சூன் 2017இல் அயலக வாசிப்பில் என்னை ஈர்த்த சில செய்திகளைப் பகிர்ந்துள்ளேன். சில ஆண்டுகளுக்கு முன்னர் ஜெர்மனியிலிருந்து வரும் இதழினைப் படித்துள்ளேன். தற்போது கெல்மத் கோல் இயற்கையெய்தியபோது அவரைப் பற்றி அவ்விதழில் வந்த செய்தி (டெ ஸ்பீகல்), 2018இல் கார்டியன் வடிவம் மாறப்போகின்ற செய்தி (கார்டியன்), ஆகாய விமானத்தில் பிறந்த குழந்தை தொடர்பாக, நம் நாட்டுச் செய்தி வெளிநாட்டு இதழில் வெளிவந்தது (இன்டிபென்டன்ட்) உள்ளிட்ட பல செய்திகள் என்னை ஈர்த்தன. வாய்ப்பிருப்பின் கார்டியன் புது வடிவம் பெறுவது குறித்து தனி பதிவாக எழுதவுள்ளேன்.
1 சூன் 2017
10 குழந்தைகளில் எட்டு குழந்தைகள் முறையற்று அமைக்கப்பட்டுள்ள
காரின் இருக்கைகளால் பாதுகாப்பின்றி இருக்கின்றார்களாம். (நன்றி: சன்) இது நம் நாட்டிற்கும் பொருந்தும் என எண்ணத் தோன்றுகிறது.
5 சூன் 2017
பிரிட்டனில் இன்னும் 15 ஆண்டுகளுக்குள் தானாக இயங்கும் கார்கள் வரவுள்ள நிலையில், இந்த ஆண்டு பிறக்கும் குழந்தைகள் கார் ஓட்டக் கற்றுக்கொள்ள வேண்டிய அவசியம் ஏற்படாது என்று இங்கிலாந்திலுள்ள இன்சூரன்ஸ் நிறுவனத்தின் தலைவர் தெரிவித்துள்ளார். 2032க்குள் இவ்வாறான தொழில்நுட்பம் வளர்ந்துவிடும் என்றும் அதன் காரணமாக இப்போது பிறக்கும் குழந்தைகள் கார் ஓட்டக் கற்றுக்கொள்ளவேண்டிய அவசியம் இல்லை என்றும் அவர் கூறினார். இன்சூரன்ஸ் நிறுவனங்கள் இவ்வாறான புதிய தொழில்நுட்பத்தை எதிர்கொள்ளும் அளவிற்கு தயாராக ஆகவேண்டும் என்று எச்சரித்துள்ள அவர், மனிதனால் இயக்கப்படும் வாகனத்தைவிட கணினியால் இயக்கப்படும் வாகனத்தால் விபத்துகள் நேரிட வாய்ப்புள்ளது என்று கூறியுள்ளார். (நன்றி : இன்டிபென்டன்ட்)
8 சூன் 2017
பெரும்பாலான போலிச் செய்திகளின் (fake news) மூலத்தைக் கண்டுபிடிப்பது சிரமமே. ஆனால் அதற்கும் விதிவிலக்கு உண்டு என்பதை நிரூபிக்கும் செய்தியைப் பற்றி அறிந்துகொள்வோம் (நன்றி : நியூயார்க் டைம்ஸ்) தற்போது இதனையும் கடந்து போலிச் செய்திகளில்கூட எது உண்மையான போலி எது போலியான போலி என்று சொல்லுமளவிற்கு தற்போது விவாதம் நடந்துகொண்டிருப்பது மிகவும் வேதனையே.
13 சூன் 2017
"ருவாண்டா பாராளுமன்றத்தில் 61 விழுக்காட்டினர் பெண்கள். தென் ஆப்பிரிக்கப் பாராளுமன்றத்தில் 40 விழுக்காட்டினருக்கு மேல் பெண்கள். ஏழு ஆப்பிரிக்க நாடுகளில் 30 விழுக்காட்டினருக்கு மேல் பெண்கள். பாராளுமன்றத்தில் 34 விழுக்காட்டினர் பெண்கள் எ்ன்ற வகையில், உலகளவில் 195 நாடுகளில் உகாண்டா 31ஆவது இடத்தில் உள்ளது. இங்கிலாந்துப் பாராளுமன்றம் 30 விழுக்காடு பெண்களைக் கொண்டு 46ஆவது இடத்தில் உள்ளது.................."
