நாங்கள் பயின்ற கும்பகோணம் அறிஞர்
அண்ணா அரசு மேல்நிலைப்பள்ளியின் நூற்றாண்டு விழா அண்மையில் கொண்டாடப்படவுள்ளது. அது தொடர்பாக வரலாற்று ஆவணங்களைத் திரட்ட முயற்சி மேற்கொண்டபோது அப்பள்ளியில் இருந்த 1919ஆம் ஆண்டின் கல்வெட்டினைக் காணமுடிந்தது. நூற்றாண்டு கால கல்வெட்டினைக் கண்ட அனுபவத்தை இப்பதிவில் காண்போம்.
இப்பள்ளி அப்போது நகராட்சி கவுன்சிலராக இருந்த முகமது ஹபிபுல்லா சாகிப் பகதூர் என்பவரால் 10 நவம்பர் 1919இல் திறந்து வைக்கப்பட்டதாக நாளிதழில் வெளியான செய்தி அடிப்படையில் அந்தக் கல்வெட்டினைக் காணும் முயற்சி மேற்கொள்ளப்பட்டது.
அந்தக் கல்வெட்டினைப் பார்த்து, புகைப்படம் எடுத்துக்கொள்ள தலைமையாசிரியர் திரு வை.சாரதி அவர்களிடம் கேட்டபோது அவர் தொலைபேசிவழியாக அனுமதி தந்ததோடு, திரு இளையராஜா மற்றும் திரு மலைச்சாமி அவர்களை இப்பணிக்காக எங்களுக்கு உதவும்படி பணித்தார். முனைவர் மு.செல்வசேகரன், திரு ஆ.வடிவேலு, திரு செந்தில்நாதன் ஆகியோர் துணையுடன் கல்வெட்டு இருக்கும் கட்டடத்திற்குச் சென்றோம். கல்வெட்டு சற்றே தெளிவின்றி இருந்தது. பின்னர் எழுத்து தெளிவாகத் தெரியும்படி சுத்தம் செய்து, புகைப்படம் எடுத்தோம். அரிய செய்திகளை ஆவணப்படுத்தும் முயற்சியின் முதல் படியாக இந்த கல்வெட்டு பற்றிய செய்தியை அமைந்தது.
50 ஆண்டுகளுக்கு மேலுள்ள கல்வெட்டுகளின் அடிப்படையில் நோக்கும்போது பள்ளியின் தலைமையாசிரியரின் அலுவலக வாயிலின் வலது புறம் இருந்த கல்வெட்டினைக் கண்டோம். அக்கல்வெட்டில் 31.10.1955 அன்று புதிய கட்டடம் திறந்துவைக்கப்பட்டமைக்கான குறிப்பினைக் கண்டோம்.
அதே கட்டடத்தின் மாடியில் திரு. ப.தி.சோ.குமரசாமி செட்டியார் அவர்கள் நினைவு மன்றம் என்ற குறிப்போடு 13.11.1957 நாளிட்ட கல்வெட்டினைக் கண்டோம்.
நூற்றாண்டு காணவுள்ள எங்கள் பள்ளியின் தொடர்பான பிற முக்கிய விவரங்களை ஆவணப்படுத்தும் முயற்சியை மேற்கொண்டு வருகின்றோம். நண்பர்களின் ஒத்துழைப்பு எங்களை மென்மேலும் செயலாற்ற உதவும் என்று நம்புகிறோம்.
கல்வெட்டு தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் 6 அக்டோபர் 2019இல் நடைபெற்ற ஆலோசனைக்கூட்டத்தில் பகிரப்பட்டன. விழாவிற்காக நிர்வாக அனுமதி பெற உரிய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு ஒவ்வொரு மாதமும் ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பெற்று நன்கொடை பெறல், மலர் வெளியிடல், விழா ஏற்பாடு உள்ளிட்ட பல பணிகளைக் குறித்த ஆயத்தப்பணிகள் நடந்துவருவது, முன்னாள் மாணவர் சங்கம் அண்மையில் முறையாகப் பதிவு செய்யப்பட்டது, விழா தொடர்பான சில ஏற்பாடுகளை தம் பொறுப்பில் எடுத்துக்கொள்வதாக சில மாணவர்கள் முன்னெடுத்து வருவது உள்ளிட்ட பல செய்திகள் இக்கூட்டத்தில் விவாதிக்கப்பட்டன.
