காவிரி புஷ்கர ஏற்பாட்டை காண்பதற்காக 4 செப்டம்பர் 2017 அன்று மயிலாடுதுறை துலாக்கட்டத்திற்குச் சென்றபோது காவிரியின் வட கரையிலும், தென் கரையிலும் உள்ள கோயில்களுக்குச் செல்லும் வாய்ப்பு கிடைத்தது.
மயிலாடுதுறையில் உள்ள ஏழு காசி விசுவநாதர் கோயில்களில் மூன்று கோயில்களுக்கு இப்பயணத்தின்போது சென்றேன். இதற்குமுன் தேவாரப்பாடல் பெற்ற, மயூரநாதர் கோயிலுக்கு நவம்பர் 2016இல் சென்றுள்ளோம். இப்போது இந்த நான்கு கோயில்களுக்கும் செல்வோம்.
1) வட கரை : காசி விசுவநாதர் கோயில்
காவிரி புஷ்கரத்திற்காகத் தயாரான துலாக்கட்டம்
மயிலாடுதுறையில் உள்ள ஏழு காசி விசுவநாதர் கோயில்களில் மூன்று கோயில்களுக்கு இப்பயணத்தின்போது சென்றேன். இதற்குமுன் தேவாரப்பாடல் பெற்ற, மயூரநாதர் கோயிலுக்கு நவம்பர் 2016இல் சென்றுள்ளோம். இப்போது இந்த நான்கு கோயில்களுக்கும் செல்வோம்.
1) வட கரை : காசி விசுவநாதர் கோயில்
காசி விசுவநாதர்-விசாலாட்சி
கன்வ மகரிஷியால் பூசிக்கப்பட்ட விஸ்வநாதர் என்ற பெருமையுடைய இக்கோயிலில் சிதம்பரத்து ரகசியம் யந்திர வடிவமாக உள்ளது. 16 செப்டம்பர் 2013 அன்று இக்கோயிலின் குடமுழுக்கு நடைபெற்றுள்ளது.
கன்வ மகரிஷியால் பூசிக்கப்பட்ட விஸ்வநாதர் என்ற பெருமையுடைய இக்கோயிலில் சிதம்பரத்து ரகசியம் யந்திர வடிவமாக உள்ளது. 16 செப்டம்பர் 2013 அன்று இக்கோயிலின் குடமுழுக்கு நடைபெற்றுள்ளது.
2) வட கரை : கேதாரநாதர் கோயில்
கேதாரநாதர்-கௌரி அம்மன்
மிகச் சிறிய அளவில் அமைந்துள்ள இக்கோயிலின் விமானம் வித்தியாசமான முறையில் அமைந்துள்ளது. அண்மையில் குடமுழுக்கு நடைபெற்றதை அறியமுடிந்தது.
மிகச் சிறிய அளவில் அமைந்துள்ள இக்கோயிலின் விமானம் வித்தியாசமான முறையில் அமைந்துள்ளது. அண்மையில் குடமுழுக்கு நடைபெற்றதை அறியமுடிந்தது.
3) தென் கரை : காசி விசுவநாதர் கோயில்
காசி விசுவநாதர்-விசாலாட்சி
தருமபுரம்
ஆதீனத்திற்குச் சொந்தமான இக்கோயில் லாடகம் என்னுமிடத்தில் அமைந்துள்ளது. ஐப்பசி
மாதம், துலா மாதப் பிறப்பு, துலா அமாவாசை,
கடைமுக தினத்தில் பஞ்சமூர்த்திகளுடன் எழுந்தருளி காவிரியில் தீர்த்தம் கொடுப்பதால்
சிறப்பு பெற்றது. ஏழு காசி விஸ்வநாதர் கோயில்களில் இக்கோயில்
முதன்மையான கோயிலாகக் கருதப்படுகிறது. கோயிலின் விமான அமைப்பு காசியில் உள்ளதைப் போன்று
உள்ளது.
4) தென் கரை : படித்துறை காசி விசுவநாதர் கோயில்
படித்துறை
விசுவநாதர்-விசாலாட்சி கோயில்
இந்து சமய அறநிலையத்துறை நிர்வாகத்தில் கீழுள்ள இக்கோயில் பாலக்கரையில் அமைந்துள்ளது. மூன்று நிலைகளைக் கொண்ட கோபுரத்துடன் உள்ளது.
மேற்கண்ட நான்கு கோயில்களும் பிற சிவன் கோயில்களைப் போன்ற அமைப்பில் உள்ளன. இவை துலாக்கட்டம் அருகே அமைந்துள்ளன.அனைத்து கோயிலும் விமானங்களுடனும், கோஷ்ட தெய்வங்களுடனும் காணப்படுகின்றன. வாய்ப்பு கிடைக்கும்போது தொடர்ந்து மயிலாடுதுறையிலுள்ள பிற காசி விசுவநாதர் கோயில்களுக்குச் செல்வோம்.

டெக்கான் க்ரானிக்கல் இதழில் 11 செப்டம்பர் 2017இல் வந்த செய்தியை இன்றுதான் கண்டேன், பகிர்வதில் மகிழ்கிறேன்.
"144 ஆண்டுகளுக்குப் பிறகு கொண்டாடப்படுகின்ற நிலையில் காவிரி புஷ்கரம் முக்கியத்துவம் பெறுகிறது என்று கும்பகோணத்தைச் சேர்ந்தவரும், தமிழ்ப்பல்கலைக்கழகத்தில் பணி நிறைவு பெற்ற உதவிப்பதிவாளருமான ஜம்புலிங்கம் கூறினார்." (நன்றி : டெக்கான் க்ரானிக்கல், 11 செப்டம்பர் 2017)
26 செப்டம்பர் 2017இல் மேம்படுத்தப்பட்டது.