"அரசியலில் உயர்ந்த இடத்தைப் பிடிக்க ஆப்பிரிக்கப் பெண்கள் எவ்வளவு சிரமப்பட்டுள்ளனர் என்பதை நான் என் அனுபவத்தில் அறிவேன். உகாண்டா அரசில் இளைய பெண்மணியாகவும், ஆப்பிரிக்காவின் இளைய பெண் மந்திரியாகவும் நான் உள்ளேன். உகாண்டாவிலும், குறிப்பாக ஆப்பிரிக்கா முழுவதிலும் பெண்களே சமூக மற்றும் பொருளாதாரத்தின் முதுகெலும்பாகத் திகழ்கின்றனர். ஆப்பிரிக்காவில் உள்ள சிறிய அளவிலான பண்ணை மற்றும் முறைசாரா வணிகர்களில் 80 விழுக்காட்டினருக்கு மேல் பெண்களே அங்கம் வகிக்கின்றனர். பெரும்பாலும் அவர்களே குடும்பத்தைக் கவனித்துக் கொள்கின்றார்கள். இவ்வாறான முக்கியமான பொறுப்புகளைச் சுமக்கின்ற நிலையில் கூட முடிவெடுக்கவேண்டிய அதிகாரம் என்ற நிலை ஏற்படும்போது நாங்கள் அதிகமே போராட வேண்டியிருக்கிறது......ஆப்பிரிக்காவில் பெண் ஜனாதிபதிகளும், பெண் மந்திரிகளும் அதிக அளவில் இடம் பெறப்போவதை என் வாழ்நாளில் காண்பேன் என்று நான் முழுமையாக நம்புகிறேன். இந்த நிலை மேற்கத்திய நாடுகளுக்கும்கூட பொருந்தும் என்பதே உண்மை..." ஈவ்லின் அனிட்டே, தொழிற்மயமாதல் மற்றும் தனியார் மயமாத்லுக்கான நிதியமைச்சர், உகாண்டா (நன்றி : கார்டியன்)
"அரசியலில் உயர்ந்த இடத்தைப் பிடிக்க ஆப்பிரிக்கப் பெண்கள் எவ்வளவு சிரமப்பட்டுள்ளனர் என்பதை நான் என் அனுபவத்தில் அறிவேன். உகாண்டா அரசில் இளைய பெண்மணியாகவும், ஆப்பிரிக்காவின் இளைய பெண் மந்திரியாகவும் நான் உள்ளேன். உகாண்டாவிலும், குறிப்பாக ஆப்பிரிக்கா முழுவதிலும் பெண்களே சமூக மற்றும் பொருளாதாரத்தின் முதுகெலும்பாகத் திகழ்கின்றனர். ஆப்பிரிக்காவில் உள்ள சிறிய அளவிலான பண்ணை மற்றும் முறைசாரா வணிகர்களில் 80 விழுக்காட்டினருக்கு மேல் பெண்களே அங்கம் வகிக்கின்றனர். பெரும்பாலும் அவர்களே குடும்பத்தைக் கவனித்துக் கொள்கின்றார்கள். இவ்வாறான முக்கியமான பொறுப்புகளைச் சுமக்கின்ற நிலையில் கூட முடிவெடுக்கவேண்டிய அதிகாரம் என்ற நிலை ஏற்படும்போது நாங்கள் அதிகமே போராட வேண்டியிருக்கிறது......ஆப்பிரிக்காவில் பெண் ஜனாதிபதிகளும், பெண் மந்திரிகளும் அதிக அளவில் இடம் பெறப்போவதை என் வாழ்நாளில் காண்பேன் என்று நான் முழுமையாக நம்புகிறேன். இந்த நிலை மேற்கத்திய நாடுகளுக்கும்கூட பொருந்தும் என்பதே உண்மை..." ஈவ்லின் அனிட்டே, தொழிற்மயமாதல் மற்றும் தனியார் மயமாத்லுக்கான நிதியமைச்சர், உகாண்டா (நன்றி : கார்டியன்)
18 சூன் 2017
