முனைவர் வீ.ஜெயபால் அவர்கள் குழுவினரோடு 15 ஜூலை 2017
அன்று திருக்கலயநல்லூர் அமிர்தகலசநாதர், மருதாநல்லூர் கருக்குடிநாதர், சிவபுரம் சிவகுருநாதர்,
அரிசிற்கரைப்புத்தூர் சுவர்ணபுரீஸ்வரர், திருநரையூர்ச்சித்தீஸ்வரம் சித்தநாதர், திருப்பந்துறை
சிவாநந்தேஸ்வரர், வாஞ்சியம் வாஞ்சிநாதர், திருவீழிமிழலை, அன்னியூர் அக்னிபுரீஸ்வரர்,
கருவேலி சற்குணேஸ்வரர், குடவாசல் கோணேஸ்வரர், கருவாய்க்கரைப்புத்தூர் சொர்ணபுரீஸ்வரர்,
நாலூர் மயானம் பலாசவநாதர், திருச்சேறை சாரபரமேஸ்வரர், திருநாகேஸ்வரம் நாகநாதர் கோயில்
ஆகிய கோயில்களுக்குச் சென்றோம். கடந்த பல ஆண்டுகளாக செல்கின்ற கோயில் உலாவின்போது ஒரே
நாளில் 15 தேவாரத் தலங்களைப் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது தற்போதுதான். அவற்றில்
நாம் முதன்முதலாகச் செல்லும்கோயில்களுக்கு அழைக்கிறேன், வாருங்கள். திருவீழிமிழலை, நாலூர் மயானம், திருச்சேறை, திருநாகேஸ்வரம்
கோயில்கள் முந்தைய கோயில் உலாக்களின்போது நாம் பார்த்தவையாகும்.
திருக்கலயநல்லூர் (சாக்கோட்டை) அமிர்தகலசநாதர்
கோயில்
அமிர்தகலசநாதர்-அமிர்தவல்லி
(சுந்தரர்) (கும்பகோணம் மன்னார்குடி சாலையில் உள்ளது). மகாமகத்தின்போது தீர்த்தவாரி
தருகின்ற கோயில்களில் இக்கோயிலும் ஒன்றாகும். பல முறை இக்கோயிலுக்குச் சென்றுள்ளேன். எங்கள் உலாவின் முதல் கோயில். சிவ புராணம் பாடி, உலா தொடங்கியது.
மருதாநல்லூர் (கருக்குடி) கருக்குடிநாதர் கோயில்
கருக்குடிநாதர்-கல்யாண நாயகி (ஞானசம்பந்தர்) (திருக்கலயநல்லூருக்கு மிகவும் அருகில் உள்ளது)
அரிசிற்கரைப்புத்தூர் சுவர்ணபுரீஸ்வரர் கோயில்
சுவர்ணபுரீஸ்வரர் –சௌந்தரநாயகி (ஞானசம்பந்தர், நாவுக்கரசர், சுந்தரர்) படிக்காசு வைத்த பரமர், படிக்காசுநாதர்–அழகாம்பிகை கும்பகோணம் நாச்சியார்கோயில் பாதையில் திருநறையூருக்கு முன் உள்ள தலம். கும்பகோணத்திலிருந்து 7 கிமீ தொலைவில் உள்ளது.
அன்னியூர் அக்னிபுரீஸ்வரர் கோயில்
அக்னீஸ்வரர் பார்வதியம்மை (நாவுக்கரசர்) திருவீழிமிழலையிலிருந்து வடக்கே 4 கிமீ கும்பகோணம் காரைக்கால் சாலையில் எஸ்.புதூர் வந்துஅங்கிருந்து தெற்கில் திரும்பி வட மட்டம் சென்று அதே பாதையில் மேலும் சென்றால் கோயிலை அடையலாம்.
சிவபுரம்
சிவகுருநாதர் கோயில்
சிவகுருநாதசுவாமி-சிங்காரவல்லி (ஞானசம்பந்தர்,அப்பர்)
கும்பகோணம் திருவாரூர் சாலையில் கும்பகோணத்தை அடுத்த சாக்கோட்டை சென்று அங்கே பிரியும்
சாலையில் 2 கிமீ சென்றால் இத்தலத்தை அடையலாம்.
