கும்பகோணம் அரசு ஆடவர் கல்லூரியில் (1976-1979) இளங்கலை படித்தபோது இந்தியப்பொருளாதார வளர்ச்சி என்ற பாடத்திற்கான ஆசிரியர் திரு கண்ணன் பொது அறிவு சார்ந்த பல செய்திகளைப் பகிர்ந்துகொள்ள சில நிமிடங்களை ஒதுக்குவார். அவர் கூறியவற்றில் ஒன்று காற்புள்ளி இடுவதைப் பற்றியதாகும். “காற்புள்ளி (கமா) போடும்போது மிகவும் கவனமாக இருக்கவேண்டும். இல்லாவிட்டால் அது சிக்கலில் விட்டுவிடும்” என்று கூறுவார். “மை ஒய்ப் கு ஈஸ் இன் மெட்ராஸ் கம்ஸ் டுமாரோ” (My wife who is in Madras comes tomorrow) என்பதற்கும், “மை ஒய்ப், கு ஈஸ் இன் மெட்ராஸ், கம்ஸ் டுமாரோ” (My wife, who is in Madras, comes tomorrow) என்பதற்கும் உள்ள வேறுபாட்டை அடிக்கடிக் கூறுவார். முதல் சொற்றொடர் “சென்னையிலுள்ள என் மனைவி நாளை வருகிறார்” என்பதையும், இரண்டாவது சொற்றொடர் “என் மனைவி, சென்னையில் இருப்பவர், நாளை வருகிறார்” என்பதையும் குறிக்கும் என்றும், இரண்டாவது சொற்றொடருக்கான பொருள் அந்த நபருக்கு பல ஊர்களில் மனைவிகள் இருப்பது போலவும், அவர்களில் சென்னையில் இருப்பவர் நாளை வருவது போலவும் பொருள் கொள்ளும் வகையில் அமையும் என்றும் கூறியிருந்தார். அப்போது முதல் காற்புள்ளியை இடும்போது மிகவும் கவனமாக இருந்துவந்துள்ளேன். அண்மையில் இலண்டன் 50 பென்ஸ் நாணயத்தை வெளியிட்டபோது இந்த நிகழ்வு எனக்கு நினைவிற்கு வந்தது.
பிரபல புதின எழுத்தாளரான பிலிப் புல்மான் உள்ளிட்டோர் அதற்கு
எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். புல்மான், “பிரெக்ஸிட்டின் 50 பென்ஸ் நாணயத்தில் ஆக்ஸ்போர்டு
காற்புள்ளி இடம்பெறவில்லை. ஆதலால் கல்வியறிவுள்ள அனைவரும் இந்த நாணயத்தை புறக்கணிக்க
வேண்டும்,” என்றார். “செழிப்பு (prosperity) என்ற சொல்லுக்கு அடுத்தபடியாக காற்புள்ளி
இல்லாத நிலை என்னை வதைக்கிறது” என்றார் டைம்ஸ் இலக்கிய இணைப்பிதழின் ஆசிரியரான
ஸ்டிக் ஆபெல்.
இது 1801இல் அமெரிக்க ஜனாதிபதியாக தாமஸ் ஜெபர்சன் பதவியேற்றபோது
உரையாற்றிய, அவருடைய அரசின் முக்கியக் கொள்கைகளாக கூறியனவற்றுள் இருந்த, “Peace,
commerce, and honest friendship with all nations, entangling alliances with
none” (அமைதி, வணிகம், மற்றும் அனைத்து நாடுகளுடனும்
நட்புறவு எந்த நாடுகளுடனும் சிக்கல் இல்லா கூட்டு)” என்பதை எதிரொலித்தது.
இதில் வணிகம் (commerce) என்ற சொல்லை அடுத்து காற்புள்ளி
இடம்பெற்றிருந்தது. இங்கு காற்புள்ளியின் பயன்பாட்டினையும்
முக்கியத்துவத்தையும் கவனத்தில் கொள்ள வேண்டியது மிகவும் அவசியமாகும்.
ஆக்ஸ்போர்டு காற்புள்ளியை (Oxford comma) சீரியல் காற்புள்ளி (serial comma) என்றும் அழைப்பர். ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் வாசகர்கள், ஆசிரியர்கள், எழுத்தாளர்களால் பயன்படுத்தப்படுவதால் இது ஆக்ஸ்போர்டு காற்புள்ளி என்ற பெயரினைப் பெற்றது. மேற்கோள் குறிகளை எங்கெங்கு பயன்படுத்தவேண்டும் என்று தெளிவாக விதி உள்ளது. ஆனால் இதனைப் பொறுத்தவரை தெளிவு எதுவுமில்லை. கிராமர்லி தளத்தின் ஆசிரியர் பிரிட்னி ரோஸ், “பொதுமக்கள் அதனை விரும்புகிறார்கள், அல்லது வெறுக்கிறார்கள், அல்லது அது என்னவென்றே தெரியாமல் இருக்கின்றார்கள்” என்கிறார். ஆக்ஸ்போர்டு அகராதி, “மூன்றோ மூன்றுக்கும் மேலோ உள்ளவற்றைக்குறிப்பிடும்போது, கடைசியாக உள்ள சொல்லுக்கு முன்னே காணப்படுகின்ற ‘மேலும்’ அல்லது ‘அல்லது’ என்ற சொல்லுக்கு முன் இடம்பெறுகின்ற காற்புள்ளியைக் குறிக்கும்” என்கிறது.