கெல்மத் ஹோல் (Helmut Kohl, 1930-2017): அரசியல் களத்தில் வெற்றிக்கனிகளை சுவைத்தவர். பெரும்பாலான பொறுப்புகளை இளமையில் ஏற்றவர். ஆனால் உயரமானவர்களில் ஒருவர், ஆம். அவரது உயரம் 6 அடி 4 அங்குலம். அவரது கட்சியில் சேரும்போது அவருக்கு வயது 16. இளம் வயதில் பாராளுமன்றத்தில் கட்சியமைப்பில் தலைமைப்பொறுப்பேற்றார். இளம் வயதில் ஆளுநரானார். அதுபோலவே இளம் வயதில் அதிபரானார். 16 ஆண்டுகள் அதிபராக இருந்த பெருமை பெற்றவர். மற்ற ஜெர்மானியத் தலைவர்களைவிட அதிக காலம் ஆட்சி புரிந்தவர். ஜெர்மனியை ஒன்றுசேர்த்தவர். ஐரோப்பிய ஒருங்கிணைப்பிற்கு அளப்பரிய பங்காற்றியவர். (நன்றி : டெ ஸ்பீகல், ஜெர்மனி) ஜெர்மனி ஒன்றான காலகட்டத்தில் நான் நாளிதழ்களைப் படித்தது இன்னும் நினைவில் உள்ளது. புகைப்படங்களில் இவர் தனித்து உயரமாக, கம்பீரமாகத் தெரிவார். பிற்காலத்தில் சில ஊழல்களில் சிக்கியவர். இருந்தாலும் தன் நாடு, தன் மக்கள் என்ற நிலையில் தனி முத்திரை பதித்தவர்.
20 சூன் 2017
பறந்த விமானத்தில் பிறந்த குழந்தை : நம் நாட்டிதழ்களில் வந்த, நம் நாட்டில் நடந்த செய்தி. இருந்தாலும் வெளிநாட்டு இதழில் அதனைப் பார்த்தபோது வியப்பு அதிகமானது. பறந்துகொண்டிருக்கும் விமானத்தில் பிறக்கும் குழந்தைக்கு அந்த விமானத்தில் அதன் வாழ்நாள் முழுவதும் இலவசமாகப் பயணிக்கும் வாய்ப்பு உண்டு என்று கேள்விப்பட்டுள்ளேன். தற்போது அதனைச் செய்தியாக இன்டிபென்டன்ட் இதழில் வாசிக்கும் வாய்ப்பு கிடைத்து. நடுவானில் பறந்துகொண்டிருந்த ஜெட் ஏர்வேய்ஸ் விமானத்தில் பிறந்த குழந்தை அதன் வாழ்நாள் முழுவதும் இலவசமாக அந்த விமானத்தில் பறக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. அரேபியாவிலிருந்து கொச்சிக்கு வந்து கொண்டிருந்த விமானத்தில் அந்த ஆண் குழந்தை பிறந்துள்ளது. விமானம் மும்பாய்க்கு திருப்பிவிடப்பட்டு சென்று கொண்டிருந்த நிலையில் தாய்க்கு பிரசவ வலி அதிகமாக எடுத்து, குழந்தை பெற்றுள்ளார். விமானத்தில் இருந்த செவிலியர்களின் விரைவான நடவடிக்கை நல்ல பலனைத் தந்துள்ளது. விமானம் மும்பையில் தரையிறங்கும் முன்பே குழந்தை பிறந்துவிட்டது. தற்போது தாயும் சேயும் நலம். (நன்றி : இன்டிபென்டன்ட்)
23 சூன் 2017
2018 முதல் கார்டியன் (Guardian) மற்றும் அப்சர்வர் (Observer) அச்சு இதழ்கள் டேப்ளாய்ட் (tabloid) வடிவில் வெளிவரவுள்ளன. 2005 முதல் பெர்லினர் (Berliner) வடிவில் இவ்விதழ் வெளிவந்துகொண்டிருக்கிறது. பெர்லினர் வடிவம் என்பதானது 315 × 470 மில்லிமீட்டர்/12.4 × 18.5 அங்குலம் அளவைக் கொண்டிருக்கும். அது broadsheetஐவிட சிறியதாகவும், tabloidஐவிட சற்று பெரியதாகவும் இருக்கும். கடந்த ஆறு மாதங்களாக இதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளதாகவும், இந்த வடிவ மாற்றம் காரணமாக கார்டியன் இதழியல் மென்மேலும் வலிமை பெறும் என்றும், வடிவில் மற்றுமே மாற்றம் என்றும் அந்நிறுவனத்தார் கூறியுள்ளனர். (நன்றி : கார்டியன்)
அறியாத சுவாரஸ்யமான செய்திகள்
ReplyDeleteதொடர்ந்து பதிந்தால் மகிழ்வோம்
வாழ்த்துக்களுடன்
அரிய பல ஆங்கிலச்செய்திகளை எங்களுக்கு பகிர்தளித்த முனைவர் அவர்களுக்கு நன்றி
ReplyDeleteதொடரட்டும் இந்த அரும்பணி.
