26 August 2017

காவிரி புஷ்கரம்

புஷ்கரம் என்றால் பள்ளிக்காலம் முதல் எனக்குத் தெரிந்தது புகழ் பெற்ற ஒட்டகச் சந்தையும், புஷ்கரின் ஏரிக்கரையோரம் உள்ள பிரம்மன் கோயிலும் ஆகும்.  ஆனால் புஷ்கரம் என்பதற்கு பரந்த அளவில் ஒரு விழா குறிப்பிடப்படுகிறது. அண்மைக்காலமாக காவிரி புஷ்கரம் என்ற விழா தொடர்பான செய்திகள் தொடர்ந்து வந்த நிலையில் உள்ளதைக் காணமுடிந்தது. மயிலாடுதுறை அருகேயுள்ள துலாக்கட்டத்தில் சிறப்பாக அவ்விழா கொண்டாடப்படவுள்ளதும், அதற்காக 30 லட்சம் பேருக்கு மேல் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுவதாகவும் கூறப்படுகிறது. கும்பகோணத்தில் பிறந்து பல மகாமகங்களைப் பார்த்த ஆர்வம் புஷ்கரத்தைப் பற்றித் தெரிந்துகொள்ள ஆவலை உண்டாக்கியது. நாடெங்கும், ஊரெங்கும் நீர் நிலைகள் வற்றி வரும் நிலையில் இவ்வாறான விழாக்கள் கொண்டாடப்படும்போது செயற்கைத்தன்மையையே காணும் சூழலுக்கு நாம் தள்ளப்பட்டுள்ளோம். இருந்தாலும் அவ்விழாவினைப் பற்றி அறிந்துகொள்வோம், வாருங்கள்.

அது நதிகளுக்கே உரிய சிறப்பான விழாவாகும். புஷ்கரம் என்றால் தீர்த்த குரு, ஆதி குரு என்று பொருள்படும். புஷ்கர புண்ணிய காலத்தில் சிவன், விஷ்ணு, பிரம்மா, தேவர்கள், ரிஷிகள் போன்றோர் நதிகளில் வாசம் செய்வதால், இந்த புண்ணிய காலங்களில்  நதியில் நீராடுவதால் மூன்றரை கோடி தீர்த்தத்தில் புனித நீராடிய பலன் கிடைக்கும் என்று நம்புகின்றனர். நதிகள், ராசிகளோடு தொடர்புபடுத்தப்படுவதே இவ்விழாவின் முக்கியத்துவமாகும். 

நன்றி : தஞ்சாவூர் பரம்பரா தளம்

விழா ஏற்பாடு, நன்றி : தினமலர்
நன்றி : தினமணி
விழாவிற்குத் தயாராகும் துலாக்கட்டம், நன்றி : விகடன்
12 நதிகள்
இந்தியாவிலுள்ள கங்கா, நர்மதா, சரஸ்வதி, யமுனா, கோதாவரி, கிருஷ்ணா, காவிரி, தாமிரபரணி, சிந்து,  துங்கபத்ரா, பிரம்மபுத்ரா, ப்ராணஹிதா என்ற 12  நதிகளிலும் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை புஷ்கரம் கொண்டாடப்படுகிறது. புஷ்கரம் என்பதற்கு மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளும் அந்தந்த ராசிகளுக்கு உரித்தான புண்ணிய ஆறுகளில்  வாசம் செய்து மக்களுக்கு நன்மை பயப்பதாகும் என்றும் பொருள் கொள்ளப்படுகிறது.

12 ராசிகள்
ஒவ்வொரு ஆண்டுக்கும் தொடர்புடைய ஆறு என்பதானது, குரு அந்தக் காலகட்டத்தில், எந்த ராசியில் உள்ளார் என்பதைப் பொறுத்துக் கணக்கிடப்படுகிறது. அந்த ராசியில் குரு சஞ்சரிக்கும் கால அளவில் புஷ்கரம் நடைபெறுகிறது.  குரு பகவான் மேஷ ராசியில் இருக்கும்போது கங்கையிலும், ரிஷபத்தில் இருக்கும்போது நர்மதையிலும், மிதுனத்தில் இருக்கும்போது  சரஸ்வதியிலும், கடகத்தில் இருக்கும்போது யமுனையிலும், சிம்மத்தில் இருக்கும்போது கோதாவரியிலும், கன்னியில் இருக்கும்போது  கிருஷ்ணாவிலும், துலாமில் இருக்கும்போது காவிரியிலும், விருச்சிகத்தில் இருக்கும்போது தாமிரபரணியிலும், தனுசுவில் இருக்கும்போது பிரம்மபுத்ராவிலும்,  மகரத்தில் இருக்கும்போது துங்கபத்ராவிலும், கும்பத்தில் இருக்கும்போது பிரம்மபுத்ராவிலும், மீனத்தில் இருக்கும்போது கோதாவரி நதியின் உபநதியான  ப்ராணஹிதாவிலும்  இருந்து அருள்பாலிக்கிறார்.   

12 புஷ்கரங்கள்
இந்தியாவில் 12 புஷ்கரங்கள் அந்தந்த ஆற்றினை தொடர்புபடுத்திக் கொண்டாடப்படுகின்றன. அவற்றின் பெயரையும், அவை நடைபெறும் இடங்களையும் பார்ப்போம். 

கங்கா புஷ்கரம் : காசி, ஹரித்வார், ரிஷிகேஷ்
நர்மதா புஷ்கரம் : மத்தியப்பிரதேசத்தில் நர்மதா நதிக்கரையில் உள்ள ஜோதிர்லிங்கத் தலமான ஓங்காரேஸ்வரர் தலம்
சரஸ்வதி புஷ்கரம் குருசேத்திரம், கேசவ பிரயாகை, குஜராத்தில் சோம்நாதபுரம், அலகாபாத் திரிவேணி சங்கமம், ஆந்திரப்பிரதேசத்தில் காலேஸ்வரம், மத்தியப் பிரதேசத்தில் பேடாகட்
யமுனா புஷ்கரம் யமுனோத்ரி,  ஹரித்வார், விருந்தாவன், மதுரா, திரிவேணி சங்கமம்
கோதாவரி புஷ்கரம் : திரியம்பகம் (நாசிக்), கோதாவரி நதி தீர்த்தக்கரை (ஆந்திரா)
கிருஷ்ணா புஷ்கரம் : துளசி, காசரி, போகவதி, கும்பி, சாவித்ரி, உள்ளிட்ட ஐந்து நதிகளும் சேர்ந்து பஞ்ச கங்கா நதி, கிருஷ்ணா நதியோடு சேருமிடமான பிரயாக் சங்கமம், ஆந்திரப்பிரதேசத்தில் விஜயவாடா
காவிரி புஷ்கரம் தமிழ்நாட்டில் ஒக்கனேக்கல், மேட்டூர், ஈரோடு, பவானி, பள்ளிபாளையம், கொடுமுடி, நெரூர், வேலூர் (நாமக்கல்), திருச்சி, ஸ்ரீரங்கம், திருவையாறு, சுவாமிமலை, கும்பகோணம், மயிலாடுதுறை, காரைக்கால், பூம்புகார்
பீமா மற்றும் தாமிரபரணி புஷ்கரம் : ஜோதிர்லிங்கத்தலங்களில் ஒன்றான பீமாசங்கரம், பண்டரிபுரம், தமிழ்நாட்டில் தாமிரபரணி நதிக்கரையிலுள்ள பாண தீர்த்தம், பாபநாசம், திருவிடைமருதூர், சிந்துபூந்துறை
பிரம்மபுத்ரா புஷ்கரம் அஸ்ஸாம் மாநிலத்தில் பிரம்மபுத்ரா நதிக்கரையில்
துங்கபத்ரா புஷ்கரம் : சிருங்கேரி, மந்த்ராலயம்
சிந்து புஷ்கரம் சிந்து நதி பாயும் ஜம்மு, காஷ்மீர், பஞ்சாப்
ப்ராணஹிதா புஷ்கரம் : தெலுங்கானா மாநிலத்தில் அடிலாபாத்தில் காலேஸ்வரம்

144 வருடங்களுக்கு ஒரு முறை
அவ்வகையில் துலாம் ராசியில் பிரவேசிக்கும் காலகட்டத்தில் காவிரி ஆற்றில், புஷ்கரம் கொண்டாடப்படுகிறது.  இந்த புஷ்கரம் 144 வருடங்களுக்கு ஒருமுறை  வருவதால், செப்டம்பர் 12 முதல் 24ம் தேதி வரை காவிரி மகா புஷ்கர விழாவாக கொண்டாடப்படுகிறது.
இவ்விழா நாள்களில் காவிரியில் புனித நீராடினால் பாவங்கள் நீங்கி புண்ணியம் கிடைக்கும் என்று நம்புகின்றனர்.

177 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெறும் விழா
இந்த விழா கடந்த 12 செப்டம்பர் 1840இல் நடைபெற்றதாகவும், 177 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது நடைபெறுவதாகவும் கூறப்படுகிறது.

அவரவரர் ஊருக்கு அருகில் உள்ள காவிரியாற்றங்கரையில் அமைந்துள்ள ஊருக்குச் சென்று இவ்விழாவினைக் காண்போம். காண வாய்ப்பில்லாதவர்கள் இவ்வாறான ஒரு விழாவினைப் பற்றி அறிந்துகொள்வோம், இறையருள் பெறுவோம். 
தினமணி, தினமலர், விகடன் இதழ்கள்
www.kaveripushkaram.com/ Kaveripushkaram
www.kaveripushkaram.in/ காவிரி புஷ்கரம்
www.thanjavurparampara.com/காவிரி புஷ்கரம் திருவிழா பத்திரிக்கை

22 comments:

  1. புஷ்கரம் குறித்த விபரங்கள் இன்று அறிந்து கொண்டேன் விழா சிறப்புற வேண்டும்.
    நீர் நிலைகள் நிரம்பி வழியட்டும்.

    ReplyDelete
  2. அறியாத விழா குறித்து அறிந்து கொண்டேன்ஐயா
    நன்றி
    தம+1

    ReplyDelete
  3. புஷ்கரம் காவேரி நிதியை பாதுக்காக்கவும், அதனை போற்றவும் வாய்ப்பளித்துள்ளது....மகிழ்ச்சியளிக்கிறது....

    ReplyDelete
  4. இந்த விவரங்கள் எல்லாம் புதுசு. அறிந்து கொண்டேன். தம 4 ஆம் வாக்கு.

    ReplyDelete
  5. நல்ல தகவல் அளித்தமைக்கு மயிலாடுதுறை காவிரிபுஷ்கர விழாகுழு சார்பில் நன்றி .

    ReplyDelete
  6. இதுபற்றி தெரிந்து கொள்ள வேண்டும் என இருந்தேன். நல்ல தகவல்கள் ஐயா !

    ReplyDelete
  7. இந்த விவரங்கள் புதிது. கீதா சாம்பசிவம் அக்காவும் இதைப் பற்றி எழுதியிருந்தார்கள்.

    நீர் நிலைகள் நீர் நிரம்ப வேண்டும் என்பதுதான் நம் அனைவரது அவா!

    ReplyDelete
  8. #இந்த புண்ணிய காலங்களில் நதியில் நீராடுவதால் மூன்றரை கோடி தீர்த்தத்தில் புனித நீராடிய பலன் கிடைக்கும் என்று நம்புகின்றனர்#
    இப்படியுமா நம்பிக்கை :)

    ReplyDelete
  9. உங்கள் பதிவு இந்த வைபவத்தில் கலந்து கொள்ள ஆவலை ஏற்படுத்துகிறது.

    ReplyDelete
  10. சார், அருமையான வரலாற்றுப் பதிவு , நம் மாவட்டத்தில் நடைபெறும் இதுபோன்ற மற்ற விழா செய்திகளை யும் தொகுத்து ஒரு நூலாக வெளிக்கொண்டு வாருங்கள், மகிழ்ச்சி

    ReplyDelete
  11. புஷ்கரம் பற்றிய விரிவான தகவல்கள். மிக்க நன்றி ஐயா.

    ReplyDelete
  12. காவிரி புஷ்கரம் குறித்து நானும் எழுதி உள்ளேன். :)
    http://sivamgss.blogspot.in/2017/08/blog-post_19.html

    சுட்டி மேலே! :)

    ReplyDelete
    Replies
    1. தற்போது படித்தேன், கருத்தினைக் கூறியுள்ளேன். நன்றி.

      Delete
  13. புஷ்கரங்கள் தொகுப்பு நன்றாக இருக்கிறது . அறிந்து கொள்ளவேண்டிய தகவல்கள் .நன்றி

    ReplyDelete
  14. அருமையான விழா பற்றிய தகவல்


    தாங்கள் https://seebooks4u.blogspot.com/2017/08/blog-post.html இல் வெளியிட்டுள்ள மின்நூல்களை 10,000,000 வாசகர்களுக்குப் பகிர்ந்து உதவுங்கள். என்னங்க... இந்த உதவியைத் தானே கேட்கிறேன்.

    ReplyDelete
  15. நான் அமைத்துள்ள அகத்தூண்டுதல் பூங்கா மற்றும் அறிவுத்திருக்கோயில் நிகழ்வுகளுக்காக அடிக்கடி எனது சொந்த ஊரான சன்னாநல்லூருக்குப் போகும்போது மயிலாடுதுறை வழியாகத்தான் போய் வருவேன்.இம்முறை காவிரி புஷ்காரணியில் பங்கு கொள்ளும் வாய்ப்பு கிடைக்கலாம்.
    விபரங்களுக்கு நன்றி ஐயா.

    ReplyDelete
  16. இப்போதுதான் புஷ்கரம் பற்றிக் கேள்விப்படுகிறேன். நல்ல தகவல். நீர் நிலையைப் போற்றுவது நல்லதுதானே.

    ReplyDelete
  17. தெளிவான ....விரிவான தகவல்களுக்கு மிகவும் நன்றி...

    ReplyDelete
  18. காவிரி புஷ்கரம் கொண்டாட ஆறுகளில் நீர் இருக்க வேண்டுவோம் தகவல்கள் புதிது

    ReplyDelete
  19. புஷ்கரம்- எனக்கு இச்சொல் புதிது; பொருள் புதிது. அரிய செய்திகளைத் தெரிந்துகொண்டேன். நன்றி.

    ReplyDelete
  20. கண்டேன் புஷ்கரம் பெயர் !!!?? த ம 8

    ReplyDelete
  21. இதுவரை அறிந்திராத தகவலை அறியத்தந்தமைக்கு மிக்க நன்றிகள் ஐயா.

    இதுபோன்ற அரிய தகவல் ஞானத்தால் "நீர்" நிரம்பி வழிகின்றீர்.

    மற்ற ஆறுகளான வைகை , தென்பெண்ணை, பாலாறுகள் ஏன் இந்த புஷ்கரம் புண்ணியத்தில் சேர்க்கப்படவில்லை?

    கோ

    ReplyDelete