அண்மையில் கும்பகோணம் சப்தஸ்தானத்தைப் பற்றி ஒரு பதிவில் பார்த்தோம். 3 சூன் 2016 அன்று மயிலாடுதுறை சப்தஸ்தானத்தில் ஒரு கோயிலான, கூறைநாட்டில் அமைந்துள்ள, புனுகீஸ்வரர் கோயிலுக்குச் செல்லும் வாய்ப்பு கிடைத்தது. இந்த சப்தஸ்தானத்தோடு தொடர்புடைய பிற கோயில்கள் பின்வருவனவாகும்.
இக்கோயில்களில் ஐயாறப்பர் கோயிலும், மயூரநாதர் கோயிலும் சென்றுள்ளேன். பிற கோயில்களுக்கு விரைவில் செல்லவுள்ளேன்.
தற்போது புனுகீஸ்வரர் கோயிலுக்குச் செல்வோம். அழகான ராஜகோபுரம் நம்மை வரவேற்கிறது. இரண்டு பிரகாரங்களுடன் கோயில் அமைந்துள்ளது.
மண்டப வாயிலின் முகப்பில் லிங்கத்தை புனுகுப்பூனை பூஜிப்பதைப் போன்ற சுதைச்சிற்பம் காணப்படுகிறது. முன்மண்டபத்தில் கொடி மரம் காணப்படுகிறது.கொடி மரத்தை அடுத்து பலிபீடமும், நந்தியும் உள்ளன.
அம்மன் சன்னதி
கோயிலின் வலப்புறம் அம்மன் சன்னதி உள்ளது. அருகே பள்ளியறையும் அலங்கார மண்டமும் காணப்படுகின்றன. அம்மன் சன்னதியின் முன்பாக பலிபீடமும் நந்தியும் உள்ளன. அம்மன் சன்னதியைச் சுற்றி வரும்போது சண்டிகேஸ்வரி சன்னதி உள்ளது.
மூலவர் கருவறை
- மயிலாடுதுறை ஐயாறப்பர் கோயில்
- சித்தர்காடு பிரம்மபுரீஸ்வரர் கோயில்
- மூவலூர் மார்க்க சகாயேஸ்வரர் கோயில்
- சோழம்பேட்டை அழகியநாதர் கோயில்
- துலாக்கட்டம் காசி விஸ்வநாதர் கோயில்
- மயிலாடுதுறை மயூரநாதசுவாமி கோயில்
இக்கோயில்களில் ஐயாறப்பர் கோயிலும், மயூரநாதர் கோயிலும் சென்றுள்ளேன். பிற கோயில்களுக்கு விரைவில் செல்லவுள்ளேன்.
தற்போது புனுகீஸ்வரர் கோயிலுக்குச் செல்வோம். அழகான ராஜகோபுரம் நம்மை வரவேற்கிறது. இரண்டு பிரகாரங்களுடன் கோயில் அமைந்துள்ளது.
மண்டப வாயிலின் முகப்பில் லிங்கத்தை புனுகுப்பூனை பூஜிப்பதைப் போன்ற சுதைச்சிற்பம் காணப்படுகிறது. முன்மண்டபத்தில் கொடி மரம் காணப்படுகிறது.கொடி மரத்தை அடுத்து பலிபீடமும், நந்தியும் உள்ளன.
அம்மன் சன்னதி
கோயிலின் வலப்புறம் அம்மன் சன்னதி உள்ளது. அருகே பள்ளியறையும் அலங்கார மண்டமும் காணப்படுகின்றன. அம்மன் சன்னதியின் முன்பாக பலிபீடமும் நந்தியும் உள்ளன. அம்மன் சன்னதியைச் சுற்றி வரும்போது சண்டிகேஸ்வரி சன்னதி உள்ளது.
மூலவர் கருவறை
மூலவர் புனுகீஸ்வரர் லிங்கத்திருமேனியாகக் காட்சியளிக்கிறார். மூலவர் கருவறைக்குச் செல்லும் முன்பாகக் காணப்படும் மண்டபத்தில் வரத விநாயகர், அனுமார், சோமாஸ்கந்தர், ஐயப்பன், 63 நாயன்மார்களில் ஒருவரான நேச நாயனார், சுப்பிரமணியர் ஆகியோர் சன்னதிகள் உள்ளன. கருவறைத் திருச்சுற்றில் சூரியன், பைரவர், கீழக்குமரர் எனப்படும் சுப்பிரமணியர் ஆகியோர் உள்ளனர். அருகே நவக்கிரக சன்னதி உள்ளது. அடுத்து 63 நாயன்மார்கள் உள்ள மண்டபம் காணப்படுகிறது. கருவறை கோஷ்டத்தில் பிரம்மா, அடிமுடி காணா அண்ணல், தட்சிணாமூர்த்தி, விநாயகர் உள்ளனர். அருகே சண்டிகேஸ்வரர் சன்னதி உள்ளது. வெளிப்பிரகாரத்தில் சனீஸ்வரன், விநாயகர் காணப்படுகின்றனர். அருகே லிங்கத்திருமேனி காணப்படுகிறது.
திருப்பணி
விரைவில் திருப்பணி நடைபெறவுள்ளதை அங்கு காணப்படுகின்ற ஏற்பாடுகளைக் கொண்டு அறியமுடிந்தது. ராஜகோபுரம், மூலவர் மற்றும் இறைவியின் விமானங்களில் மூங்கில் சாளரங்கள் போடப்பட்டு திருப்பணிக்கான ஆயத்தப் பணிகள் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன.
நன்றி:
கும்பகோணம் நண்பர் திரு செல்வம் பணிநிறைவு விழாவிற்காக மயிலாடுதுறை சென்றபோது இக்கோயிலுக்குச் சென்றோம். உடன் வந்த தாராசுரம் நண்பர் திரு நாகராஜனுக்கு நன்றி.
நன்றி:
கும்பகோணம் நண்பர் திரு செல்வம் பணிநிறைவு விழாவிற்காக மயிலாடுதுறை சென்றபோது இக்கோயிலுக்குச் சென்றோம். உடன் வந்த தாராசுரம் நண்பர் திரு நாகராஜனுக்கு நன்றி.