7 மே 2022 அன்று முனைவர் வீ.ஜெயபால் அவர்களின் குழுவோடு கோயில் உலா சென்றோம். கொரோனாவின் காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக தடைபட்டிருந்த இவ்வுலாவின்போது விளமல், பெருவேளூர், தலையாலங்காடு, சிக்கல், எண்கண், தேவூர், பள்ளியின்முக்கூடல், திருவாரூர் (மூன்று கோயில்கள்) உள்ளிட்ட கோயில்களுக்குச் சென்றோம். அவற்றில் திருவாரூர் கோயில்கள் முன்னர் நான் பார்த்த கோயிலாகும்.
இவற்றுள் விளமல், பெருவேளூர், தலையாலங்காடு, சிக்கல், தேவூர், பள்ளியின்முக்கூடல், திருவாரூர் ஆகிய தலங்கள் காவிரியின் தென் கரையிலுள்ள தேவாரப்பாடல் பெற்ற தலங்களாகும். எண்கண் தலத்தில் மூலவர் சிவன். அங்கு முருகனுக்காக தனி சன்னதி உள்ளது.
காலை 7.00 மணிக்கு தஞ்சாவூரிலிருந்து கிளம்பி, வரும் வழியில் காலை சிற்றுண்டியை முடித்தோம். நாங்கள் பயணித்த முதல் கோயிலான விளமலில் குழுவினர் இறைவனின் முன்பாக சிவபுராணம் ஓதினோம். வழிபாட்டிற்குப் பின் தொடர்ந்து பயணித்தோம்.
பதஞ்சலி மனோகர்-யாழினும் மென்மொழியம்மை
ஞானசம்பந்தர் பாடல் பெற்ற தலம்
தஞ்சாவூர்-திருவாரூர் சாலையில் திருவாரூருக்கு அருகில் 3 கிமீ தொலைவில் உள்ளது.
பதஞ்சலி முனிவர் வழிபட்ட தலம்.
அபிமுக்தீஸ்வரர்-ஏலவார்குழலி
ஞானசம்பந்தர், நாவுக்கரசர் பாடல் பெற்ற தலம்
கும்பகோணம்-திருவாரூர் சாலையில் உள்ளது.
மாடக்கோயில்.
கௌதம முனிவர், பிருங்கி முனிவர் வழிபட்ட தலம்.
முருகப்பெருமான் வழிபட்டதால் வேளூர்.
பெருவேள் என்பவன் வாழ்ந்த இடமாதலால் பெருவேளூர்.
ஆடவல்லநாதர்-திருமடந்தை
நாவுக்கரசர் பாடல் பெற்ற தலம்.
கும்பகோணம்-திருவாரூர் சாலையில் பெருவேளூர் அருகில் உள்ளது.
கபில முனிவர் வழிபட்ட தலம்.
தாருகாவன முனிவர்கள் அனுப்பிய முயலகனை அடக்கி அவன் முதுகில் இறைவன் திருநடனம் புரிந்த தலம்.
மேற்கண்ட கோயில்களுக்குச் சென்றுவிட்டு மதிய உணவிற்குப் பின் சிக்கல் கோயிலில் சற்று இளைப்பாறினோம்.
நவநீதேஸ்வரர்-வேல்நெடுங்கண்ணி
திருஞானசம்பந்தர் பாடல் பெற்ற தலம்.
திருவாரூர்-நாகப்பட்டினம் சாலையில் உள்ளது.
மாடக்கோயில்.
மூலவருக்கு வலது புறம் முருகன் சன்னதி (சிக்கல் சிங்காரவேலர்) புகழ் பெற்றது.
திருமால் வழிபட்ட தலம்.
இக்கோயிலில் குடமுழுக்குப் பணிகள் நடைபெற்றுக்கொண்டிருந்த நிலையில் விமானங்களும், கோபுரங்களும் மூடப்பட்டிருந்ததால் ஒளிப்படங்கள் எடுக்க முடியவில்லை. இறைவனை தரிசித்துவிட்டு அங்கிருந்து பயணத்தைத் தொடர்ந்தோம்.
தேவபுரீஸ்வரர்-தேன்மொழியம்மை
ஞானசம்பந்தர் பாடல் பெற்ற தலம்.
கீழ்வேளூர்-திருத்துறைப்பூண்டி சாலையில் உள்ளது.
மாடக்கோயில்.
தேவர்கள் வழிபட்டதால் தேவூர்.
பிரம்மபுரீஸ்வரர்-பெரியநாயகி
இங்குள்ள முருகன் சன்னதி புகழ்பெற்றது. இந்த முருகன் சிற்பத்தைச் செதுக்கிய சிற்பி எட்டுக்குடி, சிக்கல் ஆகிய முருகன் கோயில்களில் உள்ள சிற்பங்களைச் செதுக்கியவர் என்று கூறப்படுகிறது.
மூலவர், இறைவி, முருகன் ஆகியோருக்கு தனித்தனியாக சன்னதிகள் உள்ளன. சிக்கலைப் போலவே இங்கும் மூலவர் சன்னதிக்கு இடப்புறத்தில்
முருகன் சன்னதி உள்ளது.
முக்கோணநாதர்-மைமேவுகண்ணியம்மை
நாவுக்கரசர் பாடல் பெற்ற தலம்.
திருவாரூர் கோயிலிலிருந்து சுமார் 6 கி.மீ.தொலைவில் உள்ளது.
ஜடாயு வழிபட்டு பேறு பெற்றதால் குருவிராமேஸ்வரம் எனப்படுகிறது.
13 மே 2022ல் குடமுழுக்கு
வன்மீகநாதர்-கமலாம்பிகை.
5 வேலி பரப்பளவுடைய கமலாலயம்.
மூவர் பாடல் பெற்ற தலம்.
அகிலேஸ்வரர்-வண்டார்குழலி.
திருவாரூர் கோயிலுக்குள் உள்ளது.
தூவாய்நாதர்-பஞ்சின்மென்னடியாள்
தேர்நிலைக்கு அருகில் கீழ வீதியில் உள்ளது.
சுந்தரர் பாடல் பெற்ற தலம்.
அண்மையில் குடமுழுக்கு ஆன கோயில்.
திருவாரூர் தொடர்புடைய, பாடல் பெற்ற மூன்று கோயில்களிலும் தரிசனத்திற்குப் பின் திருவாரூரில் இரவு சிற்றுண்டிக்குப் பிறகு சுமார் 9.30 மணிவாக்கில் கிளம்பினோம், தஞ்சாவூரை நோக்கி, மன நிறைவுடன்.
விக்கிப்பீடியாவில் உள்ள பதிவுகளில் நாங்கள் சென்ற கோயில்கள் தொடர்பாக கட்டுரைகளில் ஒளிப்படங்கள் இல்லாதவற்றில் நான் எடுத்த ஒளிப்படங்களை இணைத்து மேம்படுத்தினேன்.
துணை நின்றவை
- வீ.ஜெயபால், சைவ நால்வரால் பாடல் பெற்ற திருத்தலங்கள், சைவ சித்தாந்த ஆய்வு மையம், 28 அம்மையப்பா இல்லம், கோவிந்தராஜ் நகர், சீனிவாசபுரம் விரிவாக்கம், தஞ்சாவூர் 613 009, டிசம்பர் 2014
- சிவ.ஆ.பக்தவச்சலம், தேவாரத் திருத்தலங்கள் வழிகாட்டி, குடியேற்றம், வேலூர் மாவட்டம், 2005
- பு.மா.ஜெயசெந்தில்நாதன், திருமுறைத்தலங்கள், வர்த்தமானன் பதிப்பகம், சென்னை, 2009
- விக்கிப்பீடியா
முந்தைய கோயில் உலாக்கள்
கோவில் உலா சிறப்பு. தலையங்காடு கோவில் சற்றே வித்தியாசமான கட்டிடக் கலையுடன் இருக்கிறது. கோவில் படங்கள் அழகு. பழமையான கோவில்கள் என்றும் தெரிகிறது.
ReplyDeleteதங்களது தரிசனத்தோடு தாங்களும் தரிசித்தோம்.
ReplyDeleteபடங்கள் மிகவும் அழகாக இருக்கிறது.
மிக அருமையான இறை தரிசனம்.. கோயில் காட்சிகள் மிகவும் அழகு.. ந்ல்ல பரிவு.. மகிழ்ச்சி.. நன்றி ஐயா..
ReplyDeleteஉலா அருமை ஐயா...
ReplyDeleteவணக்கம் சகோதரரே
ReplyDeleteபதிவு அருமை. தங்களது பகிர்வின் மூலம் அத்தனை கோவில் படங்களும் கண்களுக்கு நிறைவாக மனதுக்கும் திருப்தியளிப்பதாக இருந்தது. கோபுர தரிசனங்கள் இனிதாக கிடைக்கப் பெற்றேன். தாங்கள் சென்ற கோவில்களைப் பற்றிய விபரங்களும், படங்களும் நன்றாக உள்ளது. தங்களது பதிவை படிக்கையில் ஒவ்வொரு கோவிலிலும் உள்ள அந்தந்த இறைவனை தரிசித்த மகிழவெய்தினேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
கோயில் உலா - கோயில்கள் பற்றிய விவரங்கள் தெரிந்து கொண்டோம். படங்கள் அத்தனையும் மிக மிகச் சிறப்பாக இருக்கின்றன தெளிவாகவும், பெருவேளூர் இரண்டாவது படம் மிக மிக வித்தியாசமாக இருக்கிறது. அழகாகவும் இருக்கிறது.
ReplyDeleteகீதா
தங்கள் கோயில் உலா கட்டுரைகள் இன்றியமையாத பணியைச் செய்கின்றன. குறிப்பாக, பெருந்தொற்று காலத்தில் தடைப்பட்டுப்போன பக்தர்களின் வருகையை துரிதப்படுத்த இக்கட்டுரைகள் தூண்டுகோலாக இருக்கின்றன. நன்றி.
ReplyDeleteகோயில் உலா மூலம் நீங்கள் செல்லும் கோயில்கள் பற்றிய குறிப்புகள் நன்று. ஒரு முறையேனும் கோயில் உலா செல்ல வேண்டும் என்ற ஆவல் உண்டு. பார்க்கலாம் எப்போது எனக்கு வாய்ப்பு அமைகிறது என.
ReplyDeleteகோவில் உலாவில் பல சிறப்பான தலங்களையும் தரிசித்தோம். படங்களும் நன்று.
ReplyDelete