30 May 2026

சுயசரிதை

கும்பகோணத்தில் 2.4.1959இல் பிறந்து, அங்கேயே பள்ளி, கல்லூரிப்படிப்பை நிறைவு செய்து,  படித்த காலத்தில் பெற்ற தட்டச்சு, சுருக்கெழுத்து, ஹிந்தித் தேர்ச்சி போன்ற தகுதிகளுடன் பணியில் சேர்ந்து, பணி நிறைவு பெற்றது வரை எதிர்கொண்ட வாழ்க்கை அனுபவங்கள் சிலவற்றை அவ்வப்போது என்னுடைய வலைப்பூவில் எழுதியுள்ளேன். அவற்றை இங்கே வரிசைப்படுத்தி, முடிந்தவரை காலவாரியாகத் தந்துள்ளேன். என்னை சுயமதிப்பீடு செய்துகொள்வதற்கும், மேம்படுத்திக்கொள்வதற்கும் இப்பதிவு உதவுவதாக நம்புகிறேன். 

உறவுகள்

நினைவுகள்

விழாக்கள்

தட்டச்சு, சுருக்கெழுத்து


பணி/தமிழ்ப் பல்கலைக்கழகம்

சுய மதிப்பீடு

வாழ்க்கைக்குறிப்பு/முனைவர் பா.ஜம்புலிங்கம்

1959இல் கும்பகோணத்தில் பிறந்த இவர், தொடக்கக்கல்வி, மேல்நிலைக்கல்வி, கல்லூரிப்படிப்பினை முறையே கும்பேஸ்வரர் திருமஞ்சனவீதி ஆரம்பப்பள்ளி, அறிஞர் அண்ணா அரசு உயர்நிலைப்பள்ளி, அரசினர் ஆடவர் கல்லூரியில் நிறைவு செய்தார். முதுகலைப் படிப்பினைச் சென்னைப் பல்கலைக்கழகத்திலும், ஆய்வியல் நிறைஞர் ஆய்வினை மதுரை காமராசர் பல்கலைக் கழகத்திலும், முனைவர்ப்பட்ட ஆய்வினைத் தமிழ்ப் பல்கலைக்கழகத்திலும் மேற்கொண்டார்.

சென்னை, தஞ்சாவூர், கோயம்புத்தூரில் தனியார் நிறுவனங்களில் சுருக்கெழுத்தராகப் பணியாற்றினார். தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் சுருக்கெழுத்துத் தட்டச்சராகப் பணியில் சேர்ந்து, படிப்படியாக உயர்ந்து உதவிப்பதிவாளராகப் பணி நிறைவு பெற்றார்.

தனியாகவும், பிற அறிஞர்களோடு இணைந்தும் 20 புத்தர் சிலைகளையும், 13 சமண தீர்த்தங்கரர் சிலைகளையும், ஒரு நாகப்பட்டின புத்தர் செப்புத்திருமேனியையும் கண்டறிந்துள்ளார்.

புதுதில்லி, நேரு டிரஸ்ட் மூலமாக சோழ நாட்டில் பௌத்தம், திருவையாறு சப்தஸ்தானக் கோயில்கள் என்ற தனித்திட்டங்களையும், நெறியாளர் என்ற நிலையில் தஞ்சாவூர் மாவட்டத்தில் சமணம், சக்கராப்பள்ளி சப்தஸ்தானக் கோயில்கள் என்ற திட்டங்களையும் நிறைவு செய்துள்ளார்.

வாழ்வில் வெற்றி, படியாக்கம், விக்கிப்பீடியா 1000: பதிவு அனுபவங்கள் ஆகிய நூல்களையும், சக ஆய்வாளர்களுடன் இணைந்து தஞ்சையில் சமணம் என்ற நூலையும் எழுதியுள்ளார்.

மரியாதைராமன் கதைகள், பீர்பால் கதைகள், தெனாலிராமன் கதைகள், கிரேக்க நாடோடிக்கதைகள் ஆகிய நூல்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ளார்.

சோழ நாட்டில் பௌத்தம் என்ற ஆய்வு நூலைத் தமிழிலும் ஆங்கிலத்திலும் எழுதியுள்ளார்.

சிறந்த எழுத்தாளரான இவர், சோழ நாட்டில் பௌத்தம், முனைவர் ஜம்புலிங்கம் என்னும் இரு வலைப்பூக்களிலும், ஆய்விதழ்கள், பருவ இதழ்கள், நாளிதழ்கள் என அனைத்திலும் 600க்கும் மேற்பட்ட கட்டுரைகளை எழுதியுள்ளார். மேலும், தமிழ், ஆங்கில விக்கிப்பீடியாவிற்கு 1600க்கு மேற்பட்ட கட்டுரைகளை வழங்கியுள்ளார்.

தமிழ்நாடு பல்கலைக்கழகப் பணியாளர் சங்கக் கூட்டமைப்பின் சிறப்பு மலர், பன்னிரு திருமுறைச் சான்றோர் வாழ்வியல், மகாமகம் மலர் 2004, தஞ்சை இராஜராஜேச்சரம் திருக்குட நன்னீராட்டுப் பெருவிழா மலர் ஆகியவற்றில் மலர்க்குழு உறுப்பினராகப் பணியாற்றியுள்ளார்.

சித்தாந்த இரத்தினம், நிகரிலி சோழன், தகைசால் தமிழர், மும்முடிச்சோழன், ஆவணக்குரிசில், எழுச்சித்தமிழர் இலக்கிய விருது, அயோத்திதாசர் ஆதவன் விருது, அருமொழி சோழன் விருது உள்ளிட்ட பலla விருதுகளைப் பெற்றுள்ளார்.

படியாக்கம் நூலுக்காக மேனாள் இந்தியக் குடியரசுத்தலைவர் மேதகு ஆ.ப.ஜெ.அப்துல் கலாம் அவர்களிடமிருந்தும், சோழ நாட்டில் பௌத்தம் நூலுக்காக இந்தியக் குடியரசுத்துணைத்தலைவர் மேதகு சி.பி.ராதாகிருஷ்ணன் அவர்களிடமிருந்தும் பாராட்டுக் கடிதங்களைப் பெற்றுள்ளார்.

மின்னஞ்சல்: drbjambulingam@gmail.com/அலைபேசி: 9487355314

16.6.2026இல் மேம்படுத்தப்பட்டது.

No comments:

Post a Comment