30 May 2026

சுயசரிதை

கும்பகோணத்தில் 2.4.1959இல் பிறந்து, அங்கேயே பள்ளி, கல்லூரிப்படிப்பை நிறைவு செய்து,  படித்த காலத்தில் பெற்ற தட்டச்சு, சுருக்கெழுத்து, ஹிந்தித் தேர்ச்சி போன்ற தகுதிகளுடன் பணியில் சேர்ந்து, பணி நிறைவு பெற்றது வரை எதிர்கொண்ட வாழ்க்கை அனுபவங்கள் சிலவற்றை அவ்வப்போது என்னுடைய வலைப்பூவில் எழுதியுள்ளேன். அவற்றை இங்கே வரிசைப்படுத்தி, முடிந்தவரை காலவாரியாகத் தந்துள்ளேன். என்னை சுயமதிப்பீடு செய்துகொள்வதற்கும், மேம்படுத்திக்கொள்வதற்கும் இப்பதிவு உதவுவதாக நம்புகிறேன். 

உறவுகள்

நினைவுகள்

விழாக்கள்

தட்டச்சு, சுருக்கெழுத்து


பணி/தமிழ்ப் பல்கலைக்கழகம்

சுய மதிப்பீடு

வாழ்க்கைக்குறிப்பு/முனைவர் பா.ஜம்புலிங்கம்

1959இல் கும்பகோணத்தில் பிறந்த இவர், தொடக்கக்கல்வி, மேல்நிலைக்கல்வி, கல்லூரிப்படிப்பினை முறையே கும்பேஸ்வரர் திருமஞ்சனவீதி ஆரம்பப்பள்ளி, அறிஞர் அண்ணா அரசு உயர்நிலைப்பள்ளி, அரசினர் ஆடவர் கல்லூரியில் நிறைவு செய்தார். முதுகலைப் படிப்பினைச் சென்னைப் பல்கலைக்கழகத்திலும், ஆய்வியல் நிறைஞர் ஆய்வினை மதுரை காமராசர் பல்கலைக் கழகத்திலும், முனைவர்ப்பட்ட ஆய்வினைத் தமிழ்ப் பல்கலைக்கழகத்திலும் மேற்கொண்டார்.

சென்னை, தஞ்சாவூர், கோயம்புத்தூரில் தனியார் நிறுவனங்களில் சுருக்கெழுத்தராகப் பணியாற்றினார். தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் சுருக்கெழுத்துத் தட்டச்சராகப் பணியில் சேர்ந்து, படிப்படியாக உயர்ந்து உதவிப்பதிவாளராகப் பணி நிறைவு பெற்றார்.

தனியாகவும், பிற அறிஞர்களோடு இணைந்தும் 20 புத்தர் சிலைகளையும், 13 சமண தீர்த்தங்கரர் சிலைகளையும், ஒரு நாகப்பட்டின புத்தர் செப்புத்திருமேனியையும் கண்டறிந்துள்ளார்.

புதுதில்லி, நேரு டிரஸ்ட் மூலமாக சோழ நாட்டில் பௌத்தம், திருவையாறு சப்தஸ்தானக் கோயில்கள் என்ற தனித்திட்டங்களையும், நெறியாளர் என்ற நிலையில் தஞ்சாவூர் மாவட்டத்தில் சமணம், சக்கராப்பள்ளி சப்தஸ்தானக் கோயில்கள் என்ற திட்டங்களையும் நிறைவு செய்துள்ளார்.

வாழ்வில் வெற்றி, படியாக்கம், விக்கிப்பீடியா 1000: பதிவு அனுபவங்கள் ஆகிய நூல்களையும், சக ஆய்வாளர்களுடன் இணைந்து தஞ்சையில் சமணம் என்ற நூலையும் எழுதியுள்ளார்.

மரியாதைராமன் கதைகள், பீர்பால் கதைகள், தெனாலிராமன் கதைகள், கிரேக்க நாடோடிக்கதைகள் ஆகிய நூல்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ளார்.

சோழ நாட்டில் பௌத்தம் என்ற ஆய்வு நூலைத் தமிழிலும் ஆங்கிலத்திலும் எழுதியுள்ளார்.