திருநறையூர்ச்சித்தீஸ்வரம் சித்தநாதர் கோயில்
சித்தநாதேஸ்வரர்-அழகம்மை (ஞானசம்பந்தர், சுந்தரர்) கும்பகோணத்திற்குத் தென்கிழக்கே 8 கிமீ தொலைவில் உள்ளது. கும்பகோணம் நாச்சியார்கோயில் சாலையில் வந்து நாச்சியார் கோயிலின் முற்பகுதியான திருநறையூரில் இறங்கி கோயிலை அடையலாம்.
திருப்பந்துறை சிவாநந்தேஸ்வரர் கோயில்
சிவானந்தேஸ்வரர்-மங்களாம்பிகை (ஞானசம்பந்தர்) காரைக்கால் கும்பகோணம் சாலையில் நாச்சியார் கோயிலை அடுத்து எரவாஞ்சேரி பாதையில் 1 கிமீ தொலைவில் உள்ளது.
வாஞ்சியம் வாஞ்சிநாதர் கோயில்
வாஞ்சிநாதேஸ்வரர்-மங்களநாயகி, (ஞானசம்பந்தர், நாவுக்கரசர், சுந்தரர்) நன்னிலம் குடவாசல் சாலையில் உள்ளது. திருவாரூர் குடவாசல் சாலையிலும் வரலாம். நன்னிலத்திற்குத் தெற்கே 10 கிமீ தொலைவில் உள்ளது. மூலவரைப் பார்க்கச் செல்ல உள்ளே செல்லும்போதே கையைக் காட்டி முதலில் எமதர்மராஜன் சன்னதியைப் பாருங்கள் என்று கூறுகின்றார்கள். பட்டீஸ்வரம், திருநாகேஸ்வரம், திருநள்ளாறு போன்ற பல கோயில்களில் மூலவர் சன்னதியின் பக்கம் பலர் செல்வதேயில்லை.
கருவேலி சற்குணேஸ்வரர் கோயில்
சற்குணநாதேஸ்வரர்-சர்வாங்கநாயகி (நாவுக்கரசர்) கும்பகோணத்திலிருந்து 20 கிமீ தொலைவில் பூந்தோட்டம் செல்லும் சாலையில் உள்ளது.
கோணேஸ்வரர்-பெரியநாயகி (ஞானசம்பந்தர்) திருவாரூரிலிருந்து 16 கிமீ கும்பகோணத்திலிருந்து 15 கிமீ திருவாரூர் கும்பகோணம் சாலையில் உள்ளது. அழகான மாடக்கோயில்.
கடுவாய்க்கரைப்புத்தூர் (ஆண்டாங்கோயில்) சொர்ணபுரீஸ்வரர் கோயில்
சொர்ணபுரீஸ்வரர்-சொர்ணாம்பிகை (நாவுக்கரசர்) குடவாசல் வலங்கைமான் சாலையில் குடவாசலிலிருந்து 5 கிமீ தொலைவில் உள்ளது.
நன்றி
எங்களை உலா அழைத்துச்சென்ற சித்தாந்த வித்தகர் முனைவர் வீ.ஜெயபால் அவர்களுக்கும், உடன் வந்தோருக்கும் நன்றி.
துணை நின்றவை
நன்றி
எங்களை உலா அழைத்துச்சென்ற சித்தாந்த வித்தகர் முனைவர் வீ.ஜெயபால் அவர்களுக்கும், உடன் வந்தோருக்கும் நன்றி.
துணை நின்றவை
- வீ.ஜெயபால், சைவ நால்வரால் பாடல் பெற்ற திருத்தலங்கள், சைவ சித்தாந்த ஆய்வு மையம், 28 அம்மையப்பா இல்லம், கோவிந்தராஜ் நகர், சீனிவாசபுரம் விரிவாக்கம், தஞ்சாவூர் 613 009, டிசம்பர் 2014
- சிவ.ஆ.பக்தவச்சலம், தேவாரத் திருத்தலங்கள் வழிகாட்டி, குடியேற்றம், வேலூர் மாவட்டம், 2005
தங்களின் பயணங்கள் தொடரட்டும் ஐயா
ReplyDeleteதம1
நால்வரால் பாடப் பெற்ற திருத்தல்ங்களை மீண்டும் தரிசனம் செய்தேன் உங்கல் தளத்தில்.
