திருவாசகத்திற்கு உருகாதார் ஒரு வாசகத்திற்கும் உருகார் என்ற பழமொழி திருவாசகத்தின் பெருமையினையும், அதனை இயற்றிய மாணிக்கவாசகரையும் நினைவுபடுத்தும். அவருடைய சன்னதியைக்கொண்ட திருமறைநாதர் கோயிலுக்கும், அவர் பிறந்ததாகக் கூறப்படும் இடத்திற்கும் சென்றது மறக்கமுடியாத அனுபவமாகும்.
மதுரை மாவட்டத்தில் மதுரையின் வடக்கே சுமார் 25 கிமீ தொலைவில் உள்ளது திருவாதவூர். அங்கு புகழ்பெற்ற திருமறைநாதர் கோயிலுக்கு 9 ஜனவரி 2019 அன்று சென்றிருந்தோம். ஐந்து நிலைகளைக் கொண்ட நெடிதுயர்ந்த ராஜகோபுரம் கோயிலின் பிரம்மாண்டத்தை உணர்த்துகிறது.
மதுரை மாவட்டத்தில் மதுரையின் வடக்கே சுமார் 25 கிமீ தொலைவில் உள்ளது திருவாதவூர். அங்கு புகழ்பெற்ற திருமறைநாதர் கோயிலுக்கு 9 ஜனவரி 2019 அன்று சென்றிருந்தோம். ஐந்து நிலைகளைக் கொண்ட நெடிதுயர்ந்த ராஜகோபுரம் கோயிலின் பிரம்மாண்டத்தை உணர்த்துகிறது.
ராஜ கோபுரத்தைக் கடந்து உள்ளே செல்லும்போது முதலில் நம் கண்களில் படுவது வரலாற்றுச் சிறப்புமிக்க ஒரு மண்டபம். அந்த மண்டபம் மாணிக்கவாசகரால் அமைக்கப்பட்டது என்றும், இந்த இடத்தில் இருக்கும்போதுதான், மாணிக்கவாசகருக்கு தன் பாதச் சிலம்பொலியைக் கேட்கச் செய்தார் சிவபெருமான் என்றும் கூறுவர்.
இம்மண்டபத்தில் சிவன், தன் கால் சிலம்பொலியை சைவ சமயக் குரவர்களில் ஒருவரான மாணிக்கவாசகர் கேட்கச் செய்ததாகக் கூறுவர். இக்கோயிலின் சிறப்பாக இம்மண்டபத்தைக் கூறுவர். அழகான கொடுங்கைகளுக்கும், சிற்பத்தூண்களுக்கும் பெயர் பெற்ற மண்டம். வாதவூரார் என்றழைக்கப்பட்ட மாணிக்கவாசகப்பெருமான் பாண்டிய மன்னனின் அமைச்சரவையில் அமைச்சராக இருந்தவர். சிவனே குருவாக வந்து இவரிடம் உபதேசம் கேட்ட பெருமையினைக் கொண்டவர்.
மூலவர் திருமறைநாதர் கிழக்கு நோக்கியுள்ளார். இறைவியை ஆரணவல்லி என்றும் திருமறைநாயகி என்றும் கூறுவர். இறைவியின் சன்னதியில் உள்ள கொடுங்கைகளும் வேலைப்பாடுகளோடு அமைந்துள்ளன. கோயிலின் கிழக்கில் நூற்றுக்கால் மண்டபம் உள்ளது.
திருச்சுற்றில் மாணிக்கவாசகருக்கான தனி சந்நதி அமைந்துள்ளது. இங்குள்ள நடராஜர் சன்னதி வேலைப்பாடுகளோடு அமைந்துள்ளது.
கோயிலின் வெளியில் சாலையின் எதிர்புறத்தில், சிறிது தூரத்தில் மாணிக்கவாசகர் பிறந்த இடம் அமைந்துள்ளது. நுழைவாயிலுடன் அழகான சிறிய கோயில் மாணிக்கவாசகருக்காக அமைக்கப்பட்டுள்ளது.
நன்றி : பயணத்தின்போது புகைப்படம் எடுக்க உதவிய என் மனைவி திருமதி பாக்கியவதி
அழகிய தரிசனப்படங்களோடு திருமறைநாதர் கோயில் வரலாறும் அறியத் தந்தமைக்கு நன்றி.
ReplyDeleteபுதிய கோவிலைப்பற்றி அறிந்துகொண்டேன்.
ReplyDeleteபழைய காலத்தில் நூற்றுக்கால், ஆயிரங்கால் மண்டபங்களெல்லாம், மக்கள் அங்கு ஒன்று கூடி, சமய சம்பந்தமான விளக்கங்களை சமயப் பெரியார் சொல்லக் கேட்கும் விதமாக அமைந்ததா இல்லை நாட்டிய நாடகங்கள் நடைபெற்றிருக்குமா? உபயோகப்படாமல் இந்த மாதிரி நூற்றுக்கால் மண்டபங்கள் எல்லாம் எழுப்பியிருக்க மாட்டார்களே
கோவில் என்பது பல வகைகளில் பயன்பட்டது. 1. மக்கள் ஒன்றுகூடல். அது உரையாட, பல நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள, நெருக்கடியான சமயங்களில் இருந்து தங்கள், தன் நாட்டு மக்களை காப்பாற்றிக் கொள்ள, சமயம், மதம் தொடர்பாக மக்களுக்கு விழிப்புணர்வு உருவாக்க, கலைகள் வளர்க்க, மனம் மற்றும் உடல் ரீதியான ஆரோக்கியத்தை வளர்க்க என்கிற ரீதியில்.