பள்ளி தொடர்பான பிற பதிவுகள் :
அறிஞர் அண்ணா அரசு மேல்நிலைப்பள்ளி நூற்றாண்டு விழா ஆலோசனைக்கூட்டம்
அறிஞர் அண்ணா அரசு மேல்நிலைப்பள்ளி : இனிய நினைவுகள்
விக்கிபீடியா : அறிஞர் அண்ணா அரசு மேல்நிலைப்பள்ளி
ஆங்கில விக்கிபீடியா : Arignar Anna Government Higher Secondary School
அறிஞர் அண்ணா அரசு மேல்நிலைப்பள்ளி நூற்றாண்டு விழா ஆலோசனைக்கூட்டம்
அறிஞர் அண்ணா அரசு மேல்நிலைப்பள்ளி : இனிய நினைவுகள்
விக்கிபீடியா : அறிஞர் அண்ணா அரசு மேல்நிலைப்பள்ளி
ஆங்கில விக்கிபீடியா : Arignar Anna Government Higher Secondary School
10 ஜனவரி 2025இல் மேம்படுத்தப்பட்டது.
தாங்கள் படித்த பள்ளியின் நூற்றாண்டு விழா நிகழ்வு வேலைகளை செய்யும் பாக்கியம் தங்களுக்கு கிட்டியதற்கு வாழ்த்துகள்.
ReplyDeleteஅறிஞர் அண்ணா அரசு மேல்நிலைப்பள்ளி நூற்றாண்டு விழா சிறப்பாக நடைபெற வாழ்த்துக்கள்.
ReplyDeleteநீங்கள் படித்த பள்ளியின் நூற்றாண்டு விழாவிற்கு முன்னாள் மாணவர்கள் எல்லோரும் வருவார்கள். உங்களுக்கு பழைய நட்புகளை சந்திக்கும் தருணம் வாய்த்து இருக்கிறது.
அரிய தகவல்களும், படங்களும், படித்துப் பார்த்து மகிழ்ந்தேன். மிக்க நன்றி.
ReplyDeleteவணக்கம் சகோதரரே
ReplyDeleteதாங்கள் படித்த பள்ளியின் நூற்றாண்டு விழாவிற்கு மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்.
பள்ளியின் விழாவிற்காக தாங்கள் அனைவரும் ஆற்றும் பணி சிறப்பானது. பணி சார்ந்த படங்களும் அதை குறித்த பகிர்வும் கண்டு மகிவுற்றேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
சிறப்பான முயற்சி. வாழ்த்துகள்.
ReplyDeleteசிறப்பான கட்டுரை, வாழ்த்துக்கள். நன்றி
ReplyDeleteசிறப்பிற்கு சிறப்பு சேர்ப்பது என்பது இது தான்... வாழ்த்துகள் ஐயா...
ReplyDeleteதங்கள் பள்ளியின் நூற்றாண்டு விழாவிற்கு என் மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்!
ReplyDeleteபடித்த பள்ளி என்றாலே அது மனத்தில் விளைக்கும் மகிழ்ச்சிக்கு அளவேது?..
ReplyDeleteகும்பகோணத்து தமிழ் எழுத்தாளர்களைப் பற்றி அவர்கள் படைப்புகள் பற்றி விவரமான ஒரு நூல் வெளிவந்தால் நல்லது.
அறிஞர் அண்ணா அரசு மேல்நிலைப் பள்ளியின் நூற்றாண்டு விழா சிறப்புடன் நடைபெற வாழ்த்துக்கள்...
ReplyDeleteஅரசுப் பள்ளிகளை முன்னாள் மாணவர்கள் அரவணைக்கும் பழக்கம் தங்களைப் போன்றவர்களின் முயற்சியால் துளிர்க்கட்டும்' பகிர்வுக்கு நன்றி. நூற்றாண்டு விழா சிறக்க வாழ்த்துக்கள்
ReplyDeleteதாங்கள் படித்த பள்ளியின் நூற்றாண்டுப் பழமையைக் கண்டறிந்து போற்றும் செய்திப் பதிவு அருமை. வாழ்த்துகள்.
ReplyDeleteகொடுத்து வைத்தவர் நீங்கள்
ReplyDeleteநான் படித்த (1 முதல் 8 வரைக்கும்) இன்னும் இரண்டு வருடங்களில் 100 ஆண்டு விழா காணப் போகின்றது. வருகின்ற மார்ச் மாதம் ஆண்டு விழா. விரைவில் அது குறித்து சில மகிழ்ச்சிகரமான தகவல்களை விரைவில் எழுதுகிறேன்.
ReplyDeleteநாம் படித்த பள்ளி என்றாலே அது தனிதான்.
ReplyDeleteநல்ல முயற்சி ஐயா. விழா சிறப்புடன் நடந்திட வாழ்த்துகள்.
துளசிதரன், கீதா