சிறந்த எழுத்தாளரான இவர், சோழ நாட்டில் பௌத்தம், முனைவர் ஜம்புலிங்கம் என்னும் இரு வலைப்பூக்களிலும், ஆய்விதழ்கள், பருவ இதழ்கள், நாளிதழ்கள் என அனைத்திலும் 600க்கும் மேற்பட்ட கட்டுரைகளை எழுதியுள்ளார். மேலும், தமிழ், ஆங்கில விக்கிப்பீடியாவிற்கு 1600க்கு மேற்பட்ட கட்டுரைகளை வழங்கியுள்ளார்.

தமிழ்நாடு பல்கலைக்கழகப் பணியாளர் சங்கக் கூட்டமைப்பின் சிறப்பு மலர், பன்னிரு திருமுறைச் சான்றோர் வாழ்வியல், மகாமகம் மலர் 2004, தஞ்சை இராஜராஜேச்சரம் திருக்குட நன்னீராட்டுப் பெருவிழா மலர் ஆகியவற்றில் மலர்க்குழு உறுப்பினராகப் பணியாற்றியுள்ளார்.

சித்தாந்த இரத்தினம், நிகரிலி சோழன், தகைசால் தமிழர், மும்முடிச்சோழன், ஆவணக்குரிசில், எழுச்சித்தமிழர் இலக்கிய விருது, அயோத்திதாசர் ஆதவன் விருது, அருமொழி சோழன் விருது உள்ளிட்ட பலla விருதுகளைப் பெற்றுள்ளார்.

படியாக்கம் நூலுக்காக மேனாள் இந்தியக் குடியரசுத்தலைவர் மேதகு ஆ.ப.ஜெ.அப்துல் கலாம் அவர்களிடமிருந்தும், சோழ நாட்டில் பௌத்தம் நூலுக்காக இந்தியக் குடியரசுத்துணைத்தலைவர் மேதகு சி.பி.ராதாகிருஷ்ணன் அவர்களிடமிருந்தும் பாராட்டுக் கடிதங்களைப் பெற்றுள்ளார்.

மின்னஞ்சல்: drbjambulingam@gmail.com/அலைபேசி: 9487355314

10.6.2026இல் மேம்படுத்தப்பட்டது.

29 May 2026

2016 மகாமகம்

2016ஆம் ஆண்டு மகாமகம் என்னுடைய எழுத்துலகில் ஒரு முக்கியமான தாக்கத்தை உண்டாக்கியது.  அந்த மகாமகத்தின்போது கும்பகோணத்திற்குப் பல முறை சென்று கும்பகோணத்திலுள்ள, தீர்த்தவாரி காண்கின்ற சைவ, வைணவக் கோயில்கள் உள்ளிட்ட பல கோயில்களைப் பற்றி பதிவுகளை எழுதினேன். மகாமகத்தின்போது நடைபெற்ற பெரும்பாலான கோயில்களில் குடமுழுக்குகளில் கலந்துகொண்டுள்ளேன். 

அத்துடன் விக்கிப்பீடியாவிலும்  பதிவுகளை அவ்வப்போது ஆரம்பித்து, உரிய புகைப்படங்களை இணைத்தேன். மகாமகம் தொடர்பாக வெளியான மலர்களில் என்னுடைய கட்டுரைகள் வெளியானதும் ஒரு மறக்கமுடியாத அனுபவமாக இருந்தது. இப்பதிவில் மகாமகம் தொடர்பாக எழுதிய கட்டுரைகளை வாசிக்க அந்தந்த பதிவினைச் சொடுக்கலாம். 

2016 மகாமகம் தொடங்குவதற்கு கிட்டத்தட்ட ஓராண்டுக்கு முன்பாக மேற்கொள்ளப்பட்ட பயணமானது ஓராண்டு நீடித்து, மகாமகம் நிறைவுற்ற பின் நிறைவடைந்தது. மகாமக விழா நாட்களில் தொடர்புடைய கோயிலுக்குச் சென்று புகைப்படங்கள் எடுக்கப்பட்டு, அன்றோ மறுநாளோ பதிவில் இணைக்கப்பட்டன. இதற்கு முன்னால் நான் கண்ட ஐந்து மகாமகங்களைப் பற்றியும் பதிவு எழுதியுள்ளேன். ஈசனின் அருளோடு  தொடர்ந்து எழுதுவேன். 

