எங்கள் மூத்த மகன் முனைவர் ஜ.பாரத் (9962065436) எழுதியுள்ள மூன்றாவது நூல் திண்ணை.
நேர்மையையும், ஒழுங்கினையும் கடைபிடித்து வாழும் ஒருவர் பிறருக்கு வித்தியாசமாகவே தோன்றுவார். இருந்தாலும் அவர் தன் இருப்பினை சமூகத்தில் ஆழமாகவே பதிந்துவிட்டுச்செல்வார், வெற்றிகரமாக. அதனை நுணுக்கமாக எடுத்துரைக்கிறது இப்புதினம். தஞ்சாவூரின் பறவைப்பார்வை, டெல்டா பகுதியின் செழிப்பு, வணிகத்தின் இரு பக்கங்கள், உழைப்பின் முக்கியத்துவம், உறவுகளின் சிறப்பு, நிகழ்வுகளை வாசகர் முன்கொண்டுவருகின்ற உத்தி ஆகியவற்றின் பின்புலங்களோடு அருமையான கருவைக் கொண்டு படைத்துள்ளவிதம் போற்றத்தக்கது.
பாத்திரங்களின் படைப்பும், உரையாடலும், போக்கும் நம்மை நிகழ்விடத்திற்கு அழைத்துச்செல்வதை உணர்த்தும் பத்திகள் சிலவற்றைப் பார்ப்போம்.
"கல்லாவில் முருகேசன் அமர்ந்திருக்க, ஆதிமூலம் சீனிவாசனிடம், குறுக்கு வழியில் சம்பாதிக்க ஆயிரம் வழி இருக்கு தம்பி. நம்ம வியாபாரம் எப்பவும் அப்படிப்பட்டதில்ல........என்றார்." (ப.15)
"முழுவீச்சில் கணக்குப் புஸ்தகங்களையும், சிட்டாக்களையும் தேடிக்கொண்டிருந்தவருக்கு இந்த தடை பெரிய எரிச்சலையூட்டியது. இப்படி நிரூபித்து என்ன செய்யப்போகிறார்? வயது மூப்பு. முன் மாதிரி வேலையில் கவனம் இல்லாமை, சோர்வு. ஆனால், நேர்மையை மட்டும் விடாப்பிடியாகப் பிடித்துக்கொண்டிருந்தார் ஆதிமூலம்." (ப.21)
"அச்சச்சோ, அப்படியெல்லாம் இல்ல மாமா, மனசு கேக்க மாட்டுது. திண்ணையக் கடந்து காலையிலயும், சாயங்காலமும் வாசல் தொளிக்கப் போகும்போதெல்லாம் அவரு அங்க கெடந்தது நெனப்புக்கு வந்து நிக்கிது. என்ன செய்ய. நான் வாங்கி வந்த வரம் அப்படி. கோயிலுக்குப் போனா மனசு கொஞ்சம் தெம்பா இருக்கு." (ப.53)
"கல்யாணம் பண்ணிக்கிறதோ, கொழுந்த பெத்துக்கிறதோ வாழ்க்கையில்ல. அதுக்கெல்லாம் அப்பறம் நாம எப்படி வாழுறோங்கிறதுலத்தான் இருக்கு. அதுலத்தான் நீ எனக்கு வாங்கிக் கொடுக்கப்போற பேரு இருக்கு." (ப.57)
முனைவர் சு.மாதவன் அவர்களின் அணிந்துரையிலிருந்து:
திண்ணை என்னும் குறியீடாக
வருபவர் இதில்
வரும் தாத்தா
கணக்குப்பிள்ளை ஆதிமூலம்
ஆவார். ஒவ்வொரு திண்ணையும் ஒவ்வொரு
விதம்; வீட்டின் குணத்திற்கு (வடிவம்)
ஏற்ப திண்ணை
அமைந்திருக்கும். ஆதிமூலம்
வீட்டுத் திண்ணை
நல்லறத் திண்ணை;
சீனிவாசனின் திண்ணை
பதுக்கலின் உரத்திண்ணை. முதலாளித்துவம் ஈவிரக்கமற்ற லாபம்
பார்க்கும்; சேர்க்கும்.
தொழிலாளித்துவமும், நடுத்தட்டு
வர்க்கமும் மனிதச்சேவை
உணரும்; திணறும்.
இந்நூல் ஒரு குறும்
புதினம்தான்.
எனினும் இது
அரும் புதினம். கீழவாசல் வணிக வாழ்க்கையை
அப்படியே படம்
பிடித்திருக்கிற இந்தக்
குறும் புதினம்
நம்மை அதனோடு
வாசிப்பு வாழ்க்கை
நடத்த வைக்கிறது.
முதலாளி சீனிவாசனின்
வணிக அதர்மமும்
ஆதிமூலத்தின் வாழவியல்
அறமும் உரசி
உரசிக் கடைசியில்
ஆதிமூலம் எனும்
கணக்குப்பிள்ளையைக் காவு
வாங்கிவிடுகிறது என்பதை
எண்ணும்போது ‘காசு’
என்றாலே பொய்
என்பதன் உண்மையை
உணரவைக்கிறது.
இப்புதினத்தைப் படிக்கப் படிக்க
நெஞ்சம் முழுவதும்
தஞ்சை நிறைகிறது.
இப்புதினத்தை எடுத்துப்
படிக்கத் தொடங்கியாரும்
ஒரே மூச்சில்
முடிக்க முடியும்.
அவ்வளவு மன
நெருக்கத்தைத் தஞ்சையில்
வாழ்ந்த எனக்குத்தந்தது.
