12 June 2026

அறிவியல் துளி 1995, தமிழ் அகராதியியல் செய்தி மலர் 1998

மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் எம்பில் பட்ட ஆய்வினை மேற்கொண்டிருந்த காலகட்டத்தில் அனைத்திந்திய அறிவியில் தமிழ்க் கழகத்தின் சார்பாக வெளிவந்த அறிவியில் துளி இதழில் (வெளியிடுபவர் முனைவர் இராம.சுந்தரம், அறிவியல் தமிழ் வளர்ச்சித்துறை) "எலியைத் தின்னும் கிழப்புலி", "ஆண் குதிரை கருத்தரிக்கும்" (சனவரி 1995), "ஓட்டுநருக்கு நற்செய்தி" (மார்ச் 1996) போன்ற தலைப்புகளில் அறிவியல் தொடர்பாக சில துணுக்குகளை எழுதினேன். பின்னாளில் ஆய்வுக்கட்டுரைகள் எழுத இவை போன்ற பதிவுகள் உதவியாக இருந்தன.




அவ்வாறே, தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்ட ஆய்வினை மேற்கொண்டிருந்த காலகட்டத்தில் அனைத்திந்திய அகராதியியல் கழகத்தின் சார்பாக வெளிவந்த காலாண்டிதழான தமிழ் அகராதியியல் செய்தி மலர் இதழில் (வெளியிடுபவர் எச்.சித்திரபுத்திரன், இணைப்பேராசிரியர், அகராதியியல் துறை) வெளிவந்தது. அதில்   "சாமுவேல் ஜான்சன்" (சனவரி-சூன் 1998), "உலகப்பெரும் அகராதி" (சூலை-செப்டம்பர் 1998) என்ற தலைப்புகளில் பதிவுகள் எழுதியது நினைவில் நிற்கும் அனுபவமாகும்.   





மொழிபெயர்ப்பு, பொருள் என்ற நிலையில் சில குறைகள் இருக்க வாய்ப்புள்ளது. அக்காலகட்டத்தில் பல துறைகளில் எழுதவேண்டும் என்ற ஆர்வம் காரணமாக இவை எழுதப்பட்டவையாகும். பின்னர் கட்டுரைகள் எழுதுவதற்கு ஓர் ஆரம்பமாக இப்பதிவுகள் அமைந்தன.

-------------------------------------------------------------------------------------------
நன்றி: அறிவியல் துளி, தமிழ் அகராதியியல் செய்தி மலர்
-------------------------------------------------------------------------------------------
18.6.2026இல் மேம்படுத்தப்பட்டது.

1 comment: