08 June 2019

மொழிபெயர்ப்பில் எழும் சிக்கல்களும் தீர்வுகளும்

30 மே 2019 அன்று தஞ்சாவூர் சரசுவதி மகால் மற்றும் ஆய்வு மையத்தில் தமிழ்த்துறை சார்பாக மொழிபெயர்ப்பில் எழும் சிக்கல்களும் தீர்வுகளும் என்ற தலைப்பில் கருத்தரங்கு நடைபெற்றது. 
இந்நிகழ்விற்கு முதன்மைக்கல்வி அலுவலரும் நூலக நிருவாக அலுவலருமான திருமதி பெ.சாந்தா தலைமையேற்றார். நூலகர் திரு எஸ்.சுதர்ஷன் முன்னிலை வகித்தார். தமிழ்ப்பண்டிதர் திரு மணி.மாறன் அனைவரையும் வரவேற்றார். நிகழ்வின் நிறைவாக வடமொழிப் பண்டிதர் திரு ஆ.வீரராகவன் நன்றி கூறினார்.
வரவேற்புரையாற்றும் திரு மணி.மாறன். உடன்
திரு ஆ.வீரராகவன், திரு எஸ்.சுதர்ஷன், பா.ஜம்புலிங்கம்  

   


 

இக்கருத்தரங்கில் ஆற்றிய உரையின் பகுதி:
“மொழிபெயர்ப்பு என்பதைவிட மொழியாக்கம் என்று கொள்ளும்போது அனைத்துநிலை வாசகர்களுக்கும் சென்றடையும். மொழியாக்கத்தின்போது மிகவும் எளிதாக வாசகர்கள் புரிந்துகொள்ளும் வகையில் சொற்களைத் தெரிவு செய்து பயன்படுத்தவேண்டும். 
மொழியாக்கத்தில் காணப்படுகின்ற சிக்கல்களையும் அவற்றிற்கான தீர்வுகளையும் காண்போம். (சிக்கல்கள் தடித்த எழுத்திலும், அடுத்து அதற்கான தீர்வுகளும் தரப்பட்டுள்ளன)
சொல்லுக்குச்சொல் மொழிபெயர்க்கும்போது தெளிவின்மையையோ, மிகைப்படுத்தலோ அமையும்.
பொருளைப்புரிந்து சொற்றொடர்வாரியாகவோ, பத்திவாரியாகவோ மொழிபெயர்க்கலாம்.
மூல மொழியிலும் மொழிபெயர்க்கப்படும் மொழியிலும் சமமான அளவு திறன் இல்லா நிலையில் மொழிபெயர்ப்பில் தெளிவின்மையைக் காணமுடியாது.
மூல மொழியிலும் மொழிபெயர்க்கப்படும் மொழியிலும் சமமான திறன் இருத்தல் நலம்.
சில சமயங்களில் குறைவான சொற்களைக்கொண்ட சொற்றொடர் முழுமையான பொருளைத் தராத நிலையில்  அமையும்.
இடத்திற்குத் தக்கவாறு சொற்றொடரை மாற்றி மொழியாக்கம் செய்யலாம்.
நீண்ட சொற்றொடர்கள் அமையும்போது மொழிபெயர்ப்பில் குழப்பம் ஏற்படும்.
எளிதில் புரியும் வகையில் சிறிய சொற்றொடர்களாக பிரித்து அமைத்துக்கொள்ளலாம்.
சமூகம் மற்றும் பண்பாடு என்ற சூழலில் தெளிவற்ற சொல் அமையவோ, தவறாகப் புரிந்துகொள்ளவோ வாய்ப்புள்ளது.
மூல மொழியின் பொருண்மையின் பின்புலத்தை அறிந்துகொள்ளல் இன்றியமையாதது.
கடினமான பொருள் தரும் சொல்லோ, பிற மொழிச்சொல்லோ மூலத்தில் இருப்பது.
மொழியாக்கத்தின்போது பொருத்தமான சொல்லைத் தெரிவு செய்ய வேண்டும்.
மூலக்கட்டுரையின் நோக்கத்தையோ, பின்னணியையோ உள்வாங்கிக்கொள்ள இயலா நிலை.
பல முறை படித்துவிட்டு மொழியாக்கம் செய்யலாம்.
மூலத்தில் குழப்பமோ, தெளிவின்மையோ காணப்படல்.
அதே தலைப்பில் அமைந்துள்ள பிற கட்டுரைகளை ஒப்புநோக்கலாம்.
தடித்த எழுத்து, சாய்ந்த எழுத்து, ஒற்றை மேற்கோள், இரட்டை மேற்கோள் பயன்பாட்டினை உள்ளடக்கிய செய்திகள் அமைதல்.
இடத்தின் தன்மை அறிந்து உணர்வினை கவனமாக வெளிப்படுத்த வேண்டியது அவசியம்.
சிக்கல்களுக்கானத் தீர்வுகள் இவ்வாறாக நிலையில் அமைவதற்கு மொழியாக்கம் செய்வோர் அப்பணியில் முழுமையாக தன்னை ஈடுபடுத்திக்கொள்ளவேண்டும். நாம் புரிந்துகொண்டதை அப்படியே வாசகர்களுக்கு கடத்துவது மொழியாக்கம் இல்லை.  வாசகர்கள் புரிந்துகொள்ள வேண்டிய அடிப்படையில் மொழியாக்கம் அமைய வேண்டும். மொழியாக்கத்திற்கு அடிப்படையாக அமைவனவற்றில் வாசிப்பு முக்கியமானது. குறிப்பாக, தமிழ் மற்றும் ஆங்கில நாளிதழ்களை  தொடர்ந்து விடுபாடின்றி படிப்பதன் மூலம் மொழியாக்கத்திற்கான ஆர்வத்தை வளர்த்துக் கொள்ளலாம்.

நன்றி
வாய்ப்பு தந்த தமிழ்ப்பண்டிதர் திரு மணி.மாறன் மற்றும் தமிழ்த்துறையினர்
கலந்துகொண்ட அறிஞர்கள், ஆய்வாளர்கள், நண்பர்கள்
செய்தியினை வெளியிட்ட நாளிதழ்கள்
புகைப்படங்கள் எடுத்து உதவிய என் மூத்த மகன் திரு பாரத்
என் உரையினை தன் தளத்தில் வெளியிட்ட நண்பர் திரு கரந்தை ஜெயக்குமார் 





17 comments:

  1. வாழ்த்துகள்.

    மொழிபெயர்ப்பில் ஈடுபடுவோருக்கு உபயோகமான குறிப்புகள். என்போன்றோருக்கு சுவாரஸ்யமான தகவல்கள்.

    ReplyDelete
  2. விளக்கம் அருமை ஐயா...

    வாழ்த்துகள்...

    ReplyDelete
  3. அற்புதமான உரை
    வாழ்த்துகள் ஐயா

    ReplyDelete
  4. மொழிபெயர்ப்பு ஒரு கலை...அதன் நுணுக்கங்களை இதன் வாயிலாக அறிந்து கொண்டோம். - மும்பை இரா. சரவணன்

    ReplyDelete
  5. விளக்கிய விதம் அழகு
    தங்களது பகிர்வுக்கு வாழ்த்துகளும், நன்றியும்.

    ReplyDelete
  6. யூ டியுப் ல் வலையேற்றவும்.

    ReplyDelete
  7. பிறநாட்டவரின்படைப்புகளை மொழியக்கம் செய்யும்போது நேடிவிடிசிதையும் வாய்ப்பு அதிகம்

    ReplyDelete
  8. சிறப்பான பதிவு.

    வாழ்த்துகள் முனைவர் ஐயா.

    ReplyDelete
  9. சிறப்பு, பாராட்டுகள்

    ReplyDelete
  10. என்னைப் போன்றவர்கள் படிக்கும் போது எளிதாக புரிந்து கொள்வதற்க்காகவே மொழியாக்கம் பற்றி உரையாற்றியிருக்கிறார் என்று கருதுகிறேன்..

    ReplyDelete
  11. வணக்கம் அய்யா, இது போன்ற நிகழ்வுகள் முன்கூட்டியே எனக்கு தெரியாமல் போய்விடுகிறது, தெரிந்திருந்தால் நானும் கலந்துகொண்டு எனது அய்யங்களை கேட்டு இருப்பேன்
    சரவணா ராஜேந்திரன்
    மொழி பெயர்ப்பாளர், விடுதலை உண்மை பெரியார் பிஞ்சு, மற்றும் பல்வேறு தமிழ் நாளிதழ்களுக்கு இந்தி ஆங்கிலம் மராட்டி மற்றும் அரபு மொழியிலிருந்து செய்திகளை மொழி பெயர்த்து தந்துகொண்டு இருக்கிறேன்

    ReplyDelete
  12. மொழி பெயர்ப்பு செய்வோருக்கான இன்றியமையாத தகவல் களஞ்சியம் ஐயா

    ReplyDelete
  13. அருமை ஐயா...
    வாழ்த்துக்கள் .

    ReplyDelete
  14. நல்லவை பல தெரிந்து கொண்டேன். நன்றி

    ReplyDelete
  15. அருமையான விளக்கம். வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  16. என்னைப்பொறுத்தளவில் ஒரு மொழியிலுள்ளதைத் தெளிவாக விளங்கிக்கொண்டு, இன்னொரு மொழியில் விளங்கவைப்பதே மொழியாக்கம்

    ReplyDelete