தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் முதல் துணைவேந்தர் முதுமுனைவர் வ.அய்.சுப்பிரமணியம் அவர்கள், பொறுப்பை ஒப்படைத்த 31.7.1986இல், ஆய்வாளர்கள், அலுவலர்கள் அனைவருக்கும் அனுப்பிய வாழ்த்துக்கடிதம் வாசிப்போரை மனம் நெகிழவைக்கும்படி இருந்தது.
அவர் காலத்தில் தட்டச்சுச்சுருக்கெழுத்தராகப் பணியில் சேர்ந்து பணியாற்றியது நினைவில் நிற்கும் அனுபவம்.
தமிழ்ப் பல்கலைக்கழகம், பிற பல்கலைக்கழகங்கள் போன்ற ஒன்றன்று. இது உயராய்வு மையம். இங்கே அறிவுசான்ற சிலரே இடம் பெற முடியும். இடம் பெற்றவர்களும் தமது அறிவாற்றலை வெளிப்படுத்தத் தொடர்ந்து தம்மைத் தாமே தேர்வுக்குட்படுத்திக் கொள்ள வேண்டும். அதைப்போன்றே அலுவலகமும் சிறப்பாகச் செயற்படவேண்டும்.
என்று ஆய்வின் தரங் குறைகிறதோ அன்று தமிழ்ப் பல்கலைக்கழகம் தளர்ந்துவிடும். நல்கைகள் குறையும். பொருள் முட்டுப்பாடு தோன்றி தமிழ்ப் பண்பாட்டைக் காத்து வளர்க்கும் இந்த நிறுவனம் நிலை குலைந்துவிடும். இதனை ஒவ்வொருவரும் நினைவிற் கொள்வது நன்று. இதன் வாழ்வும், வளர்ச்சியும் ஒவ்வொரு ஆய்வாளர்/அலுவலர் கையில் எப்போதும் இருக்கும்.
'தீதும் நன்றும் பிறர் தர வாரா' என்ற புறநானூற்று அடிகள் நமக்கு மனப்பாடம்.
'அறநெறி தவறாமல் செயற்படுவதே பெரும் அரச வெற்றி' என்று அசோகன் கல்லெழுத்தில் கூறியதும் நமக்கு நினைவிருக்கலாம்
தமிழ்ப் பல்கலைக்கழக வளர்ச்சியை தமிழர் அனைவரும், ஏன், பிற மாநிலத்தார்கூட உன்னிப்பாகக் கவனித்து வருவர். அயல்மாநிலத்தில் வாழ்ந்த தமிழ் மகன் என்ற முறையில் அகலவிருந்து பார்த்து உங்கள் வளர்ச்சியை என் மனம் வாழ்த்தும். தளர்ச்சியிருப்பின் என் முகம் வாடும்.
அன்றுள்ள பல்கலைக்கழக அதிகாரிகள் அனுமதித்தால் நான் காலமானபின் என்னுடற் சாம்பலின் இம்மியளவைத் தஞ்சை தென் வளாகத்தில் ஒரு மூலையில் என் கண் முன்னே வளர்ந்த மரத்தடியிலும், காஞ்சி, உதகை, மண்டப மையங்களில் வளரும் மரத்தடியிலும் புதைத்திட என் குழந்தைகள் அனுப்புவர். புதைத்திடுக.
நீங்களனைவரும் வளமுற வாழ்த்துகிறேன்.





தமிழ்ப்பணியில் தம்மை முழுதாக ஒப்படைத்த ஒருவரின் மனம் இப்படிதான் இருக்கும்.
ReplyDeleteதுணை வேந்தரின் வரிகள் நெகிழ்ச்சி.
ReplyDeleteசற்று முன் ஐயாவையும் அவர்தம் இறுதி மடலையும் நினைத்தேன் ..
ReplyDeleteநீங்கள் அனுப்பி விட்டீர்கள்...
வ.அய்.சு.நூற்றாண்டு நாளை தொடங்குகிறது...
நாம்...
நாங்கள் இன்றே கொண்டாடத் தொடங்கிவிட்டோம்..
நெஞ்சம் நிறைந்த மகிழ்ச்சியும் நன்றியும் பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் உரித்தாகுக நண்பரே...!
இப்படியும் ஒரு மனிதரா?
ReplyDeleteமனம் நெகிழ்ந்து போகிறது.
மாமனிதர்
இது தான் தமிழ்ப் பணி!
ReplyDeleteஇது தான் மரபு காத்தல்!!
இதுவே தாய் மண்ணுக்கும் மாந்தர்க்கும் கடமையாற்றல்!!!
தாய்மொழியை கற்கும் முயற்சியை கூட செய்யாமல், தமிழ் என்றும், உணர்வு என்றும் முழங்கும் மடமையை எள்ளப் பழகுவோம்!!!!
நம் மொழியை அழகுற பேசியும், பாங்குற எழுதியும், பற்பல ஆக்கியும், பாடியும், பழகியும், நீடூழி வாழ வைப்போம்!
தமிழை நளினமாக, ஈர்க்கும் வகையில், பெரு மகிழ்வோடும், பெருமிதத்தோடும் பேசுவதால் கூட அதனை உலகே கொண்டாட செய்ய முடியும்!!!!!
😃 வாருங்கள்!
உலகை நம் தமிழால் ஈர்ப்போம் 🎉❤️
இதுவே, முது முனைவர் புகழ்சால், உயர்திரு வ. அய். சுப்பிரமணியம் அவர்களுக்கு நாம் ஆற்றும் கடன்!
ReplyDeleteபடிக்கப் படிக்க மனதில் நெகிழ்ச்சி. பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.
ReplyDelete