11.12.2001இல் சென்னை, அனைத்திந்திய தமிழ் எழுத்தாளர் சங்கம் சார்பாக எட்டயபுரத்திலுள்ள பாரதியார் நினைவு மண்டபத்தில் நடைபெற்ற மகாகவி பாரதியாரின் 120ஆவது பிறந்த நாள் விழாவில் பாரதி பணிச்செல்வர் பட்டம் பெற்றேன்.
நிகழ்விற்கு எழுத்தாளர் சங்கத்தலைவர் கலைமாமணி விக்கிரமன் தலைமை வகித்தார். இலக்கியப் புரவலர் தினகரன் பட்டத்தை வழங்கினார். வரலாற்றறிஞர் அனந்தபுரம் கிருட்டினமூர்த்தி உள்ளிட்டோர் வாழ்த்துரை வழங்கினர்.
சித்தாந்த இரத்தினம் (திருவாவடுதுறை ஆதீனம், 1998), அருள்நெறி ஆசான் (தஞ்சாவூர், அருள்நெறி திருக்கூட்டம், 1998) ஆகிய விருதுகளைத் தொடர்ந்து இது நான் பெற்ற மூன்றாவது விருதாகும்.
இதுதொடர்பாக நாளிதழ்களில் செய்திகள் வெளியானது மனதில் நிற்கும் அனுபவமாகும்.
-------------------------------------------------------------------------------------------
நன்றி: அனைத்திந்தியத் தமிழ் எழுத்தாளர்கள் சங்கம், சென்னை
-------------------------------------------------------------------------------------------





No comments:
Post a Comment