29 July 2026

முதுமுனைவர் வ.அய்.சுப்பிரமணியம் நூற்றாண்டு விழா: உலகத் தமிழர் பேரமைப்பு

தஞ்சாவூர், முள்ளிவாய்க்கால் முற்றத்தில் உலகத்தமிழர் பேரமைப்பின் சார்பாக 26.7.2026 அன்று தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் முதல் துணைவேந்தர் முதுமுனைவர் வ.அய்.சுப்பிரமணியம் அவர்களின் நூற்றாண்டு விழா, நிகழ்ச்சி நிரலில் கண்டபடி சிறப்பாக நடைபெற்றது. நிகழ்வில் ஒரு பார்வையாளராகக் கலந்துகொண்டு, கல்வியாளர்கள் உள்ளிட்ட பெருமக்களின் உரையைக் கேட்கும்  வாய்ப்பினைப் பெற்றேன். 

இரண்டு அமர்வுகள், பொது அரங்கு என்ற வகையில் நடைபெற்ற கூட்டத்தில் அன்னாரின் பல்துறைத் திறமைகளை பல்வேறு துறைகளைச் சேர்ந்த அறிஞர்களும், நண்பர்களும், துறைசார்ந்தோரும் எடுத்துக்கூறி பெருமைப்படுத்திய விதம் சிறப்பாக இருந்தது. அவரை நினைவுகூர்ந்தபோது அக்காலத்தில் நான் பணியாற்றிய நாள்கள் நினைவிற்கு வந்தன. பெருமுயற்சி எடுத்து இவ்விழாவினை நடத்திய உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் திரு பழ.நெடுமாறன் ஐயா அவர்களுக்கும், அவருடன் துணைநின்ற அனைத்து பெருமக்களுக்கும் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். 






நூற்றாண்டு விழா நினைவாக அதன் தலைவர் திரு பழ.நெடுமாறன் ஐயா அவர்களிடம் என்னுடைய "சோழ நாட்டில் பௌத்தம்" (புது எழுத்து, காவேரிப்பட்டிணம், 9842647101) நூலை வழங்கி, பௌத்தம் தொடர்பாக சில மணித்துளிகள் உரையாடும் வாய்ப்பினைப் பெற்றேன்.


விழாவின்போது, அக்காலத்தில் பணியாற்றிய சகப் பணியாளர்களுடன் [இ-வ: பா.செல்வபாண்டியன், வ.கோசலை (முதல் துணைவேந்தரின் உதவியாளர்), பா.ஜம்புலிங்கம், அர.கோபாலகிருஷ்ணன் (முதல் துணைவேந்தரின் நேர்முக உதவியாளர்), தி.நெடுஞ்செழியன்] உரையாடும் இனிய பொழுதாக அந்நாள் அமைந்தது. 




விழாவின்போது, அக்காலகட்டத்தில் துணைவேந்தர் செயலகத்தில் பணியாற்றிய திருமதி வ.கோசலை, திரு அர.கோபாலகிருஷ்ணன், திரு வடிவேலு ஆகிய மூவருக்கும் ஐயா பழ.நெடுமாறன் அவர்கள் சிறப்புச் செய்து பாராட்டினார். (நான் தட்டச்சு சுருக்கெழுத்தராக 16.8.1982இல் பணியில் சேர்ந்து பணியாற்றிக்கொண்டிருந்தேன்.)

நிகழ்வு நடைபெற்ற முள்ளிவாய்க்கால் முற்றம்







தொடர்புடைய பதிவுகள்

-----------------------------------------------------------------------------------
முதுமுனைவர் வ.அய்.சுப்பிரமணியம் நூற்றாண்டு (18.2.1926-29.6.2009)
-----------------------------------------------------------------------------------

No comments:

Post a Comment