தமிழ்ப்பல்கலைக்கழகத்தில் 16 ஆகஸ்டு 1982இல் பணியில் சேர்ந்து 34 வருடங்களை நிறைவு செய்து இன்று (16 ஆகஸ்டு 2016) 35ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறேன். தமிழ்ப்பல்கலைக்கழகத்தில் கிட்டத்தட்ட மூன்று மகாமகங்கள் பணியாற்றிய நிலையில் பல்துறையிலான கட்டுரைகள் உள்ளிட்ட 800க்கும் மேற்பட்ட பதிவுகளைப் பகிர்வதில் மகிழ்கிறேன்.
தனியார் நிறுவனங்களில் சென்னை (25.7.1979-11.9.1979 இன்டர்னேஷனல் ஓர் அண்ட் பெர்டிலைசர் இந்தியா பிரைவேட் லிட், சுருக்கெழுத்தர்), தஞ்சாவூர் (26.9.1979-4.8.1980 பார்ம் புராடக்ட்ஸ் பிரைவேட் லிட், தஞ்சாவூர், சுருக்கெழுத்துத்தட்டச்சர்), சென்னை (20.8.1980-16.11.1980 லாய்டு இன்சுலேசன்ஸ் இந்தியா பிரைவேட் லிட், சுருக்கெழுத்தர்), கோயம்புத்தூர் (17.11.1980-15.8.1982 டி ஸ்டேன்ஸ் அண்ட் கம்பெனி லிட், தட்டச்சர் எழுத்தர்) ஆகிய இடங்களில் பணியாற்றிவிட்டு, தமிழ்ப்பல்கலைக்கழகத்தில் தட்டச்சுச் சுருக்கெழுத்தாளராக பணியில் (பணியாளர் எண்.36) சேர்ந்து, பல துறைகளில் அங்கு பணியாற்றினேன்.
என்னை பௌத்தம் மற்றும் சமணம் (57), பிற துறைகள் (63), சிறுகதைகள் (40) தமிழ் விக்கிபீடியா (297), ஆங்கில விக்கிபீடியா (104) சோழ நாட்டில் பௌத்தம் (75), முனைவர் ஜம்புலிங்கம் (128), கண்டுபிடிப்பு பற்றிய நாளிதழ் செய்திகள் (152) என்ற நிலையில் 800க்கு மேற்பட்ட பதிவுகள்/கட்டுரைகள் எழுதவும், புத்தர் (16) மற்றும் சமணர் (13) சிலைகளைக் கண்டுபிடிக்கவும் களம் அமைத்துத் தந்த தமிழ்ப்பல்கலைக் கழகத்திற்கு என் மனமார்ந்த நன்றி.
தமிழ்ப்பல்கலைக்கழகத் துணைவேந்தர் முனைவர் சி.பாலசுப்பிரமணியன் (1989-1992) அவர்களின் நேர்முக உதவியாளராக (புகைப்படம் :16.8.1991)
- ஆய்வு தொடர்பாக மேற்கொண்ட களப்பணி, கலந்துகொண்ட கருத்தரங்குகள்
- களப்பணியின்போது கண்டெடுத்த புத்தர், சமண தீர்த்தங்கரர் சிலைகள் தொடர்பாக வெளியான நாளிதழ் செய்திகள்
- 1994 முதல் இன்று வரை எழுதியுள்ள கட்டுரைகள், அணிந்துரைகள், நூல் மதிப்புரைகள், தமிழ், ஆங்கில விக்கிப்பீடியாவில் ஆரம்பித்த பதிவுகள்
- 2008 முதல் பிரபல தமிழ் ஆங்கில இதழ்களில் வெளியான பேட்டிகள்
- 1998 முதல் பெற்ற சிறப்புப்பட்டங்கள், விருதுகள்
- சோழ நாட்டில் பௌத்தம் நூலுக்காகப் பெற்ற மதிப்புரைகள்
- 1993 முதல் கலந்துகொண்ட நிகழ்வுகள், கருத்தரங்குகள்
முதல் ஆய்வுக்கட்டுரை வெளியான இதழ் : தமிழ்க்கலை. மார்ச் 1994
முதல் ஆங்கிலக்கட்டுரை வெளியான இதழ் : Tamil Civilization. 1998
முதல் பேட்டி தமிழ் நாளிதழ் : தினமணி
முதல் பேட்டி ஆங்கில நாளிதழ் : Times of India
முதல் அணிந்துரை : மர்மவீரன் ராஜராஜசோழன், 2005
முதல் கண்டுபிடிப்பு செய்தி : தினமலர், 17.6.1999
முதல் சிறுகதை : குங்குமம், 9-15 சூலை 1993
------------------------------------------------------------------------------
நன்றி: வெளியிட்ட இதழ்கள்,
சக ஆய்வாளர்கள், அறிஞர்கள், குடும்பத்தார்
------------------------------------------------------------------------------
23.5.2026இல் மேம்படுத்தப்பட்டது.