நல்லதொரு செய்தித் தொகுப்பு. நன்றி ஐயா.
ReplyDeleteதொகுப்பு மிகவும் அருமை ஐயா... நன்றி...
ReplyDeleteஅறியாதன! அறியச் செய்தீர்
ReplyDeleteநல்ல தொகுப்பு.
ReplyDeleteஅயல் நாட்டு செய்திகளை அறிய தந்தமைக்கு நன்றி.
ரசிக்கும்படியான தொகுப்பு. பாராட்டுக்கள். த ம.
ReplyDeleteஎன்னை கவர்ந்தது கெல்மத் ஹோல் அவர்களது தகவல்கள்.
ReplyDelete16 ஆண்டுகள் அதிபராக இருந்த பெருமை பெற்றவர்.
ஒரு சர்வாதிகார நாட்டில் அல்ல, மிக சிறந்த ஜனநாயக நாட்டில் தொடர்ந்து வெற்றி பெற்று 16 ஆண்டுகள் அதிபராக இருப்பது என்பது சாதனை.
//பிற்காலத்தில் சில ஊழல்களில் சிக்கியவர்.//
ஊழல் என்றாலே நம் ஊர் அரசியல் தலைவர்கள் போலவே ஊரை கொள்ளையடித்து தங்களது வீட்டில்லுள்ள பாதாள பண அறைகளை நிரப்புபவர்கள் என்று இல்லை.
ஒவ்வொரு கட்சிக்கும் நன்கொடை பெற்றுக் கொள்ளும் உரிமை இருந்தது ஜெர்மனிய நாட்டில். ஆனால் யாரால் கட்சிக்கு நன்கொடை தரப்பட்டது என்ற விபரம் அரசுக்கு தெரியபடுத்த வேண்டும். நன்கொடை கொடுத்த நிறுவனத்தின் வேண்டுகோளின்படி அவர்கள் விபரத்தை கெல்மத் ஹோல் கொடுக்கவில்லை. பின்பும் கொடுக்க மறுத்து விட்டார்.
இன்னும் நிறைய செய்திகளைத் தமிழில் தாருங்கள் ,அறியாதன நாங்கள் அறிய எதுவாக இருக்கும் :)
ReplyDeleteஇம்மாதிரி அயலக வாசிப்புகள் மொழிக்காவா நிகழ்வுகளுக்காகவா சார்
ReplyDeleteஇவையனைத்தும் நிகழ்வினைச் சார்ந்தனவே. தமிழில் இவை வாசகர்களைச் சென்றடையவேண்டும் என்ற நன்னோக்கில் மொழிபெயர்த்து எழுதுகிறேன். மொழிநடையை அதிகம் ரசிப்பேன் ஐயா.
Deleteநல்ல செய்தித் தொகுப்பு ஐயா!
ReplyDeleteஅரிய தகவல்
ReplyDeleteஉரிய அழகு நடையில்
அருமை!
அறியாத செய்திகளின் தொகுப்பு
ReplyDeleteநன்றி ஐயா
கனடா பாராளுமன்றத்தில் நாற்பது விழுக்காட்டினர் பெண்களே. அமைச்சரவையில் ஐம்பது விழுக்காட்டினர் பெண்கள்.
ReplyDeleteகார்டியன் இதழின் லிங்க்கை எனக்கு அனுப்ப இயலுமா?
African politics is a man's world – but we women are still blazing a trail | Evelyn Anite என்ற தலைப்பில் 12 சூன் 2017அன்று கார்டியன் இதழில் வெளியான கட்டுரையின் இணைப்பு இதோ ஐயா : https://www.theguardian.com/global-development/2017/jun/12/african-politics-blazing-a-trail-african-women-leaders-network-evelyn-anite?CMP=twt_gu
Deleteஅருமை
ReplyDelete