ஃபீடல் காஸ்ட்ரோவின் கட்டுரைகளைக்
கொண்ட Battle of Ideas: Reflections by Fidel Castro என்ற நூலை நான்கு மணி நேரத்தில்
படித்து முடித்தேன். 2009வாக்கில் முதன் முறையாகப் படித்தேன். அண்மையில் மறுபடியும் படித்தேன். இந்த மூன்று மாத காலத் தொகுப்புக் கட்டுரைகளில்
(28.3.2007 முதல் 30.6.2007 வரை) அவர், உலக நடப்பின் பொது நிலையை மிக சிறப்பாக முன்வைக்கிறார்.
காந்தியின் சத்தியசோதனை, நேருவின் உலக வரலாறு, அப்துல் கலாமின் அக்னிச்சிறகுகள் போன்ற
நூல்களில் காணப்படுகின்ற, வாசகரை உடன் அழைத்துச் செல்லும் நடையினை இந்நூலில் காணமுடிகிறது.
அவருடைய எழுத்து இளைஞர்களை ஊக்குவிக்கும் விவேகானந்தரின் எழுத்தினைப் போல உள்ளது. தன்
நாட்டுப் பல்துறை முன்னேற்றம், ஆதிக்க சக்தி எதிர்ப்பு உள்ளிட்ட பல நிகழ்வுகளை நம்
ஒவ்வொருவரின் வீட்டுப் பிரச்னைகளைப் போலத் துல்லியமாக அலசுகிறார். படிப்பவர் மனதில்
ஒரு எழுச்சியினை இவ்வெழுத்துக்கள் உண்டாக்குகின்றன. கட்டுரைகளைப் படிக்கும்போது சில
இடங்களிலும், இறுதிப்பகுதியிலும் நம்முடன் அவர் நேரிடையாக உரையாடுவதைப் போலுள்ளது.
வரலாற்று நாயகன், வரலாற்றின் மகன் என்று புகழப்படுகின்ற இவருக்கு இணை இவரே. அவருக்கு
மார்த்தியும், சேகுவாராவும் கிடைத்தது அவர் வரலாறு படைக்க உதவியாக இருந்தது என்பதில்
ஐயமில்லை. அவரது எழுத்துக்களில் சிலவற்றைக் காண்போம். அவருடைய கட்டுரைகளைப் படிப்போம்.
"நம் தோழர்களின் மனதினை நல்ல எண்ணங்களால் நிரப்பும் முயற்சியை மேற்கொள்ளவேண்டும். அப்போதுதான் அவர்கள் அவற்றை இளைஞர்களிடமும் பிறரிடமும் கொண்டுசேர்ப்பர்." (பக்கம் 21)
"உலகிலுள்ள பணக்கார மற்றும் ஏழை நாடுகள் அனைத்தும் இன்கேன்டசன்ட் பல்புகளுக்குப் பதிலாக ஃப்ளோரசன்ட் பல்புகளைப் பயன்படுத்தினால் அதிக எரிபொருளை மிச்சப்படுத்தமுடியும். க்யூபாவில் அனைத்து வீடுகளிலும் இவ்வாறான முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது." (ப.54)
"பள்ளியில் நாம் கற்றுக்கொள்ளும் சாதாரண கணக்கை நடைமுறை வாழ்வில் பயன்படுத்த கற்றுக்கொள்ளவேண்டும்." (ப.62)
"கணினித்துறையிலோ தகவல் தொழில்நுட்பத்திலோ அதிகம் முன்னேறாத காலகட்டத்தில் நிராயுதபாணியாக இருந்த மக்களின் மீது இரு அணுகுண்டுகள் வீசப்பட்டன. அரசியல் காரணங்களுக்காகவே இச்செயல் மேற்கொள்ளப்பட்டது." (ப.67)
"...உடல் நலனில் கவனம் வைக்காவிட்டால் சிக்கலே. பல்வேறு காலகட்டங்களில் உடல்நலனுக்கு நான் முக்கியத்துவம் கொடுக்கவில்லையோ என நினைக்கிறேன். இப்போதெல்லாம் எதைச் செய்யவேண்டுமோ அதை மட்டுமே செய்கிறேன். குறிப்பாக முக்கியமான பிரச்சினைகள் குறித்து எழுத ஆரம்பித்துள்ளேன். நான் செய்ய வேண்டியது நிறைய இருக்கிறது. புகைப்படங்களுக்காக என் முடியையும், தாடியையும் மீசையையும் சரி செய்வதற்கோ, தினமும் ஆடைக்கு முக்கியத்துவம் தருவதற்கோ எனக்கு நேரமில்லை. அவ்வாறு செய்ய ஆரம்பிக்கும்போது பேட்டிகள் கேட்டு அதிகமான வேண்டுகோள் எனக்கு வர ஆரம்பிக்கும். இப்போது என் உடல் நலன் தேறிவிட்டது....