இன்று காலை தமிழ்மணத்தில் ஒரு நல்ல செய்தி, உங்களிடமிருந்து. தமிழ்ப் பல்கலைக் கழகத்தில் 35 ஆண்டுகள் தொடர்ந்து பணியாற்றி வருகின்ற முனைவர் B. ஜம்புலிங்கம் அய்யா அவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள். தாங்கள் பல்கலைக் கழகப் பணியோடு பிற சமூகப் பணிகளும் செவ்வனே செய்திட, எல்லாம் வல்ல இறைவன் துணை நிற்க வேண்டும் என்று பிரார்த்தனை செய்து கொள்கிறேன்.
ReplyDeleteமேலே புகைப்படத்தில் உள்ள தமிழ்ப்பல்கலைக்கழகத் துணைவேந்தர் முனைவர் சி.பாலசுப்பிரமணியன் அவர்கள், முன்பு சென்னை பல்கலைக் கழகத்தில் தமிழ்த்துறைத் தலைவராக பணியாற்றியவர் என்று நினைக்கிறேன்.
பிரார்த்தனைக்கு நன்றி. நீங்கள் கூறும் அறிஞர் அவரேதான்.
Deletemore works are awaiting after retirement.this is a partial work.you will achieve more in future-librarian
Delete35ஆண்டுகாலப் பணி,இக்காலத்தில் எவராலும் நினைத்துப் பார்க்க இயலாத, வியப்பிற்குரிய, மலைப்பிற்குரிய செயல் ஐயா.
ReplyDeleteவாழ்த்துக்கள்
ஏதோ பிறந்தோம், வாழ்ந்தோம் மறைந்தோம் என்றில்லாமல் வாழ்வின் ஒவ்வொரு நொடியினையும் பயனுள்ளதாக, குறிப்பாக இச்சமூகத்திற்குப் பயனுள்ளதாகச் செலவிடும் தங்களின் முயற்சி போற்றுதலுக்கும் பாராட்டுதலுக்கும் உரியது.
நமது நாட்டின் சாபக்கேடு என்னவென்றால்,தங்களைப் போன்ற மனிதர்கள் உரிய அங்கீகாரம் பெறுவதில்லை.
பொறாமையும்,வஞ்சக மனமும் உள்ள மனிதர்கள் நிறைந்த இவ்வுலகில், சாதனையாளர்களுக்கு உரிய இடம் கிடைப்பதில்லை.
வாழ்த்துக்கள் ஐயா
தொடரட்டும் தங்களின் பணி
மனமகிழ்வோடு வாழ்த்துகின்றேன்
35 வருடப் பணி - மிகச் சிறப்பு ஐயா. மேலும் பல சிறப்புகள் உங்களை வந்தடையட்டும். மேலும் பல ஆக்கங்களை வெளியிட எனது வாழ்த்துகள்.
ReplyDeleteஉங்களின் அயராத பணிக்கு வாழ்த்த வயதில்லை ,வணங்குகிறேன் !
ReplyDeleteமுக்கியமான அலுவலகத்தின் முக்கியப்பணியில் இருந்துகொண்டே களஆய்வுகள், கட்டுரைகள், வலைப்பதிவுகள், விக்கிப்பீடியாக் கட்டுரைகள் மற்றும் சிறுகதைகள் என உங்களிடம் கற்றுக்கொள்ள அயராத உழைப்பும், ஆய்வு நோக்கும், அன்பான பகிர்வும் என எவ்வளவோ உள்ளன அய்யா! தலைவணங்குகிறேன். தங்களின் பணிகளை எழுத்தாளர் எஸ்.ரா.அவர்கள் நமது வலைப்பதிவர் விழாவில் புகழ்ந்து சொன்னபோது வியப்படையவில்லை. உங்களை நினைத்தே வியப்படைகிறேன். தொடரட்டும் உங்கள் தொண்டுகள். வணக்கம்.
ReplyDeleteமிகவும் பாராட்டுக்குரிய சேவை.
ReplyDeleteஅளப்பரியன செய்த தங்களுடன் நானும் தோழமை பூண்டுள்ளேன் என்பது மகிழ்ச்சிக்குரியது..