மகாமகத்திற்கு முந்தைய ஆண்டு நிகழ்வுகள்



தீர்த்தவாரி சிவன் கோயில்கள்/கும்பாபிஷேகம்

தீர்த்தவாரி வைணவக் கோயில்கள்/கும்பாபிஷேகம்
மகாமகம் மலர்

மகாமகம் நினைவுகள்

பிற கட்டுரைகள்

மாசி மகம்

விக்கிப்பீடியா
(பதிவு ஆரம்பிக்கப்பட்டு, கோயில்களிலும், குளத்திலும் விழா நாட்களிலும், தீர்த்தவாரி சைவ, வைணவக் கோயில்களிலும் புகைப்படங்கள் என்னால் எடுக்கப்பட்டு பதிவேற்றம் செய்யப்பட்டன.)

28 May 2026

மொழியாக்கம்

கும்பகோணத்தில் பேட்டைத்தெருப்பள்ளி என்று அழைக்கப்பட்ட, தற்போது அறிஞர் அண்ணா அரசு மேல்நிலைப் பள்ளியில் படித்தபோது (1972-75)  எங்கள் நண்பரின் தந்தை அவ்வப்போது என்னை அழைத்து, திண்ணையில் உட்காரவைத்து படிப்பைப் பற்றியும், பள்ளிப்படிப்பிற்குப் பின் உள்ள இலக்கினைப் பற்றியும் பொறுமையாகப் பேசுவார். அவ்வாறு ஒரு முறை பேசும்போது “ரயில் போகிறது” என்பதை ஆங்கிலத்தில் கூறும்படி கேட்டார். அதற்காக நான் அளித்த மறுமொழியே பின்னாளில் என்னுடைய மொழிபெயர்ப்பு ஆர்வத்திற்கு ஆரம்பமாக அமைந்தது.  

மொழியாக்கத்திற்கான ஆரம்பம்


தேடலும், வாசிப்பும்

ஆண்டின் சிறந்த சொல்

தலைவர்கள்

அரசியல், வரலாறு

பிற துறை பிரமுகர்கள்

பிற பொருண்மைகள்
இதழ் பதிப்பு, நடை



அயலக இதழ்களின் செய்தி நறுக்குகள்
Pudhu Ezuthu, Kaveripattinam



7.6.2026இல் மேம்படுத்தப்பட்டது.

விக்கிப்பீடியா

விக்கிப்பீடியாவில் ஜூன் 2013இல் எழுத ஆரம்பித்து பெற்ற பல அனுபவங்களைப் பெறமுடிந்தது. ஆங்கிலத்தில் இல்லாத, தமிழ், தமிழ்ப் பண்பாடு போன்றவை தொடர்பான பதிவுகள் அனைவருக்கும் சென்றடையவேண்டும் என்ற நோக்கில் ஆங்கில விக்கிப்பீடியாவில் எழுத ஆரம்பித்தேன். நான் கடந்து வந்த பாதை புதிய பயனர்களுக்கு உதவியாக இருக்கும் என்று நம்புகிறேன். சக விக்கிப்பீடியர்களின் துணையுடன் என் பயணம் தொடரும்.
  • பயனராகாமல் முதல் பதிவு, நீக்கம், ஜுன் 2013
  • என்னைப் பற்றி எழுதுதல், தலைப்புப் பிரிப்பு, பயனர் ஆதல்
  • முதல் பதிவு எழுதி மேம்படுத்துதல், 6 ஜுலை 2014
  • முந்தைய மாத 250 தொகுப்புகளுக்காக பாராட்டு பெறல், ஆகஸ்டு 2014
  • அசத்தும் புதிய பயனர், விடாமுயற்சியாளர், தொடர் பங்களிப்பு (ஆகஸ்டு 2014), சைவ சமயப் பங்களிப்பு (அக்டோபர் 2014) ஆகியவற்றுக்கான பதக்கங்கள் பெறல்.
  • விக்கிகாமன்சில் முதல் படிமம் பதிவு, 15 செப்டம்பர் 2014
  • முதற்பக்கத்தில் “உங்களுக்குத் தெரியுமா?” பகுதியில் நான் ஆரம்பித்த/ மேம்படுத்திய சரபேந்திர பூபாலக் குறவஞ்சி (15 அக்டோபர் 2014), ஆதுர சாலை (29 அக்டோபர் 2014), கங்கா ஆரத்தி (நவம்பர் 2014), ஆழித்தேர் (17 ஜுன் 2015), தஞ்சைப் பெருவுடையார் கோயில் (20 ஜனவரி 2016) கட்டுரைகளிலிருந்து தகவல்கள் வெளிவரல்


