16 June 2026

மாசு படியும் தாஜ்மஹால்

கோயம்புத்தூரில் 17-18.5.1996இல் தமிழக அறிவியல் பேரவை சார்பாக நடைபெற்ற , நான்காம் கருத்தரங்கில் ‘‘மாசு படியும் தாஜ்மஹால்’’ என்ற தலைப்பில் கட்டுரை வாசித்தேன். இது என்னுடைய இரண்டாவது அறிவியல் கட்டுரையாகும். தி இந்து நாளிதழிலிருந்தும், பல ஆங்கில நூல்களிலிருந்தும் தரவுகளைத் திரட்டி தமிழ்த் தட்டச்சுப்பொறியில் தட்டச்சு செய்தேன். தி இந்து நாளிதழில் வெளியான தாஜ்மஹால் தொடர்பான தலையங்கத்தில் வந்த முதல் சொற்றொடர் (Mumtaj would have gone into the footnote of History but for Taj Mahal) இன்னும் நினைவில் உள்ளது. துணை நின்ற நூல்களை கட்டுரையின் நிறைவுப்பகுதியில் அமைத்திருந்தேன். பின்னாளில் ஆய்வேட்டினை உருவாக்கும்போது இவை போன்ற உத்திகள் எனக்கு மிகவும் உதவின. கருத்தரங்க நாளில் வெளியான மலரில் ஆய்வுச்சுருக்கம் இடம்பெற்றது.











-------------------------------------------------------------------------------------------
நன்றி: தமிழக அறிவியல் பேரவை
-------------------------------------------------------------------------------------------

No comments:

Post a Comment