ReplyDeleteஎங்களுடைய அன்பின் உறவாகிய தங்களுக்கு மேன்மேலும் சிறப்புகள் வந்தெய்திட எல்லாம் வல்ல இறைவனிடம் வேண்டிக் கொள்கின்றேன்..
வாழ்க பல்லாண்டு..
தங்களின் சேவை தொடரட்டும் அய்யா.....
ReplyDeleteதமிழ்ப் பல்கலைக் கழகத்தில்
ReplyDeleteமுப்பத்தைந்து ஆண்டுகள்
தொடர்ந்து பணியாற்றி வருகின்ற
தங்களின் பணியைப் பாராட்டுகிறேன்!
தமிழ்ப் பற்று, வரலாறு எழுதுதல் என
இலக்கியப் பணி ஈடுபாடு என
விக்கிப்பீடியா, வலைப்பூ என
தங்கள் முயற்சிகளைப் பாராட்டுகிறேன்!
தங்கள் பணி தொடர வாழ்த்துகள்!
35 ஆண்டுகால பிரமிக்கத்தக்க சாதனையே வாழ்க வளமுடன்
ReplyDeleteமுனைவரின் பணி மென்மேலும் தொடர எமது மனமார்ந்த வாழ்த்துகள்
த.ம.6
35 ஆண்டுகளென்பது சாதாரணமானது அல்ல. பல்கலை வித்தகர் நீங்கள் சாதனைகள் தொடரட்டும் வாழ்த்துகள்
ReplyDelete35 ஆண்டுகால பணி என்பது பெரும் சாதனையே. அந்த அதீத பணியின் நடுவே 800 பதிவுகளை எழுதியிருப்பது அதைவிட சாதனை.
ReplyDeleteவாழ்த்துக்கள் அய்யா!
த ம 7
வணக்கம் சகோதரரே
ReplyDeleteதங்களின் சாதனைகள் மலைக்கச் செய்கின்றது. தங்களின் அயராத பணிகளின் நடுவே, 800 பதிவுகளையும் எழுதி சாதனை படைத்திருப்பது அறிந்தேன். தங்களைப் போன்றோர் என் தளம் வந்து வாழ்த்துக்கள் பல கூறி சென்றிருப்பது என்னை பெருமிதம் அடையச் செய்கிறது. மிக்க நன்றி!
தங்களை வாழ்த்த வயதும் தகுதியும் எனக்கு போறாது! எனவே வணங்குகிறேன்.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
உங்களின் உழைப்பும் ஊக்கமான தேடலும் புரிகின்றது! நல்லதொரு தொகுப்பு! வாழ்த்துக்கள்! தொடருங்கள்!
ReplyDeleteஅம்மாடி! தங்கள் அயராத அடக்கமான பணிகள் அசர வைக்கின்றன. ஒரு தட்டச்சு சுருக்கெழுத்தாளராகப் பணியில் சேர்ந்தவர் இந்தளவுக்கு உயர்ந்ததின் இரகசியம் புரிந்தது. உழைப்பின் வாரா உறுதிகள் உளவோ?..
ReplyDelete25 ஆண்டுகளுக்கு முன்பான புகைப்படத்தையும் அந்த இளைஞரின் தோற்றத்தையும் மறக்க முடியாது. இன்று அந்த இளைஞர் சாதனைப்படைத்து முன்னுதாரணமாகத் திகழ்பவர் என்பதையும் மறுப்பதற்கில்லை.. (முனைவர் சி. பாலசுப்ரமணியம் ஐயா எனக்கும் பழக்கமானவர்)
மர்மவீரன் ராஜராஜசோழன் -- புன்னகைக்க வைக்கும் தலைப்பு.
தலைப்புகளைப் படித்து முடித்த பொழுதே அந்த பிர்மாண்டம் மனத்தில் தேங்கியது. பெளத்தம் பற்றி சிறப்பு ஆய்வுகள் உங்களுக்கு வெல்லக்கட்டி போலும்!
நிறைய தெரிந்து கொள்ள ஆவல் உந்தித் தள்ளுகிறது!
நீங்கள் ஐம்பெருங்காப்பிய 'மணிமேகலை'யை உரைநடைப் புதினமாக வார்த்துத் தந்தால் எவ்வளவு
சிறப்பாக இருக்கும்?.. கற்பனையே கற்கண்டாக இனிக்கிறது!..
வாழ்த்துக்கள், அய்யா!