  • முகப்புப்பக்கத்தில் பங்களிப்பாளராக அறிமுகமாதல், 1 நவம்பர் 2015
  • என் கணக்கு தற்காவல் பயனர் உரிமைக்கு மாற்றப்படல், ஜுலை 2016
  • வேங்கைத்திட்டம் வெற்றியாளர், 260 பதிவுகள், மூன்றாம் இடம், 2019
  • ஆசிய மாதம் வெற்றியாளர், 115 பதிவுகள், இரண்டாம் இடம், 2019
  • விக்கிப்பீடியாவில் 1000 பதிவுகள் நிறைவு, ஏப்ரல் 2020


  • ஆங்கில விக்கிப்பீடியாவின் முதல் பக்கத்தில், “Did You Know?” பகுதியில், நான் ஆரம்பித்த Thukkachi Abatsahayesvar temple கட்டுரையிலிருந்து வெளிவரல், 20 ஆகஸ்டு 2017
  • ஆங்கில விக்கிப்பீடியாவின் WikiProject India/The 10,000 Challenge (மே 1, 2020-ஜுலை 31, 2020) திட்டத்தில் கலந்துகொள்ளல்
  • ஆங்கில விக்கிப்பீடியாவில் முதன்முதலாக The Special Barnstar பதக்கத்தினைப் பெறல்
பதிவு அனுபவங்கள்


பேட்டிகள்/நாளிதழ் செய்திகள்


போட்டிகள்

நூல்


நிகழ்வுகள்/விக்கிப்பீடியா

நிகழ்வுகள்/பிற நிறுவனங்கள்
7.6.2026இல் மேம்படுத்தப்பட்டது.

27 May 2026

நூல் மதிப்புரை/Book Review

2013 டிசம்பர் தொடங்கி இவ்வலைப்பூவில் எழுதப்பட்டு வந்துள்ள நூல்களின் மதிப்புரை/அணிந்துரை/வாழ்த்துரை ஆகியவை பின்வருமாறு வகை படுத்தப்பட்டுள்ளன. அந்தந்த பக்கத்தைச் சொடுக்கி தேவையான பதிவை வாசிக்க வேண்டுகிறேன். பௌத்தம் தொடர்பான பிற மதிப்புரைகளுக்கான இணைப்பு பதிவின் இறுதியில் தரப்பட்டுள்ளது.

தொடர்ந்து, நிறைவாக என் மனைவி, எங்கள் மகன்களின் எழுத்துப்பணி தனியாக கீழே தரப்பட்டுள்ளது.

பன்னிரு திருமுறைகள் 

முதல் மூன்று திருமுறைகள்/ஞானசம்பந்தர் தேவாரம்
நான்காம் திருமுறை/திருநாவுக்கரசர் தேவாரம்
ஐந்தாம் திருமுறை/திருநாவுக்கரசர் தேவாரம்
ஏழாம் திருமுறை/சுந்தரர் தேவாரம்