Delete2. மன்னர்களுக்கு இது கௌரவம் சார்ந்த விசயம்.
3. அந்தந்த காலகட்டத்தில் உருவான கலைகள் அடுத்த தலைமுறைக்கு மறைமுகமாக வளர்க்க சிற்பங்கள், கல்வெட்டுகள் மூலம்.
4. தானியக்கிடங்கு போல பயன்படுத்திக் கொள்ளல்.
5. மொத்த சமூக கட்டமைப்பு உருவாக்க, நிலைநிறுத்த, நீதி பரிபாலனம் செய்ய.
2015 இல் என்று நினைக்கிறேன். மதுரையில் கோவில்கள் சுற்றில் நேரமின்மை காரணமாக தவறவிட்ட கோவில். அடுத்த முறை செல்லும்போது காணவேண்டும்.
ReplyDeleteமிக அருமையான வேலைப்பாடுடைய கோயில்.. அமைதியான சூழலில் அமைந்திருக்கிறது போல தெரிகிறது.. மனதுக்கு இனிமை.
ReplyDeleteநேரத்துடன் போராட்டம் நடத்தியபடியே நமது வாழ்வில் பெரும்பகுதி கழிந்துவிடுகிறது. அதனால் பல முக்கிய இடங்களைக் காணும் வாய்ப்பை இழந்துவிடுகிறோம். திருவாதவூரும் அவற்றில் ஒன்று.
ReplyDeleteஇக்கோவிலுக்கும் அறுபடை முருகன் கோவில் சென்ற போது சென்று வந்திருக்கிறோம். திருவாதவூர் சென்று மாணிக்க வாசகர் கோவிலை தரிசித்த பின் இக்கோவிலுக்கும் சென்று வந்தோம். அருமையான தகவல்களுக்கு நன்றி :)
ReplyDeleteவணக்கம் சகோதரரே
ReplyDeleteஅழகான கோவில். மாணிக்கவாசகர் பிறந்த ஊர் திருவாதவூர் எனறு தெரியும். ஆனால் அங்கு குடி கொண்டிருக்கும் ஈஸ்வரர் திருமறைநாதர் கோவிலைப்பற்றியும், அருள்மிகு மாணிக்கவாசகர் கோவிலைப் பற்றியும் இன்று பகிர்ந்து அதை அறிய தந்தமைக்கு மிக்க மகிழ்ச்சி. கோவில்கள் படங்களும், விபரங்களும் மிகவும் நன்றாக உள்ளது. பக்தியுடன் கோவில்களை தரிசித்துக் கொண்டேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
அழகான கோவில் என்று தெரிகிறது. உங்கள் மூலம் நாங்களும் அங்கே சென்று தரிசிக்க வாய்ப்பு. நன்றி முனைவர் ஐயா.
ReplyDeleteபடங்களும் பகிர்வும் அருமை
ReplyDeleteபயணங்கள் தொடரட்டும்
நாங்கள் ஒரு முறை போய் வந்தோம்.
ReplyDeleteமீண்டும் உங்கள் தளத்தில் தரிசனம் செய்தோம்.
நன்றி.
அருமையான விவரிப்பு - கோவில் தகவல்
ReplyDeleteதங்கள் பணி தொடர வாழ்த்துகள்
நல்ல பதிவு.திருவாசகத்தின் மீது தீவீர பிணைப்பு ஏற்படவேண்டும் போல்
ReplyDeleteமுதலில் திருப்பெருந்துறை என்னும் ஆவுடையார்கோவிலில் ஓராண்டு பணியும்
பின்னர் உத்திரகோசமங்கை,திருவாதவூர் போன்றஇடங்களைப் பார்க்கவும் வாய்ப்பு ஏற்பட்டது.
வாதவூரில் கோவிலுக்கு எதிர்புறம் சற்று தொலைவில் மாணிக்கவாசகர் பிறந்த இடம் உள்ளது.
அழகாய் விவரித்துள்ளீர்கள். நன்றிகள் பல.
ReplyDeleteஇருப்பினும் எனது பார்வையில் ஒரு சிறிய திருத்தம் தேவை படுகிறது என்று எண்ணுகிறேன்.
கீழ் காணும் இந்த சொற்றொடரில்.
தன் கால் சிலம்பொலியை சைவ சமயக் குரவர்களில் ஒருவரான மாணிக்கவாசகர் கேட்கச் செய்ததாகக் கூறுவர். இக்கோயிலின் சிறப்பாக இம்மண்டபத்தைக் கூறுவர்.
நன்றி. மாற்றிவிட்டேன்.
Deleteதிருவாதவூருக்கு அருகே போயும் நேரமின்மை காரணமாய் இந்தக் கோயிலை விட்டு விட்டோம். மறுபடி போக முடியுமா தெரியவில்லை.
ReplyDeleteHi sir
Deleteஅழகிய கோவில் வரலாறும் தெரிந்துகொண்டோம்.
ReplyDelete