800 பதிவுகள்! மூன்று மகாமகங்கள் உழைப்பு! மலைப்பாக இருக்கிறது! தங்கள் சாதனையைப்போற்றுகிறேன்! மேன்மேலும் தங்கள் சாதனைகள் தொடர மனம் நிறைந்த வாழ்த்துக்கள்!!
ReplyDeleteDear Sir, best wishes - to continue your services in all the areas, work, research, writing, family, friends ......regards, T Ashok kumar, AP/SOME/SASTRA,(Automobile Lab In-charge)
ReplyDelete(thro' email: ashokkumar201@hotmail.com)
தங்கள் பணி வளரட்டும்.. வாழ்க்கை சிறக்கட்டும்..
ReplyDeleteகு.கி.கங்காதரன் (மின்னஞ்சல் வழியாக: gangadharan.kk2012@gmail.com)
9865642333
Best wishes for completing 35 years service in Tamil University. I wish to continue your service further. By S.Sudalaimuthu, Rtd SBT Manager,
ReplyDelete(thro' email: ssudalaimuthu@gmail.com)
வாழ்த்துக்கள்! தங்கள் பணி சிறக்கட்டும்! சிலம்பின் சொல்/(s)word of anklet என்ற புது நாடகம் உலக நாடக விழா பாரிசில் நடத்தவுள்ளேன். 35 ஆண்டுவிழா காண்கிறது எனது எழினி தமிழ்நாடு நாடகக்குழு!
ReplyDelete(மின்னஞ்சல் வழியாக: dr.ravindran.athencode@gmail.com)
my blessings to u mr. jambulingam. urself and mr. jayakumar have reached a position fir to start a printed magazine. u can join some big tamil journal and continue ur work successfully.
ReplyDeletedrtpadmanaban (drtpadmanaban@gmail.com)
வாழ்த்துக்கள்.Dr.R.Muralidharan, Thanjavur
ReplyDelete(மின்னஞ்சல் வழியாக: tumurali@gmail.com)
35ஆம் ஆண்டில் பல்கலைக்கழகப் பணியில் அடியெடுத்து வைக்கும் உங்களுக்கு என் அன்பு நிறைந்த நல்வாழ்த்துகள். -முனைவர் தி.நெடுஞ்செழியன்
ReplyDeleteமுன்னைப் பணியாளர், தமிழ்ப் பல்கலைக்கழகம்
(மின்னஞ்சல் வழியாக: tamilthinai@gmail.com)
வாழ்த்துக்கள். உங்கள் பணி தொடர இறைவனை வேண்டுகின்றேன். நட்புடன் பா.செல்வக்குமார்.
ReplyDelete(மின்னஞ்சல் வழியாக: jhrdt@rediffmail.com)
Dear Dr. Jambulingam, Very happy to hear from you that you have completed 34 years of your carrier in Tamil University and stepping into 35th year. I have great appreciation for your contribution to the Tamil society in terms of your translations and other write ups. I wish you live long to contribute more to the society and your name be inscribed in the history of Tamil. With best regards and warm greetings,
ReplyDeleteRAJENDRAN Dr. S. Rajendran
Professor in Linguistics
Centre for Excellence in Computational Engineering and Networking (CEN),Amrita University
Coimbatore 641 112
(thro' email: rajushush@gmail.com)
மிக்க மகிழ்ச்சி. மோகன்ராஜ் ஸ்தபதி
ReplyDelete(மின்னஞ்சல் வழியாக : kuberanicons@yahoo.com)
Respected sir, regards. wishes for completing 34 years in admin and accolades of academic research. your are inspiration to academic staff as well.
ReplyDeletemay many more come from your research.
thanks. Dr. P. Srinivasan, Associate Professor
School of Education, Central University of Tamil Nadu (thro' email: seenuthilaka@yahoo.com)
Thiruvarur 610005
Tamil Nadu
Dear Sir,Congrats. You inspire us !!!.
ReplyDeleteBalaji (thro' email: cryobalaji@gmail.com)
Congrats! With best regards,
ReplyDeleteN R Visalatchy. Telengana Museum, Director
(thro' email: nrvishal45@yahoo.co.in)
அடக்கமான அறிவுத்தேடலுக்கு என் கரம் தாழ்ந்த வாழ்த்துக்களும் நன்றிகளும் உங்களுக்கு என்றும் உண்டு. முத்துப்பாண்டியன் சென்னை.