“நான் இன்று என் பள்ளி நண்பர்கள்,
குமரன், மேலும் முருகன் உடன் உணவகம் சென்றேன்”
என்ற சொற்றொடரில் பள்ளி நண்பர்கள், குமரன், ராமன் என்பது வெவ்வேறு நபரை/நபர்களைக் குறிக்கிறது.
குமரனும் ராமனும் பள்ளி நண்பர்கள் இல்லை என்பதை தெளிவுபடுத்த ‘குமரன்’ மற்றும் ‘மேலும்’
என்பதற்கிடையே காற்புள்ளி இடப்பட்டுள்ளது. குமரன் மற்றும் ராமன், பேசப்படுபவரின் பள்ளி
நண்பர்கள் அல்ல, அவர்களுடன் உணவகம் வரும் நண்பர்கள். குமரன் மற்றும் ராமன் பள்ளி நண்பர்களாக
இருந்திருந்தால் அப்போது என்னுடைய பள்ளி நண்பர்கள், குமரன் மற்றும் ராமன் என்று குறிப்பிட்டிருக்கலாம்.
பிரிட்டிஷ் ஆங்கிலத்தில் காற்புள்ளியை பயன்படுத்தலாம், அல்லது பயன்படுத்தாமல் விட்டும்விடலாம். ஆனால் அமெரிக்க ஆங்கிலத்தில் அது பொதுவாக பரவலாகக் காணப்படுகிறது. அமெரிக்க உளவியல் அமைப்பின் கையேடு (APA manual), கார்னரின் நவீன அமெரிக்கப் பயன்பாடு (Garner’s Modern American Usage), நவீன மொழிச் சங்கத்தின் நடைக் கையேடு (The MLA Style Manual), ஸ்ட்ரங் மற்றும் ஒயிட்டின் நடைக்கூறுகள் (Strunk and White’s Elements of Style), அமெரிக்க அரசின் அச்சக அலுவலக நடைக் கையேடு (The U.S. Government Printing Office Style Manual) ஆகியவை ஆக்ஸ்போர்டு காற்புள்ளியின் பயன்பாட்டைக் கட்டாயம் என்று கூறுகின்றன.
அசோசியேட்டட் ஊடக நடை நூல் (The Associated Press Stylebook) இதன் பயன்பாடு தேவையில்லை என்கிறது. மாறாக, சிகாகோ நடைக்கையேடு (The Chicago Manual of Style) இது தேவை என்கிறது. “அசோசியேட்டட் பாணியா சிகாகோ பாணியா என்று பார்க்கும்போது பாணி என்ற சொல்லின் முக்கியத்துவத்தை பெரும்பாலானோர் மறந்துவிடுகிறார்கள் என்று நினைக்கிறேன். பாணி எப்போது ஒத்துவரவில்லையோ, உங்களுக்கு ஒத்துவருவதை ஏற்கவேண்டும்,” என்கிறார் ரோஸ். ஆங்கில மொழியில் மிகவும் குழப்பமான இலக்கண விதிகள் பட்டியலில் ஒன்றாக ஆக்ஸ்போர்டு காற்புள்ளி அமைந்துவிடுகிறது. தி டைம்ஸ் நடை கையேடு (The Times style manual) "ஆக்ஸ்போர்டு காற்புள்ளியைத் தவிர்த்துவிடுங்கள். 'அவன் ரொட்டி, வெண்ணெய், மற்றும் ஜாம் சாப்பிட்டான்' என்பதற்கு பதிலாக 'அவன் ரொட்டி, வெண்ணெய் மற்றும் ஜாம் சாப்பிட்டான்' என்றே கூறுங்கள்." மாறாக, கார்டியன் நடைக் கையேடு (The Guardian style guide), “நேரடியாகப் பொருளைத் தரும் வகையில் அமையும்போது ஆக்ஸ்போடு காற்புள்ளி தேவையில்லை. ஆனால் சில சமயங்களில் வாசகர்களுக்கு அது அதிகம் உதவுகிறது என்பதை கவனத்தில் கொள்ளவேண்டும். சில நேரங்களில் அது முக்கியமாக தேவைப்படுகிறது. ‘‘நான் இந்த நூலை என் பெற்றோர், மார்ட்டின் அமிஸ், மற்றும் ஜேகே ரௌலிங்-க்கு அர்ப்பணிக்கிறேன்’ என்பதை ‘நான் இந்த நூலை என் பெற்றோர், மார்ட்டின் அமிஸ் மற்றும் ஜேகே ரௌலிங்-க்கு அர்ப்பணிக்கிறேன்’.” என்பதோடு ஒத்துப்பார்க்கும்போது வேறுபாட்டையும் காற்புள்ளியின் தேவையையும் உணரலாம்.