நாலாயிரத் திவ்யப்பிரபந்தம்


அழகிரி விசுவநாதன்/மறதி வாழ்க (நாடகங்கள்)
அனந்தபுரம் கோ.கிருட்டினமூர்த்தி/செஞ்சி வேங்கடரமணர் கோயில்
அனந்தபுரம் கோ.கிருட்டினமூர்த்தி/தமிழ்நாட்டில் சமணம் (கி.பி.ஆறாம் நூற்றாண்டு வரை)
உட்கோட்டை பழனியப்பன்/எளிது எளிது ஐ.ஏ.எஸ் தேர்வு
கரந்தை ஜெயக்குமார்/அப்பா
கரந்தை ஜெயக்குமார்(கரந்தை சரவணன் உடன்)/உமாமகேசுவரம் 
கரந்தை ஜெயக்குமார்/கரந்தை மாமனிதர்கள்
கரந்தை ஜெயக்குமார்/சித்தப்பா
கலியுகன் கோபி/செம்மேகம்
கலைவாணி, இராச.,தமிழ்வேலு, சு./சிலப்பதிகாரத்தில் இசைக்கருவிகள்
கனிமொழி செல்லத்துரை/உயிர்சுருட்டி
கிரேஸ் பிரதிபா.வி,/துளிர் விடும் விதைகள் 
குடவாயில் பாலசுப்ரமணியன்/கலையியல் ரசனை கட்டுரைகள்
குடவாயில் பாலசுப்ரமணியன்/தஞ்சாவூர் (கி.பி.600-1850)
கும்பகோணம் ஆ.கோபிநாத்/வரலாறு கூறும் "திருநல்ல கூரூர்"
குருநாதன், இராம./போடோ சிறுகதைகள்
சமஸ் (தொ.ஆ.)/சோழர்கள் இன்று
செந்தில்நாயகம், கே., எஸ்.ஏ.சம்பத்குமார்/தமிழகத்தின் முன்னணி நூலகங்கள்
செல்வகுமார், மா./கும்பகோணம்-சுவாமிமலை அருகேயுள்ள கோயில்கள்
தில்லை கோவிந்தராஜன்(பதிப்)/விக்கிரம சோழனுலா 
துளசிதரன். வே./ தில்லைஅகத்து/காலம் செய்த கோலமடி
பார்த்திபன், வே./கல்லாகிப் போனவர்கள்
பாலசுப்ரமணியன், கு./அறம் பயில்வோம்
பாலசுப்ரமணியம், ஜி.எம்,/வாழ்வின் விளிம்பில் 
மங்கை ராகவன், சி.வீரராகவன், சுகவன முருகன்/தமிழகத்தில் லகுலீச பாசுபதம்
மணி.மாறன்/தஞ்சையும் அரண்மனையும்
மணி.மாறன்(மற்றும் பயிற்சி மாணவர்கள்)/தமிழ் மருத்துவ முறைகள்
மணிவண்ணன், க./சிற்பக்கலை
மைசூர் இந்திய மொழிகளின் நடுவண் நிறுவனம்+/தமிழ் நடைக் கையேடு
வேணுகோபாலன், எஸ்.வி./தர்ப்பண சுந்தரி
வேணுகோபாலன், எஸ்.வி./உதிர்ந்தும் உதிராத
ஜான் ஜெயக்குமார், ஆ./ஒளிவீசும் ஜெபமாலைபுரம் (கண்டதும் கேட்டதும்)
ஜோதிஜி/டாலர் நகரம் 


Benazir Bhutto/Daughter of the East
Charles Chaplin/My autobiography
Jawaharlal Nehru/Glimpses of world history 
Supraja Kannan/One minute birding 

-------------------------------------------------------------------------------------------
சோழ நாட்டில் பௌத்தம் வலைப்பூ
---------------------------------------------------------------------------------------------

-------------------------------------------------------------------------------------------
குடும்பத்தாரின் எழுத்துப்பணி
---------------------------------------------------------------------------------------------

நூல்கள்
பாக்கியவதி, ஜ.(மனைவி)/கோயில் உலா
பாக்கியவதி, ஜ./அப்பாவுக்காக... 
பாரத், ஜ.(மூத்த மகன்)/கடவுள்களுடன் தேநீர்
பாரத், ஜ./திண்ணை
பாரத், ஜ./மண் வாசனை
சிவகுரு, ஜ. (இளைய மகன்)/100 நூறு வார்த்தை கதைகள்
மறக்கமுடியா ஆவணப்பதிவு: 2020இல் எங்கள் வெளியீடுகள்



7.6.2026இல் மேம்படுத்தப்பட்டது.