தஞ்சையில் வாழ
வாய்ப்பில்லாமல் வேறு
ஊர்களில் வாழ்பவரும்
புதினத்துக்குள் புழக்க
ஆரம்பித்துவிடுவார்கள். அந்த
அளவிற்கு வரலாற்றுச்
சித்திரமாக இப்
புதினம் நெஞ்சில்
விரிகிறது; காட்சியாக்கும் கலைச் சொற்களில்
நிறைகிறது.
நூலினை சுமார் 40 ஆண்டு கால நண்பர் திரு.ந.பக்கிரிசாமி, [கண்காணிப்பாளர் (பணி நிறைவு), பொது நூலகத் துறை, தஞ்சாவூர்] அவர்கள் வெளியிடல்
(உடன் நூலாசிரியர்)
தொடர்புக்கு: +91 99620 65436/+91 94889 69722, tamilkudilpathipagam@gmail.com
நவம்பர் 2021, ISBN: 978-93-5578-276-2, 94 பக்கங்கள், ரூ.140
திண்ணையை எந்த அஞ்சல் கட்டணமும் இல்லாமல் நூல் விலையான ரூ.140ல் பெற ஆகஸ்ட் 2022க்கு முன் கீழுள்ள படிவத்தை நிரப்பி அனுப்பலாம். கூகுள் பே மூலம் பணம் அனுப்ப: UPI ID sindhumathionline@oksbi
விமர்சனம் நூலின் தரத்தை அழகாக விவரிக்கிறது.
ReplyDeleteஆசிரியருக்கு எமது வாழ்த்துகள்.
அருமை... வாழ்த்துகள்...
ReplyDeleteவணக்கம் சகோதரரே
ReplyDeleteபதிவு அருமை. நூலைப் பற்றியும், நூலாசிரியர் பற்றியும் சிறந்த விமர்சனம். நூலாசிரியருக்கு மனமார்ந்த வாழ்த்துகள். மென்மேலும் இது போன்ற பல நூல்களை எழுத வாழ்த்துகள். பகிர்வுக்கு மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
ஓ!.. நம்ம ஊருக்குள் நடக்கின்ற கதையா!.. தங்களது எழுத்தின் வண்மை தங்கள் மகனாருக்கும் இருக்கும் தானே..
ReplyDeleteநல்வாழ்த்துகளுடன்...
வாழ்த்துகள் இளைய சிங்கத்துக்கு..
ReplyDelete
ReplyDeleteஉங்கள் புதல்வன் அவர்களுக்கு வாழ்த்துகள்.
மாதவன் அவர்கள் அணிந்துரை நன்றாக இருக்கிறது.
முனைவர் ஜ.பாரத் (9962065436) எழுதியுள்ள மூன்றாவது நூல் திண்ணை. - முனைவர் ஜ.பாரத் (9962065436) எழுதியுள்ள மூன்றாவது நூல் திண்ணை. -
ReplyDeleteஇரண்டாவது நூல், கடவுள்களுடன் தேநீர் - மகிழ்ச்சி. எனக்கு 3 புத்தகங்களும் அனுப்புங்கள். எனது முகவரி N.Rathnavel, 7-A, Koonangulam Devangar North St., SRIVILLIPUTTUR. 626 125 (Virudhunagar Dt). 94434 27128 - rathnavel.natarajan@gmail.com - எனக்கு GPay கணக்கு இல்லை. வங்கிக்கணக்கு விபரங்கள் என் மின்னஞ்சல் முகவரிக்கு கொடுங்கள். Neft மூலம் பணம் அனுப்பி தகவல் சொல்கிறேன். வாழ்த்துகள் திரு முனைவர் ஜ.பாரத் - மகிழ்ச்சி & வாழ்த்துகள் சார் திரு முனைவர் ஜம்புலிங்கம்
பொருள் -- அதிகாரம் -- புகழ் இவற்றைக் கொண்டே மனிதர்கள் அளவீடு செய்யப்படுகிறார்கள் .எனவே அறம் மீறாமல் வாழ வேண்டும் என்னும் சிந்தையில் இருந்தும் விலகாத மனிதரை காண்பது மிக மிக அரிதே . எனினும் நேர்மை திறன் கொண்டு அறம் காட்டும் பாதை நோக்கி வாழ வழி காட்டும் ஆசான்கள் சமூகத்திற்கு அவசியம் தேவை . அறத்தொடு கூடிய புதினத்தை தரும் ஜ.பாரத் அவர்களுக்கு மனம் நிறைந்த பாராட்டுகள் .பணம் செலுத்துகிறேன் . எனக்கும் திண்ணை தேவை ---- பேரணி ஸ்ரீதரன் ,97873 00353.
ReplyDeleteவாழ்வியல் சார்ந்த கதைக்களங்கள் எழுத மிகவும் கடினமானவை. கொஞ்சம் சறுக்கினால் சலிப்புத் தட்டிவிடும்; சலிப்புத் தட்டாமல் எழுத வேண்டும் எனத் திட்டமிட்டு எழுதினால் செயற்கைத்தனமாய் ஆகிவிடும். எனவேதான் துப்பறியும் கதைகள், அறிவியல் கதைகள், பேய்க்கதைகள், மன்னர் காலக் கதைகள் போன்ற எதையும் விட வாழ்வியல் சார்ந்த கதைகள் எழுதக் கடினமானவை. அப்படிப்பட்ட கதைக்களத்தை எடுத்துக் கொண்டு பாரத் அவர்கள் அதைச் சிறப்பாகவும் வடித்திருக்கிறார் என்பது அணிந்துரையில் தெரிகிறது. எழுத்தாளருக்கு வாழ்த்துக்கள்!
ReplyDeleteதங்களின் அன்பு மகனுக்கு வாழ்த்துகள்
ReplyDelete