ஒரு தெளிவினைத் தரும்நிலையிலும்கூட காற்புள்ளியை பலர் பயன்படுத்த விரும்புவதில்லை. குறிப்பாக அதிக இடத்தைப் பிடித்துக்கொள்ளும் என்பதால் ஊடகவியலாளர்கள் இதனைப் பயன்படுத்துவதில்லை. பள்ளிக்காலம் தொடங்கி அவ்வாறே சொல்லித்தருவதால் பலர் இதனை எப்போதும் பயன்படுத்துவதில்லை. இருந்தாலும் காற்புள்ளியை எளிதாகக் கருதிவிட முடியாது. இடத்திற்குத் தகுந்தாற்போல் அது உணர்த்தும் தனித்தன்மையை மனதில் கொள்ள வேண்டியது அவசியமாகும். அண்மைக்காலத்தில் இந்த காற்புள்ளியின் முக்கியத்துவத்தை உணரவைத்த பெருமை பிரெக்ஸிட் நாணயத்தையே சாரும். பயன்பாட்டு நோக்கில் பார்க்கும்போது ஆக்ஸ்போர்டு காற்புள்ளி ஒரு முக்கியமான இடத்தை வகிக்கிறது என்பதைத் தெளிவாகக் கூறலாம். குழப்பமற்ற பொருளைத் தருவதால் முடிந்தவரை நாம் ஆக்ஸ்போர்டு காற்புள்ளியைப் பயன்படுத்த முயல்வோம்.
துணை நின்றவை :
After Deadline, Philip B.Corbett, The New York Times Blog,
23 June 2015
For Want of a Comma, Carmel McCoubrey, 16 March 2017
What Is the Oxford Comma—And Why Can’t the Grammar
World Agree on Whether to Use It?, Isabel Roy and Sam Benson Smith, The
Reader’s Digest, 18 July 2019
Philip Pullman calls for boycott of Brexit 50p coin over 'missing' Oxford comma, Alison Flood, The Guardian, 27 Jan 2020
Rules for Comma usage, Grammarly Blog
Serial comma, Wikipedia
What Is The Oxford Comma, Lexico
தங்களது விளக்கவுரை அற்புதம் பயனுள்ள பதிவு.
ReplyDeleteபகிர்வுக்கு மிக்க நன்றி.
காற்புள்ளியில் இத்தனை விஷயங்களா? சுவாரஸ்யமான தகவல்கள்.
ReplyDeleteமிகவும் சுவாரஸ்யம்! இளம் வயதில் மிகவும் சுவாரஸ்யமாக கற்பிக்கும் ஒரு ஆசிரியர் கிடைத்து விட்டால் அவர் கற்பித்ததெல்லாம் கல்லில் எழுத்து போல மனதில் பதிந்து விடும். அதனால் தான் அன்றைக்கு கற்பித்ததெல்லாம் இந்த வயதிலும் கூட எனக்கு நினைவில் உள்ளது! கமா பற்றிய விளக்கங்கள் மிகவும் அருமை!
ReplyDeleteவிளக்கங்கள் அருமை ஐயா... நன்றி...
ReplyDeleteInteresting information.
ReplyDeleteஅருமையான விளக்கங்கள்
ReplyDeleteநன்றி ஐயா
சிறப்பான விளக்கம் ஐயா. ஒரு காற்புள்ளி விடுபட்டால் அர்த்தமே மாறிவிடுகிறதே!
ReplyDeleteவணக்கம் சகோதரரே
ReplyDeleteநல்ல பதிவு. விளக்கங்கள் நன்கு புரியும்படியாக அருமையாக தொகுத்து தந்திருக்கிறீர்கள். பள்ளியில் சுலபமாக கற்ற முறைகள் நினைவுக்கு வருகின்றன. பகிர்வுக்கு மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
ஆக்ஸ்போர்டு காற்புள்ளி ஒரு முக்கியமான இடத்தை வகிக்கிறது என்பதை மிகத் தெளிவாகக் கூறும் பதிவு இது.அருமை.
ReplyDeleteGauthaman M (முகநூல் வழியாக)
ReplyDeleteI am very happy read this article. Most of the readers may feel difficult to understand. The style manual is not consulted by research scholars. Each domain has style manual .They help to bring standard in a research article. I could see refinement in your writing. Thank you for posting this article. It reflects your scholarship.-
Subramanian Venkataraman (முகநூல் வழியாக)
ReplyDeleteநான் 1974 -1977 இளங்கலை பொருளியல் படித்தேன்.திரு கண்ணன் மிக அருமையான ஆசிரியர்.
அவர்களின் அருமை இப்போது புரிகிறது.
அருமையான தகவல்கள் . நன்றி ஐயா
ReplyDeleteதெரிந்து கொள்ள வேண்டிய அருமையான பதிவு. நன்றி ஐயா !
ReplyDeleteஆக்ஸ்போர்டு காற்புள்ளி (Oxford comma) - அருமையான மிகவும் விரிவான கட்டுரை. எனது பக்கத்தில் பகிர்கிறேன். நன்றி முனைவர் ஜம்புலிங்கம்
ReplyDelete