15 July 2017

திருக்கட்டளை சுந்தரேஸ்வரர் கோயில்

புதுக்கோட்டை மாவட்டம் புகழ் பெற்ற சமணப் படுகைகளையும், அழகான கற்றளிகளையும் கொண்ட பெருமையுடையதாகும். அவற்றில் முக்கியமான கோயில் திருக்கட்டளை சோமசுந்தரேசுவரர் கோயிலாகும். புதுக்கோட்டைக்குக் கிழக்கே 5 கிமீ தொலைவில் திருவரங்கம் வட்டத்தில் உள்ள திருக்கட்டளை என்னுமிடத்தில் இக்கோயில் அமைந்துள்ளது. அண்மையில் இக்கோயிலுக்குச் செல்லும் வாய்ப்பு கிடைத்தது.

இக்கோயிலின் விமானத்தைப் பார்க்கும்போது கும்பகோணம் நாகேஸ்வரன் கோயில், புள்ளமங்கை பிரம்மபுரீஸ்வரர் கோயில், நார்த்தாமலை விஜயாலயசோழீச்சரம், திருவையாறு சப்தஸ்தானக் கோயில்களில் சில கோயில்கள் உள்ளிட்ட கோயில்கள் நம் நினைவிற்கு வரும். மிகவும் சிறிய கோயிலாக இருந்தாலும் கோயிலுக்குச் சென்று அந்த விமானத்தையும், திருச்சுற்றையும் பார்க்கும்போது அவற்றையே பார்த்துக்கொண்டிருக்க வேண்டும் என்ற எண்ணம் ஏற்படும்.

திருக்கட்டளை என்பது கற்றளி என்ற சொல்லிலிருந்து வந்ததாகவும் அவ்வகையில் இக்கோயில் அப்பெயரைப் பெற்றதாகவும் கூறுவர். கருங்கற்கட்டுமானத்தில் பல நூற்றாண்டுகளாக இருந்து நம் பெருமையினை உரக்கக் கூறிக்கொண்டிருக்கும் இக்கோயில் ஆதித்த சோழன் (கி.பி.870-907) காலத்தைச் சார்ந்ததாகக் கூறுவர். 

புதுக்கோட்டை மாவட்டத்தில் கற்றளிகள் அதிகமாக இருந்தாலும், இக்கோயில் அமைப்பில் வித்தியாசமானதாகும். பரிவார வகைக் கோயிலாகக் கூறப்படுகின்ற இக்கோயிலில் மூலவர் நடுவே இருக்க திருச்சுற்றில் சுவரை ஒட்டிய நிலையில் சிறிய சன்னதிகளில் பிற தெய்வங்களைக் காண முடியும்.  சுவரை ஒட்டியமைந்துள்ள ஒவ்வொரு சன்னதியும் ஒவ்வொரு சிறு கோயிலாகக் காணப்படுகிறது. அடுத்தடுத்து இவ்வாறாக சன்னதிகள் அமைந்துள்ளன. கோயிலுக்கு முன்பாக குளம் அமைந்துள்ளது. 
தமிழகத்தில் இதுவரை இவ்வாறான அமைப்பில் கோயிலைப் பார்க்காத நிலையில், இங்கு சென்ற அனுபவம் மறக்கமுடியாததாகும். இக்கோயிலுக்குச் செல்வதற்கான வாய்ப்பை உண்டாக்கிக் கொள்வோம். தமிழகத்தில், புதுக்கோட்டை மாவட்டத்தில் முற்றிலும் வித்தியாசமான பாணியில் அமைந்துள்ள இக்கோயிலைக் காணச் செல்வோம், வாருங்கள். 

இக்கோயிலுக்குச் சென்று வரும்போது அருகிலிருந்த திருவரங்குளம் அரங்குளநாதசுவாமி கோயிலுக்கும் சென்றோம். 

