பாராட்டு தெரிவித்திருந்தார்.
2006 மன்மோகன்சிங் சந்திப்பு
இந்தியப்பிரதமர் மன்மோகன்சிங் காஸ்ட்ரோவை சந்தித்தபோது"எக்காலத்திற்கும் பொருந்தும் ஒரு பெருந்தலைவன் முன்னிலையில் இருப்பதை நான் உணர்கிறேன்" என்று கூறியிருந்தார். காஸ்ட்ரோ அவரிடம் "கூட்டுசேரா உச்சி மாநாடு இன்னும் இரு நாள்கள் கழித்து நடத்தப்பட்டிருந்தால் நான் அம்மாநாட்டிற்கு தலைமை தாங்கியிருப்பேன்" என்றார். இருவரும் சேர்ந்து புகைப்படம் எடுத்துக்கொண்டதும் காஸ்ட்ரோ கோடிக்கணக்கான மக்களால் இந்த புகைப்படம் பார்க்கப்படவேண்டும் என்ற தன் ஆவலை மன்மோகன் சிங்கிடம்வெளிப்படுத்தினார்.
Courtesy: The Hindu, 19 September 2006
Courtesy: The Hindu, 19 September 2006 |
2013 அன்சாரி சந்திப்பு
துணை ஜனாதிபதி அன்சாரி காஸ்ட்ரோவை ஹவானாவில் சந்தித்தார். அப்போது பலதரப்பட்ட பொருண்மைகளில் காஸ்ட்ரோ அவருடன் விவாதித்தார். இந்த பயணத்தைப் பற்றியும் மன்மோகன் சிங்கின் பயணத்தைப் பற்றியும் நான் எழுதிய கடிதம் The Hindu இதழின் தளத்தில் வெளியானது.
Courtesy: The Hindu, 31 October 2013
அவரைப் பற்றிய எங்களது வாசிப்பு தொடர்ந்துகொண்டிருந்த நிலையில் ஒபாமாவின் கியூப பயணம் பற்றியும், காஸ்ட்ரோவைக் கொல்ல மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் குறித்தும் தி இந்து இதழில் புளோரிடாவிலிருந்து ஹவானாவிற்கு என்ற தலைப்பில் வெளியான எனது கட்டுரையில் எழுதியிருந்தேன். காஸ்ட்ரோவைப் பற்றி எழுதவேண்டும் என்ற நெடுநாளைய ஆசை அப்போது பூர்த்தியானது. வாசகர் கடிதத்திலிருந்து கட்டுரை எழுதும் அளவிற்கு அந்தத் தலைவனைப் பற்றிய எண்ணங்கள் எங்கள் மனதில் உயர்ந்து அதிக அளவில் இருந்ததை நினைக்கும்போது வியப்பு மேலிடுகிறது.
அவரைப் பற்றிய எங்களது வாசிப்பு அவரை ஒரு மிகச் சிறந்த முன்னுதாரண தலைவராக அடையாளப்படுத்தியது, அந்த வாசிப்பானது இன்னும் தொடர்கிறது. இவரையொத்த, சற்றொப்ப இவரோடு ஒப்புநோக்கும் அளவிலோ இப்பூமிப்பந்தில் எந்தவொரு தலைவரும் இல்லை என்பது அனைவரும் அறிந்த உண்மை. வயது பாரபட்சமின்றி அனைவரும் இவரைப் பாராட்டவும் நினைவுகூறவும் காரணம் அவருடைய மன உறுதியே. சிங்கத்தைப் போன்ற தோற்றம், நடை, பேச்சு என்ற நிலையில் சிம்ம சொப்பனமாகவே விளங்கினார், தன் இறுதி மூச்சு வரையிலும். அந்த மாமனிதருக்கு வணக்கம் செலுத்துவோம்.
பிடல் காஸ்ட்ரோவைப் பற்றிய என்னுடைய பிற பதிவுகள்:
அமெரிக்கா-கியூபா உறவு இப்படியும் ஓர் ராஜதந்திரம், தி இந்து
28 நவம்பர் 2016 அன்று மேம்படுத்தப்பட்டது.
Courtesy: The Hindu, 31 October 2013 |
அவரைப் பற்றிய எங்களது வாசிப்பு அவரை ஒரு மிகச் சிறந்த முன்னுதாரண தலைவராக அடையாளப்படுத்தியது, அந்த வாசிப்பானது இன்னும் தொடர்கிறது. இவரையொத்த, சற்றொப்ப இவரோடு ஒப்புநோக்கும் அளவிலோ இப்பூமிப்பந்தில் எந்தவொரு தலைவரும் இல்லை என்பது அனைவரும் அறிந்த உண்மை. வயது பாரபட்சமின்றி அனைவரும் இவரைப் பாராட்டவும் நினைவுகூறவும் காரணம் அவருடைய மன உறுதியே. சிங்கத்தைப் போன்ற தோற்றம், நடை, பேச்சு என்ற நிலையில் சிம்ம சொப்பனமாகவே விளங்கினார், தன் இறுதி மூச்சு வரையிலும். அந்த மாமனிதருக்கு வணக்கம் செலுத்துவோம்.
பிடல் காஸ்ட்ரோவைப் பற்றிய என்னுடைய பிற பதிவுகள்:
அமெரிக்கா-கியூபா உறவு இப்படியும் ஓர் ராஜதந்திரம், தி இந்து
பிடல் காஸ்ட்ரோவைப் பற்றிய என்னுடைய பிற பதிவுகள்:
அமெரிக்கா-கியூபா உறவு இப்படியும் ஓர் ராஜதந்திரம், தி இந்து
28 நவம்பர் 2016 அன்று மேம்படுத்தப்பட்டது.