சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்னர் ப்ரண்ட்லைன் ஆங்கில இதழில் கழுகுமலை வெட்டுவான் கோயிலைப் பற்றிய ஒரு கட்டுரையினைப் படித்தேன். அதில் கட்டட அமைப்பு மற்றும் சிற்பங்களைப் பார்த்த முதல் அக்கோயிலைப் பார்க்கவேண்டுமென்று ஆவல் எழுந்தது. அந்த விருப்பம் அண்மையில் நிறைவேறியது.
தூத்துக்குடி மாவட்டத்தில் கோவில்பட்டியிலிருந்து 22 கிமீ தொலைவில் உள்ள இக்கோயில் கி.பி.800இல் கட்டப்பட்டதாகக் கூறுவர். மலைப்பகுதியில் மலையினைக் குடைந்து அமைக்கப்பட்ட இக்கோயிலினைக் காண மலையில் ஏறிச் செல்ல வேண்டும். சிறிது தூரத்தில் இருந்து பார்க்கும்போது கோயிலே கண்ணுக்குத் தெரியாது. சுமார் 10 அடி கீழே இறங்கி இக்கோயிலைப் பார்க்கவேண்டும். வெளியிலிருந்து பார்க்கும்போது பாறையைப் போன்றுதான் தெரியும்.
மலைப்பாறையில் 'ப' வடிவிற்கு சதுரமாக 7.50 மீட்டருக்குச் சதுரமாக வெட்டி அதில் கோயிலை குடைந்துள்ளனர்.
மலையில் குடையப்பட்டுள்ள நிலையில் அமைந்துள்ள இக்கோயிலின் சிற்பங்கள் மிகவும் நுணுக்கமாக அமைக்கப்பட்டுள்ளன. பிரம்மா, விஷ்ணு, சிவன், தேவ கன்னியர் உள்ளிட்ட பல சிற்பங்கள் இங்கு காணப்படுகின்றன. ஒரு நிலையில் பார்க்கும்போது இக்கோயில் முற்றுப்பெறாத ஒரு கோயிலாகக் காணப்படும்.
பள்ளமான இடத்தில் காணப்படும் கோயில் |
மலைப்பாறையில் 'ப' வடிவிற்கு சதுரமாக 7.50 மீட்டருக்குச் சதுரமாக வெட்டி அதில் கோயிலை குடைந்துள்ளனர்.
மலையில் குடையப்பட்டுள்ள நிலையில் அமைந்துள்ள இக்கோயிலின் சிற்பங்கள் மிகவும் நுணுக்கமாக அமைக்கப்பட்டுள்ளன. பிரம்மா, விஷ்ணு, சிவன், தேவ கன்னியர் உள்ளிட்ட பல சிற்பங்கள் இங்கு காணப்படுகின்றன. ஒரு நிலையில் பார்க்கும்போது இக்கோயில் முற்றுப்பெறாத ஒரு கோயிலாகக் காணப்படும்.
உமாமகேஸ்வரர் |
ஒவ்வொரு கோணத்திலும், ஒவ்வொரு திசையிலும் பார்க்கும்போது சிற்பங்களின் அழகினை உணரலாம். 122 சிற்பங்கள் இக்கோயிலில் உள்ளன. சிவன் கோயிலை என்பதை உணர்த்துகின்ற வகையில் நான்கு புறமும் நந்தியைக் காணமுடியும்.
மலைப்பகுதியில் துண்டிக்கப்பட்டுள்ள நிலையிலை உச்சியிலிருந்து பார்க்கும்போது இக்கோயில் பள்ளத்தில் இருப்பதைப் போலக் காட்சியளிக்கும். இதுபோன்ற கற்கோயில்
தமிழகத்தில் வேறெங்கும் காணப்படவில்லை. மகாராட்டிர மாநிலத்திலுள்ள ராஷ்டிரகூடர்களால் அமைக்கப்பட்ட எல்லோராவிலுள்ள கைலாசநாதர் கோயில் போல் இக்கோயில் உள்ளதால் இக்கோயிலை தென்னகத்து எல்லோரா என்றும் கூறுகின்றனர்.
பூத கணங்கள் |
கருவறையில், பின்னாளில் வைக்கப்பட்டுள்ள விநாயகர் |
- கழுகுமலை, விக்கிபீடியா
- கல்லும் கலை சொல்லும் கழுகுமலை, தினமலர், 14 ஜுன் 2011
- முன்னோர்களின் வாழ்வியல் முறையை பறை சாற்றும் கழுகுமலை, தினமணி, 3 ஏப்ரல் 2013
- தமிழகத்தின் தல வரலாறுகளும் பண்பாட்டுச் சின்னங்களும்
- Kazhugumalai, Times of India, Chennai, 16 October 2012
-----------------------------------------------------------------------------------------
ஆங்கில விக்கிபீடியாவில் முதல் பக்கத்தில் என் கட்டுரையிலிருந்து.....