13 May 2026

பேராசிரியர் இ.சுந்தரமூர்த்தி

தமிழ்ப் பல்கலைக்கழக மேனாள் துணைவேந்தர் பேராசிரியர் இ.சுந்தரமூர்த்தி அவர்கள் இயற்கை எய்திய செய்தி அறிந்து அதிர்ச்சியடைந்தேன்.


மிகவும் நிதானமான பேச்சு, நல்ல நிர்வாகம், ஆற்றொழுக்கான உரையாற்றல், பணியாளர்களுடன் கரிசனமாகப் பழகும் மாண்பு என்ற பல நிலைகளிலும் அவருடைய குணங்கள் போற்றத்தக்கதாகும்.

என்னுடைய "படியாக்கம்" (தாமரை பப்ளிகேஷன்ஸ் (பி) லிட், சென்னை, 2004) நூலுக்கு அணிந்துரை கேட்பதற்காகச் சென்றபோது என் எழுத்துப்பணியை வியந்து பாராட்டி ஊக்கம் தந்தவர். அவர் தந்த வாழ்த்துரை என் எழுத்துப்பணிக்குத் தூண்டுகோலாக அமைந்தது.

அவருடைய மேடைப்பேச்சுகளை ஆர்வமாகக் கேட்டதுண்டு. சங்க இலக்கியம் தொடங்கி இக்கால இலக்கியம் வரை எந்தப் பொருண்மையானாலும் செறிவாக, அனாயசமாக, தொய்வின்றி உரையாற்றுவார். தலைப்பையொட்டியே அவர் பேசும் விதம் சிறப்பாக இருக்கும். அவர் பேசும்போது நிகழ்விடத்திற்கு நம்மை அழைத்துச் சென்றுவிடுவார். அந்த அளவிற்கு இயற்கையாக அந்த உரை இருக்கும்.

விக்கிப்பீடியாவில் பதிவதற்காக அவரைப் புகைப்படம் எடுப்பதற்காகப் பெருங்குடி இல்லத்திற்கு 13.3.2022 அன்று சென்றபோது என்னுடைய தொடர் ஆய்வினையும் எழுத்துகளையும் பாராட்டினார். என் ஆய்வினைப் பற்றி விசாரித்தபோது "சோழ நாட்டில் பௌத்தம்" என்ற என்னுடைய நூலின் அச்சுப்பணி நடைபெற்றுவருவதைக் கூறினேன். அப்போது அவர் அதனை விரைந்து நிறைவேற்றும்படியும் அறிவுரை கூறினார்.

அன்னாரை இழந்து வாடும் குடும்பத்தாருக்கும், உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் என் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

(பதிவிலுள்ள புகைப்படம் என்னால் எடுக்கப்பட்டு தமிழ், ஆங்கில விக்கிப்பீடியாவில் இணைக்கப்பட்டதாகும். )

01 May 2026

பழைசை மழபாடியில் திருஞானசம்பந்தர்: பட்டீஸ்வரம் ஸ்ரீதேனுபுரீஸ்வரர் திருக்கோயில் கும்பாபிஷேக மலர் 1999

குடமுழுக்கு மலரில் வெளியான இரண்டாவது கட்டுரை. இதற்கு முன்னர் 1997இல் தஞ்சை இராஜராஜேச்சரம் திருக்குட நன்னீராட்டுப்பெருவிழா மலரில் என் கட்டுரை வெளியானது. 








-------------------------------------------------------------------------------------------
நன்றி: பட்டீஸ்வரம் ஸ்ரீதேனுபுரீஸ்வரர் திருக்கோயில் கும்பாபிஷேக மலர்
பதிப்பாசிரியர்: குடவாயில் பாலசுப்பிரமணியன்
-------------------------------------------------------------------------------------------