ReplyDeleteதங்கள் சாதனைகள் பிரமிக்கவைக்கிறது
ReplyDeleteநீங்கள் பதிவராகத் தொடர்வதும்
எங்கள் இணைப்பில் இருப்பது கூட
நிச்சமாய் எங்களுக்கு வாய்த்த பெரும்பாக்கியமே
சாதனிகள் தொடர மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்
வணக்கம் முனைவர் ஐயா !
ReplyDeleteதங்கள் சாதனைகள் கண்டு வாயடைத்து நிற்கின்றேன்
சிறந்த சேவை ஐயா ! தோன்றிற் புகழோடு தோன்றுக என்னும் வள்ளுவனின் பொய்யா மொழிக்கு தாங்கள் உதாரணம் மென்மேலும் தங்கள் சேவை சிறக்க எல்லாம் வல்ல இறைவனை வணங்குகிறேன் வாழ்க நலத்துடன் !
தம +1
அன்புள்ள ஜம்புலிங்கம் சார்,
ReplyDeleteசில நாள்கள் கழித்து வாழ்த்துச் செய்தி அனுப்புவதற்கு மன்னிக்கவும். எனக்கும் இது பத்திரிகையாளனாக 35-வது ஆண்டு துவக்கம். மதுரைப் பதிப்பு தினமணியில் 04.08.1982-ல் உதவி ஆசிரியராகச் சேர்ந்தேன்.
1985-ல் சென்னைக்கு மாற்றலாகி வந்தேன்.
தமிழ் இந்து தொடங்கப்பட்ட நாளிலிருந்து இதில் பணி புரிகிறேன்.எனக்கும் இது 35-வது ஆண்டு.
உங்கள் சாதனை சாதாரணம் அல்ல பெரிய 'ஜம்ப்' என்றே மகிழ்கிறேன்.
உங்களுடைய பணியார்வமும் அனுபவமும் எல்லோருடனும் பகிரப்பட வேண்டும். நல்ல நூல் ஒன்றை எழுதி உங்கள் அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ளுங்கள். எல்லா நலனும் பெற்று நல்ல உடல், மன வளத்தோடு நீங்கள் வாழ இறைவனைப் பிரார்த்திக்கிறேன். உங்கள் குழாத்தில் என்னையும் சேர்த்துக் கொண்டமைக்கு மிக்க நன்றி.
அன்புடன், வ. ரங்காசாரி, தி இந்து, தமிழ் நாளிதழ்,
சென்னை, 21.08.2016
(மின்னஞ்சல் rangachari.v@thehindutamil.co.in வழி)
தங்கள் பணி மகத்தானது !வாழ்த்துகள்!
ReplyDeleteஅன்புள்ள முனைவர் ஜம்புலிங்கம் அவர்கட்கு
ReplyDeleteவாழ்த்துக்கள் !!
அன்புடன்,ம. திருமலை
(மின்னஞ்சல் thirumalai1953@gmail.com வழியாக)
வாழ்த்துக்கள் ஐயா...
ReplyDeletePaNiVaaNa VaNaKKaNGaL AiYaAa.!'
ReplyDeleteidHu aVVaLaVu iYalBaaNadHallaVae.,
NeeNGaL SeidHa tHoNdiRKKu
YeNNaaZHuM NalaM VaaZHa
YeNaNBaaNa VaaZHtHtHuKKaL.!'
May God BleSS You.!'
(மின்னஞ்சல் வழியாக : dongrydavid@gmail.com)
Congratulations.ramiah valliapapan
ReplyDelete(மின்னஞ்சல் வழியாக: rmvs1962@yahoo.com)
திரு பா.மதுசூதனன் (madhu31558@gmail.com வழியாக)
ReplyDeleteஅன்புளள நண்பர் ஜம்புலிங்கம் அவர்ளுக்கு,
தாங்கள் தமிழ்ப்பல்கலைக்கழகத்தில் 34 ஆணடுகள் பணியாற்றியமைக்கு முதற்கண் எனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். அலுவல் பணியில் இருந்து கொண்டு முனைவர் பட்டம் முடித்து, பல கருத்தரங்குகளில் கலந்து கொண்டு, பௌத்தம் தொடர்பான பல ஆய்வுகளும், ஆய்வுக் கடடுரைகளும் வெளிக் கொணர்ந்த தங்களது கடின உழைப்பிற்கு எனது பாராட்டுக்களைத் தெரிவித்துக்கொள்கிறேன். இது போன்று மேலும் மேலும் புதிய கணடுபிடிப்புககள் மேற்கொண்டு மேலும் புகழ் பெற வாழ்த்துகிறேன்.
அன்பன்,பா.மதுசூதனன்