In Wikipedia's first page, under the column Did
you know? (DYK) among others a sentence from the article written by me under
the title Thukkachi Abatsahayesvar temple has been quoted: .."that the
Thukkachi Abatsahayesvar temple (pictured) was greatly expanded by Vikrama
Chola after he was supposedly cured of vitiligo by praying to the presiding
deity for 48 days?" (20 Aug 2017)
Wikipedia, First page, Did you know? 20 Aug 2017 |
Wikipedia, First page, Did you know? 20 Aug 2017 |
ஆங்கில விக்கிபீடியாவில் 20 ஆகஸ்டு 2017 அன்று முதல் பக்கத்தில், நான் ஆரம்பித்துள்ள துக்காச்சி ஆபத்சகாயேஸ்வரர் கோயில் கட்டுரையிலிருந்து
ஒரு வரி மேற்கோளாக, நான் எடுத்துள்ள புகைப்படத்துடன் உங்களுக்குத் தெரியுமா? பகுதியில்
இடம் பெற்றுள்ளது என்பதைப் பகிர்வதில் மகிழ்கிறேன். முதன்முதலாக இடம் பெற்ற என்னுடைய இத்தகவலை 6635 பேர் பார்த்ததாகக் கூறி மறு நாள் விக்கிபீடியா மூலமாக அறிந்தேன். "Congrats on your first DYK. 6635 people viewed our page yesterday when it appeared as the main Did You Know article on the main page. Please continue to expand the article if you want to and continue with your good work of creating useful new articles."
-----------------------------------------------------------------------------------------
20 நவம்பர் 2021இல் மேம்படுத்தப்பட்டது.
பிரமிப்பான கோவிலை அறிமுகப்படுத்திய முனைவர் அவர்களுக்கு நன்றி
ReplyDeleteகண்கவர் படங்கள்.
ReplyDeleteபங்ஃகளும் பதிவும் நன்று த ம 2
ReplyDeleteகலையார்வம் கொண்ட ஒவ்வொருவரும் அவசியம் கண்டு மகிழ வேண்டிய தலம்..
ReplyDeleteஆனால் எனக்குத் தான் இன்னும் நேரம் வாய்க்கவில்லை..
அருமையான இடம் ஐயா....
ReplyDeleteபடங்களுடன் , தகவல்களும் மிகவும் சிறப்பு...
வாய்ப்பு கிடைப்பின் கண்டிப்பாக காண வேண்டும்...
அற்புதமான கோயில் ஐயா
ReplyDeleteஅவசியம் ஒருமுறையேனும் சென்று காணவேண்டும்
எனற ஆவல் மேலிடுகிறது
நன்றி ஐயா
பூமணி அவர்களின் நாவலில் இக்கோவில் குறித்து எழுதியிருப்பார் ..
ReplyDeleteபார்க்கவேண்டிய கோவில்
எனக்கும் இதுமாதிரியான இடங்களுக்கு போகனும்ன்னு ரொம்ப ஆசை. படங்களை இன்னும் கொஞ்சம் பெருசா போடலாமேப்பா
ReplyDeleteபுகைப்படங்களை இதற்கு மேல் பெரிதாக்கினால் வெளியே வந்துவிடுகின்றன. தங்களின் கருத்திற்கு நன்றி.
Deleteகழுகு மலை கந்தன் என்ற ஒரு சொற்றொடர் உண்டே? அந்தக் கழுகுமலையும் இது தானா?..
ReplyDeleteகுடவரை கோயில் என்றதால் சமணர்கள் தொடர்பும் இம்மலைக்கு உண்டா?..
உங்கள் பதிவு இந்தக் கழுகுமலைக்குச் சென்று பார்க்க வேண்டும் என்ற ஆவலைக் கிளப்புகிறது. நன்றி.
அருகில் சமண மலைகள், தீர்த்தங்கரர்கள் உள்ளனர். அவை பற்றி மற்றொரு பதிவில் பார்ப்போம்.
Deleteரொம்பவும் ஆர்வமாகவே சென்று படங்களுடன் பதிவைத் தந்தமைக்கு நன்றி.
ReplyDeleteகழுகுமலை வெட்டுவான் கோயில் பார்த்து விட்டீர்களா?
ReplyDeleteஎத்தனை தடவை பார்த்தாலும் அலுக்காத கோயில்.
படங்கள் அழகு.
மழை பெய்த சமயத்தில் போய் இருப்பீர்கள் போலும்.
சரியான மழை. பயந்துகொண்டே காலை ஊன்றிக்கொண்டே சென்றோம்.
Deletemikavum arumai azagu sir !!!
ReplyDeleteபழமை மிக்க அறியாத கோவிலைப் பற்றிச் சொல்லியிருக்கிறீர்கள் ஐயா... அருமை.
ReplyDeleteதென்னக எல்லோரா பற்றிய கட்டுரையும் படங்களும் மிகவும் நன்றாக உள்ளன. உங்கள் கோயில் உலா நூல் வடிவம் பெற்றுள்ளதா?
ReplyDeleteதற்போது என் பௌத்த ஆய்வு தொடர்பான நூலை எழுதிவருகிறேன். அதனை நிறைவு செய்தபின் கோயில் உலா நூல் வடிவம் பெறும் ஐயா.
Deletesuper sir
ReplyDeleteஒருமுறை போய் வர வேண்டும்
ReplyDelete