ஊடகங்களுடனும், தொலைக்காட்சி நிறுவனங்களுடனும் என் எண்ணப் பிரதிபலிப்புகளை மிகவும் சுருக்கமாக பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். மற்ற நேரத்தில் படிக்கிறேன், தகவல்களைப் பெறுகிறேன், தோழர்களுடன் பேசுகின்றேன், என் உடல் நலனுக்கு முக்கியத்துவம் தருகிறேன். எனக்குத் தெரிந்த அனைத்தையும் பேசவோ, குறை சொல்லவோ நான் விரும்பவில்லை. அவ்வாறு நான் செய்ய ஆரம்பித்தால் மனித உறவுகளும், உலகளாவிய உறவுகளும் பாதிக்கப்படும். அவர்கள் இல்லாமல் நாம் எதுவும் செய்துவிட முடியாது. எக்காலகட்டத்திலும் பொய்யை எழுதக்கூடாது என்பதில் மிகவும் உறுதியாக உள்ளேன்." (ப.98)
"க்யூபா ஆயிரக்கணக்கான இளைஞர்களுக்கு தற்போது மருத்துவர் பயிற்சியை அளித்து வருகிறது. ஆப்பிரிக்காவிலுள்ள ஒரு கிராமத்திலும்கூட ஒரு கியூப மருத்துவர் அந்த கிராமத்தையோ அருகிலுள்ள நகராட்சியையோ சேர்ந்த இளைஞர்களுக்கு சூரிய சக்தியின் உதவியுடன் செயல்படும் உபகரணங்களைக் கொண்டு கணினியின் துணையுடன் மருத்துவப் பயிற்சி அளித்துவருகிறார். அவ்விளைஞன் தன் ஊரைவிட்டு வெளியே செல்லவேண்டிய அவசியமில்லை. அவ்வாறே பெரிய நகரங்களுக்கு வந்து நகர வாழ்க்கையால் பாதிக்கப்படவேண்டிய அவசியமுமில்லை." (ப.126)
"ஷேக்ஸ்பியரின் நாடகமொன்றில் வாழ்வதா, சாவதா என்ற வசனம் வரும். இந்த மாதிரியான எண்ணம்தான் இப்போதைய இளைஞர்களிடம் காணப்படுகிறது. அவ்வெண்ணத்தை ஒதுக்கிவிட வேண்டும்....இளைஞர்கள் தோற்றுவிட்டால் அனைத்துமே தோற்றுவிடும் என்பதை மனதில் கொள்ளவேண்டும். க்யூப இளைஞர்கள் சூழலை நன்கு எதிர்கொள்வார்கள் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு. நான் அவர்கள் மீது நம்பிக்கை வைத்துள்ளேன்." (ப.140)
Cuba Newsஇன் முதன்மை ஆசிரியரான வால்ட்டர் லிப்மேன், காஸ்ட்ரோவைப் பற்றிக் கூறுகிறார். "காஸ்ட்ரோ மணிக்கணக்கில் பேசிகொண்டேயிருப்பார். இப்போது சில பத்திகள் எழுத ஆரம்பித்துள்ளார். அவருடைய ஒவ்வொரு வார்த்தையையும் நாங்கள் கவனமாகப் படிப்போம். உலகில் வேறு எந்தவொரு தலைவரும் ஃபீடல் காஸ்ட்ரோவைப் போல ஈர்க்கவில்லை. ஒரு பெரிய புரட்சிக்கு வித்திட்ட வகையில் அவர் அனைவருடைய கவனத்தையும், மரியாதையையும் பெற்றார். இப்போது அவர் க்யூ மட்டுமன்றி உலகிலுள்ள அனைத்து மக்களுக்கும் தன் எளிய, நேரிடையான, அருமையான சிந்தனைகள் மூலமாக பயிற்றுவிக்க ஆரம்பித்துள்ளார்."
Granmaவில் அவர் அண்மையில் எழுதிய கட்டுரை செப்டம்பர் 2014இல் வெளிவந்துள்ளது. கட்டுரையின் ஆரம்பமும், இறுதியில் அவரது கையொப்பமும் இதோ.
Battle of Ideas : Reflections by Fidel Castro, Part I (29 March to 30 June 2007), New Century Book House, 41B, Sidco Industrial Estate, Ambattur, Chennai 600 098, Phones: 26359906, 26251968, 2007, Rs.100
தமிழ் இந்து நாளிழின் ஆண்டுவிழாவினையொட்டி அவ்விதழைப் பற்றி நான் எழுதிய கடிதம் 27.9.2015இல் வெளியாகியுள்ளது. அதைப் பகிர்வதில் மகிழ்கிறேன்.
பதிவு, 29.9.2015இல் மேம்படுத்தப்பட்டது.