ReplyDeleteஎவ்வளவு கோவில்கள் மயிலாடுதுறையில் இருக்கும் போது பார்த்து இருக்கிறோம் . அப்போது காமிரா கிடையாது, கார் கிடையாது, பஸ்ஸில் குழந்தைகளை தூக்கி கொண்டு தரிசனம் செய்து இருக்கிறோம்.
இப்போது நிறைய போக்குவரத்து வசதிகள் வந்து இருக்கிறது பல் கோயில்களுக்கு.
போக்குவரத்து வசதி இல்லாமல், ஆட்கள் வர காத்து இருந்த கோயில்கள் அப்போது. இப்போது நிறைய மாற்றங்கள்
சிவ. ஆ. பக்தவச்சலம் அவர்கள் தொகுத்த தமிழ் வேதத் திரட்டு புத்தகம் நான் தினம் படிக்கும் புத்தகம்.
திரு பக்தவச்சலம் அவர்களை மயிலாடுதுறையில் நடக்கும் சமய விழாக்களில் பார்த்து இருக்கிறேன் அவரை.
நல்ல துணை கோவில்கள் சென்று வர வாழ்த்துக்கள்.
த.ம 2
ReplyDeleteதங்களின் கோயில் பயணம் அசர வைக்கிறது ஐயா...
ReplyDeleteதங்களது தரிசன விடயங்களை எங்களுக்கும் பகிர்ந்தமைக்கு நன்றி
ReplyDeleteகோயில் படங்களும் தகவல்களும் அருமை! எப்படிச் செல்வது என்ற குறிப்புகளையும் பார்த்துக் கொண்டோம்...பகிர்விற்கு மிக்க நன்றி.
ReplyDeleteஅத்தனையும் பார்க்க வேண்டிய கோவில்கள். குறிச்சு வச்சுக்குறேன். நேரம் கிடைக்கும்போது போய் வருகிறேன். நன்றிப்பா
ReplyDeleteகும்பகோணத்தை நினைத்தாலே கரம் குவிந்து மனம் குழைகிறது. அடுத்தடுத்து எத்தனை கோயில்கள்?..
ReplyDeleteகோயில்கள் நிறைந்த ஊர்களில் குடியிருக்க கொடுத்து வைத்திருக்க வேண்டும், ஐயா!
திருத்தலச் சுற்றுலா அருமை..
ReplyDeleteவாழ்க நலம்..
நீங்கள் குறிப்பிட்டுள்ள திருத்தலங்கள் பல நான் கேட்டறியாதவை; பார்த்தறியாதவை. பார்க்க வேண்டும் என்னும் ஆவலைத் தூண்டுவதாய் உங்கள் பதிவு உள்ளது.
ReplyDeleteஎத்தனை கோவில்கள்....
ReplyDeleteஇனிமையான உலா.... தொடரட்டும். நானும் தொடர்கிறேன்.
Super..
ReplyDeleteஇது போன்ற இடங்களுக்குச் சென்று வரும் போதெல்லாம் இன்னமும் இந்த இடங்களை நிர்வாகம் செய்பவர்கள் சிறப்பாகச் செய்யலாமே? என்ற எண்ணம் என் மனதில் உருவாகும்.
ReplyDeleteஅழகான கோவில்கள். வாய்ப்பு கிடைக்கும்போது நிச்சயம் பார்க்கவேண்டும். தகவல்களுக்கு நன்றி ஐயா.
ReplyDeleteதங்களின் தமிழ்ப்பணி தொடர்வதாகுக!
ReplyDeleteஇதில் எந்த ஊரும் கேள்வி பட்டது கூட இல்லை வாழ்த்துகள் ஐயா.
ReplyDeleteஆலய தரிசனத்திற்கு நன்றி
ReplyDeleteஒரே நாளில் சென்ற கோவில்களா . ஒவ்வொரு கோவிலிலும் அவர்கள் பாடிய பாடல்களைபாடுவீர்களா கருவிலி சற்குணேஸ்வரர் கோவிலுக்கு கும்பகோணத்தில் இருந்து சென்று வந்தது நினைவுக்கு வருகிறது
ReplyDeleteமுதல் கோயிலில் சிவ புராணம் பாடி உலாவினைத் தொடங்குவோம். தொடர்ந்து பயணிப்போம்.
ReplyDelete