கோயிலுக்குச் செல்லும் முன்பாக இவ்விரு கோயில்களைப் பற்றியும் விக்கிபீடியாவில் பதிவினைத் தொடங்கினேன். கோயிலுக்குச் சென்றுவந்தபின் புகைப்படங்களைச் சேர்த்து அவற்றை மேம்படுத்தினேன்.  

விக்கிபீடியாவில் திருக்கட்டளை சுந்தரேசுவரர் கோயில்

விக்கிபீடியாவில் திருவரங்குளம் அரங்குளநாதர் கோயில்

17 comments:

 1. அழகிய கோயிலைக் கண்முன் நிறுத்திய பதிவு..

  மேலதிகச் செய்திகளும் அருமை..

  ReplyDelete
  Replies
  1. எங்கள் ஊர்
   நன்றி

   Delete
 2. கண்ணைக்கவரும் புகைப்படங்களின் தரிசனம் குறிப்புகள் தந்த முனைவர் அவர்களுக்கு நன்றி.
  த.ம

  ReplyDelete
 3. என்ன அருமையான கட்டிடக்கலை....

  ReplyDelete
 4. திருகட்டளை சோமசுந்தரேசுவரர் தரிசனம் கிடைத்தது. நன்றி.

  ReplyDelete
 5. அறியாத கோயில். படங்களும் தகவல்களும் அருமை....கோயில் அழகு....பகிர்விற்கு நன்றி ஐயா...

  துளசி, கீதா

  ReplyDelete
 6. மிக அழகிய திருக்கோயில்! மூலவரைச் சுற்றி சிறு சிறு அழகிய கோவில்கள்! புதுக்கோட்டையிலிருந்து எந்த ஊருக்குச் செல்லும் வழியில் இந்தக் கோவில் அமைந்துள்ளது?

  ReplyDelete
  Replies
  1. புதுக்கோட்டை நகரிலிருந்து மிக அருகில், 4 கிமீ தொலைவில் அமைந்துள்ளது.

   Delete
 7. தங்களின் பயணம் தொடரட்டும் ஐயா
  நன்றி

  ReplyDelete
 8. அழகான கோவில்கள்.... தொடரட்டும் உங்கள் பக்தி உலா... எங்களுக்கும் இப்படிப் பதிவுகள் கிடைக்குமே!

  ReplyDelete
 9. திருக்கட்டளை சுந்தரேஸ்வரர் கோவில் ரொம்ப அழகா இருக்கு. மதிலிலும் சிறிய சன்னிதகள் அருமை.

  ReplyDelete
 10. படங்களும் பதிவில் காணப்படும் செய்திகளும் அருமை

  ReplyDelete
 11. ஏன் எங்களிடம் சொல்லவில்லை
  சொல்லிவிட்டு வந்திருக்கலாமே
  திருக்கட்டளையைப் பொறுத்தவரை அதற்கு அருகே இருக்கும் முதுமக்கள் தாழிகள் ரொம்ப முக்கியமானவை
  பார்த்தீர்களா
  குரங்கு கோட்டை என்று சொல்வார்கள்
  சந்திக்க முடியாது போனது வருத்தம்தான்

  ReplyDelete
  Replies
  1. புதுக்கோட்டையில் உறவினரின் திருமணத்திற்குச் சென்றபோது இடையில் இருந்த குறைவான நேரத்தில் கோயில்களுக்கு மட்டும் சென்றுவந்தோம். வேறு எங்கும் செல்லவில்லை. அடுத்த முறை அவசியம் தெரிவித்துவிட்டு வருவேன். பொறுத்துக்கொள்க.

   Delete
 12. விக்கி பீடியாவில் உங்களின் கோவில் உலா கண்டு மகிழ்ந்தேன் :)

  ReplyDelete
 13. திருக்கட்டளை கோவில் பார்த்தது இல்லை ஒரு முறை போக வேண்டும்.
  படங்கள் அழகு.

  ReplyDelete