15 April 2022

மயிலாப்பூர் சப்த சிவத்தலங்கள்

மார்ச் 2022இல் அறக்கட்டளைச்சொற்பொழிவிற்காகச் சென்னை சென்றிருந்தபோது மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் விழா நடைபெற்றுக்கொண்டிருந்ததை அறிந்தேன்.

அப்போது எனக்குக் கும்பகோணத்தில் கோயில் திருவிழாவில் கலந்துகொண்டு சென்றது நினைவிற்கு வந்தது. கோயிலைச் சுற்றி பெரிய அழகான வீதிகள். அதிகாரநந்தியின்மீது கபாலீஸ்வரர் உலா வரும் காட்சியைக் கண்டு ரசித்து உடன் சிறிது தூரம் சென்றேன். அழகான பெரிய குளத்தைக் கண்டு சிறிது நேரம் அங்கே நின்றேன்.

கபாலீஸ்வரர் கோயிலுடன் தொடர்புடைய கோயில்கள் மயிலாப்பூரில் இருப்பதாகவும், அவற்றை ஒரே நேரத்தில் தரிசிப்பது சிறப்பு என்றும் கூறினர். அவை 1) கபாலீஸ்வரர் கோயில், 2) காரணீஸ்வரர் கோயில், 3) வெள்ளீஸ்வரர் கோயில், 4) மல்லீஸ்வரர் கோயில், 5) விருப்பாட்சீஸ்வரர் கோயில், 6) வாலீஸ்வரர் கோயில், 7) தீர்த்தபாலீஸ்வரர் கோயில் என்பனவாகும். இவற்றில் தீர்த்தபாலீஸ்வரர் கோயில் திருவல்லிக்கேணியில் உள்ளது. அனைத்துக் கோயில்களுக்கும் அடுத்தடுத்து சென்று சுமார் இரண்டு மணி நேரத்தில் தரிசனத்தை நிறைவு செய்தேன்.


கபாலீஸ்வரர் கோயில் விமானம்
அதிகாரநந்தியின்மீது கபாலீஸ்வரர் உலா

கபாலீஸ்வரர் கோயில் குளம்


வெள்ளீஸ்வரர் கோயில் விமானம்

மல்லீஸ்வரர் கோயில் விமானம் 

விருப்பாட்சீஸ்வரர் கோயில் நுழைவாயில்

தீர்த்தபாலீஸ்வரர் கோயில் நுழைவாயில்

வாலீஸ்வரர் கோயில் நுழைவாயில்

காரணீஸ்வரர் கோயில் விமானம்

ஏழு சிவன் கோயில்களுக்குச் சென்று தரிசனம் செய்துவிட்டு, மாதவப்பெருமாள் கோயிலுக்கும், முண்டகக்கண்ணியம்மன் கோயிலுக்கும் சென்றேன்.



அட்டவீரட்டத்தலங்கள், சப்தஸ்தானத்தலங்கள், சப்தமங்கைத்தலங்கள் என்பதைப் போல இக்கோயில்களை சப்த சிவத்தலங்கள் என்று கூறுகின்றனர். கும்பகோணத்தில் மகத்தின்போதும் பிற விழாக்களின்போதும் ஒரே நாளில் 10க்கும் மேற்பட்ட கோயில்களுக்குச் சென்று இறைவனை வழிபட்டுள்ளேன். அத்தகைய கோயில்களுக்குச் சென்ற நினைவினை மயிலாப்பூரில் உணர்ந்தேன். மன நிறைவோடு அங்கிருந்து திரும்பினேன்.

இவற்றுள் காரணீஸ்வரர் கோயில், வெள்ளீஸ்வரர் கோயில், மல்லீஸ்வரர் கோயில், விருப்பாட்சீஸ்வரர் கோயில், வாலீஸ்வரர் கோயில், முண்டகக்கண்ணியம்மன் கோயில் ஆகிய கோயில்களுக்கு விக்கிப்பீடியாவில் பதிவு இல்லாத நிலையில் புதிய பதிவுகளை தொடங்கி உரிய ஒளிப்படங்களை இணைத்தேன். தீர்த்தபாலீஸ்வரர் கோயில் பதிவு இருந்த நிலையில் ஒளிப்படத்தை இணைத்தேன். இணைப்புகளைச் சொடுக்கி விக்கிப்பீடியாவில் நான் ஆரம்பித்த கட்டுரைகளைக் காண அழைக்கிறேன். தொடர்ந்து அப்பதிவுகளை மேம்படுத்துவேன்.

8 comments:

  1. நல்லதொரு பதிவு.. அழகிய படங்களுடன் தரிசனம் இனிது.. மேல் விவரங்களுக்கு மகிழ்ச்சி.. நன்றி..

    ReplyDelete
  2. படங்கள் அனைத்தும் மிகவும் சிறப்பாக இருக்கிறது தரிசனம் நன்று

    ReplyDelete
  3. நீங்கள் குறிப்பிட்டிருக்கும் கோயில்கள் அனைத்திற்கும் சென்றிருக்கிறேன் ஆனால் இப்படி ஸ்பதசிவ ஸ்தலங்கள் என்பது தெரிந்திருக்கவில்லை. மிக்க நன்றி ஐயா

    படங்கள் அனைத்தும் சிறப்பாக இருக்கின்றன.

    கீதா

    ReplyDelete
  4. சப்தசிவ தலங்கள் இதுவரை அறிந்ததில்லை. ஆனால் கபாலீஸ்வரர், வெள்ளீஸ்வரர், வாலீஸ்வரர் கோயில் சென்றிருக்கிறேன். மற்றவை சென்றதில்லை. குறித்துக் கொண்டேன்.

    படங்கள் எல்லாம் மிக நன்றாக இருக்கின்றன

    துளசிதரன்

    ReplyDelete
  5. சிவத்தலங்கள் பெளத்த தலங்கள் சமணர் தலங்கள் என தங்கள் பயணம் தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  6. படங்களும் தகவல்களும் நன்று. தொடரட்டும் தங்கள் சீரிய பணி.

    ReplyDelete
  7. நீங்கள் இத்தனை கோவில்களுக்கும் சென்றதுடன் அவற்றை விக்கிப்பீடியா விலும் பதிவேற்றினீர்களே, அதற்காக உங்களுக்கு தலைவணங்குகிறேன்.

    ReplyDelete
  8. பல தலங்களையும் தரிசித்து எங்களுடன் பகிர்ந்து கொண்டீர்கள் கண்டு களித்தோம்.

    பல கோவில் பெயர்களே எமக்கு புதியன. கபாலீஸ்வரர் மட்டும் தரிசித்திருக்கிறேன்.

    ReplyDelete